Tuesday, December 31, 2013

HAPPY NEW YEAR-2014


பொதுத்தேர்வு எழுதுவோர் விவரம்: அடுத்த வாரம் வெளியாகிறது

 பொதுத் தேர்வு எழுதுவோர் விவரங்களை அடுத்த வாரம் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை 10.5 லட்சம் பேரும் எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

 
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.

குரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்

குரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது.
அரசு விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் நவ., 1ம் தேதி குரூப்-1 நிலையில் உள்ள காலி பணியிடங்களை கணக்கெடுக்க வேண்டும். பின் இரு பணியிடங்கள், பதவி உயர்வுக்கும், ஒரு பணியிடம் நேரடி நியமனத்திற்கும் என பிரித்து அதன்படி, பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 2004-05ம் ஆண்டு முடிய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அந்தந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அரசு முடிவெடுத்தது.

Monday, December 30, 2013

Collaborative Leavning through “ Conneting Class Room” across Tamil Nadu

NMMS 2012 FINAL INSTRUCTION


ALL SCHOOLS SHOULD ENSURE THAT THE BANK ACCOUNT No. WHICH OPENED FOR NMMS 2012 BY SELECTED STUDENTS MUST BELONG TO STATE BANK OF INDIA ONLY. 

THE SCHOOLS THOSE WHO ARE NOT SENDING NMMS 2012 SELECTED CANDIDATES PARTICULARS IN PRESCRIBED FORMAT YET , INSTRUCTED TO SEND IMMEDIATELY WITHOUT FAIL. MATTER MOST URGENT. FAILED SCHOOLS WOULD BE VIEWED SERIOUSLY.

Chief Educational Officer,
Coimbatore

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது.

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

ஏப்ரல் 26ம் தேதி குரூப்-1 தேர்வு நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 முதல்நிலை தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

 பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை, சி.டி.,களில் பதிவுசெய்து, அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Saturday, December 28, 2013

பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

Thursday, December 26, 2013

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

குழந்தைகள் தொடர்பான பிரச்னை: பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.

47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு பட்டதாரிகள், எந்தப் பணியையும் பெற முடியாமல், வேலையற்று இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Wednesday, December 25, 2013

உதவி பெறும் 3 பள்ளிகள் அரசிடம் ஒப்படைப்பு தொடர்ந்து நடத்த முடியாததால் நிர்வாகத்தினர் முடிவு

வால்பாறையில் உள்ள உதவி பெறும் 3 பள்ளி கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் பள்ளி நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.தொடக்க பள்ளிகள் கோவை மாவட்டத்தில் 1,341 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது

பார்வையற்ற பி.எட். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பதற்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவும், தேர்வுக்காக இலவச பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் பி.எட். படித்து விட்டு ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் பலர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, "ரெகுலர்" மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில் முடிவு வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்" ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதனால், பல லட்சம் ரூபாயை கொட்டிக் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tuesday, December 24, 2013

ஆஸ்திரேலியாவில் சிறப்பு ஒலிம்பிக்: சிவகாசி மாணவருக்கு 2ம் இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் சிவகாசி மாணவர்மோனிஸ் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
சிவகாசி ரிசர்வ் லையனை சேர்ந்த ராஜா, தங்கராதா தம்பதியினரின் 2வது மகன் மோனிஸ்,13. இவர், மூளை வளர்ச்சி குன்றியவர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "அகாப்ட்" என்னும் சிறப்பு பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை

"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி., நெட் தேர்வு 29ம் தேதி நடக்கிறது

யு.ஜி.சி., நடத்தும் நெட் தேர்வு சென்னையில் 13 மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில் விரிவுரையாளர்களுக்கான, "நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்" தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.  இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.

முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு

நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை 21ல், தேர்வு நடந்த நிலையில் தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவு அக்., 7ம் தேதி வெளியானது. வழக்கு காரணமாக தமிழ் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

Sunday, December 22, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.
கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.

பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம் புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Saturday, December 21, 2013

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும்

உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டுகின்ற தலைசிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

அதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு

பொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.

தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு முழுக்கா?

"அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை" என பள்ளிக் கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் 3ல் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், மார்ச் 26ல், 10ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.

ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித்துறைக்கு மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
வரும் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 26 முதல் ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்கின்றன. தேர்வின்போது, மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு வசதியாக இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

Friday, December 20, 2013

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

பொது நூலகத்துறை 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் விடைத்தாள் மதிப்பீடு முடிக்க நடவடிக்கை

லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்

மதுரை கிளையில் வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளதால், முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சைடிசம்பர்

நீலகிரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு காட்டுகின்றன. இதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலை, மாலை நேரங்களில் பள்ளி நேரம் தவிர்த்து, கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அரசு விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.

அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா நடந்தது.

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நாளை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
"சிபாகா" (கோவை பில்டர்ஸ் மற்றும் கான்ராக்டர்ஸ் அசோசியேஷன்) அமைப்பின் தலைவர் சேகர் கூறியதாவது: மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, அவர்களை ஊக்கப்படுத்தக் கூடிய அனைத்து விதமான செயல்களையும் சிபாகா செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பினை வழங்குகிறது. இதற்கு பொதுமக்கள் ஆதரவை சிபாகா கோருகிறது.

Thursday, December 19, 2013

பி.எட். தேர்வு: மாநில அளவில் திருவண்ணாமலை மாணவர் சிறப்பிடம்

திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர், பி.எட். தேர்வில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அண்மையில் பி.எட். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியரின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர் எம்.பிரபு, மாநில அளவில் 7-வது இடம் பிடித்துள்ளார்.

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு

இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது.
எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)
பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில், பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பள்ளிக்கு யானைகள் "விசிட்": சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

வால்பாறை அருகே, சுற்றுச்சுவர் இல்லாத துவக்கப்பள்ளிக்கு, யானைகள் அடிக்கடி விசிட் அடிப்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் 43 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், 8 நடுநிலைப் பள்ளிகளும், 9 அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளும், 2 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இது தவிர 5 அரசு நலப்பள்ளி, அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி உட்பட மொத்தம் 88 பள்ளிகள் செயல்படுகின்றன.

Wednesday, December 18, 2013

சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் வேலை வாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் 600 பேருக்கு வளாக நேர்முக தேர்வில் இந்த ஆண்டு சுமார் 181 நிறுவனங்களிடம் இருந்து 716 பணி வாய்ப்புகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்திய தொழில்நுட்ப கழகத்தின் துணைப்பதிவாளர்  லெப்டினன் கேனல் ஜெயக்குமார், கூறும் போது

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்

 தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

பதவி உயர்வை வெறுத்த ஆசிரியர்கள்: அவசர அழைப்பால் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்"கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்" என பதில் கொடுத்துள்ளனர்.

Thursday, November 14, 2013

HAPPY CHILDREN'S DAY

பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை

கூடலூர் பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக்கூடாது, என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என கூடலூர் நகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. சுகாதாரத் துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க, மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

Wednesday, November 13, 2013

வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட "மங்கள்யான்"

"மங்கள்யான்" செயற்கைக்கோள், வெற்றிகரமாக, ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, "மஙகள்யான்" செயற்கைக்கோள், தற்போது பூமியை, நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்ட பாதையின் உயரத்தை அதிகரிக்க, பல கட்டங்களாக பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை நடந்த, நான்காம் கட்ட முயற்சியில், குறிப்பிட்ட வேகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை,

குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு

குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை

ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

Friday, November 8, 2013

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்" மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர மொபைல் வேன் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக 10 வேன்களை கல்வித்துறை வழங்கி உள்ளது.

டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.

Thursday, November 7, 2013

செவ்வாய் கிரகத்தை அடைய மங்கள்யானுக்கு 10 மாதங்கள் ஏன்?

பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்" செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்" என "அறிவியல்புரம்" இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார்.

குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள்: காற்றில் பறக்கும் உத்தரவு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்" என 7,000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4% பேர் தேர்ச்சி

Tuesday, November 5, 2013

Equivalence of Degree

Equivalence of Degree – various educational qualifications
possessed by the candidates as equivalent to the courses offered by the various
Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued
.

கனமழை: புதுச்சேரி, கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக,புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதேப் போல் கனமழை காரணமாக,கடலூரில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டத்திற்கு வராத ஆன தலைமையாசிரியர்களுக்கு கண்டிப்பு

மதுரையில் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தலைமையாசிரியர்கள் "ஆப்சென்ட்" ஆனதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். மருத்துவ விடுப்பு எடுத்த தலைமையாசிரியர்களது சான்றிதழ்களை "மெடிக்கல் போர்டுக்கு" அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விருது பெற்ற நடுநிலைப் பள்ளி; மூடத்துடிக்கும் கல்வித் துறை

ஜி. தும்மலப்பட்டியில் பவள விழா கண்ட பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஜி. தும்மலப்பட்டியில் 1922 ஜூன் 26ல் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் ஆரம்பபள்ளி துவங்கப்பட்டது. 91 ஆண்டுகளான இப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து உள்ளது.

ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்

பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
பள்ளிகல்வித்துறை உத்தரவுப்படி மாவட்ட வாரியாக 9ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதற்கென விஞ்ஞானிகள் தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார்.

Monday, November 4, 2013

இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து கற்கும் மாணவிகள்

அமர்வதற்கு பெஞ்ச் இல்லாததால், அரசு பள்ளி மாணவிகள், தினமும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்போர், குறிப்பாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு இலவச சைக்கிள், பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை மட்டுமின்றி மாணவிகள் அமரும் வகையில் டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றையும் வழங்கி வருகிறது.

மாதிரி பள்ளிகள் குறித்த அரசு முடிவு: மாநில அரசின் உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தல்

மாதிரி பள்ளிகள் குறித்து டில்லியில் நடக்கும் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கல்வி அமைச்சர் பங்கேற்று மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Wednesday, October 30, 2013

மாணவர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும்: கல்வி அதிகாரி அறிவுரை

மாணவர்கள் காலை உணவை தவிர்த்தல் கூடாது. சத்தான உணவு உண்ணவேண்டும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.

10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்

மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

திருப்பூர் அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

அரசு பள்ளி மைதானத்தில் மரம் நடுவதற்காக குழி தோண்டியபோது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு

பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tuesday, October 29, 2013

குழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன?

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை காத்தல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் நூலகங்களில் உறுப்பினர்களாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு

மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நூலகத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றிருப்பது வளர்ச்சியையும், புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

"ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை"

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது" என கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் சிறுபான்மை பள்ளிகள் மீது புகார்

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரிடம், நேற்று புகார் அளித்தனர்.

பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Monday, October 28, 2013

குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்

தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லையில் மூத்த வக்கீல்கள் திருவுருவ படத்திறப்பு விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு இலவச நலத்திட்டப் பொருட்களைப் பாதுகாக்க பள்ளி அறைகள் ஆக்கிரமிப்படுவதை தடுக்க அரசு "குடோன்"களை ஏற்படுத்த வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாநில தனித்திறன் போட்டிகள்: பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள்

நெல்லையில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் திறம்பட பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நெல்லையில் நடந்தது.  6 முதல் 8ம் வகுப்பு வரை 9, 10 வகுப்புகள், 11, 12 வகுப்புகள் என 3 பிரிவு மாணவர்களுக்கு 11 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் பரிசுக்கு தகுதி பெற்றனர்.

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பருவ மழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் அடிப்படை தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துணை தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கான மார்க் சீட் வினியோகம் நேற்று துவங்கியது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களுக்கான மார்க்சீட் நேற்று முதல் துவங்கி வரும் 30ம் தேதி வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை

தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தோல்வியுற்ற பாடங்களை எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. தனித் தேர்வர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் அந்தந்த தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்.

Friday, October 25, 2013

இணையதளம் வழியாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய இணையதளப் பக்கத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பயிற்சி மையம் (எம்.எஸ்.எம்.இ.) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்

டி.என்.பி.எஸ்.,யால் நடத்தப்படும் குரூப் - 1  தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.
குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

சேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளிகளின் பட்டியல் தயார்

கோவை மாவட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க, 49 பள்ளிகளின் பெயர் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் மாவட்ட கல்வித்துறையால் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக் கல்வித் துறையில்,

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி

குமாரபாளையம் பகுதியில்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதிநகரில் உள்ள சைனிக் பள்ளியில் 2014 -15ம் ஆண்டுக்கான 6ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்" என, கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிணைக்க புதிய திட்டம்

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகக் கொண்ட பள்ளிகளை ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு (சி.இ.ஓ.,) உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தூதுவளை சூப், சோயா, சுண்டல்...

கோவை மாநகராட்சி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை டிசம்பரில் துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம்: ஆசிரியர் மன்றம் கோரிக்கை

ஆசிரியரின் உயிருக்கு, பாதுகாப்பு அளிக்கும் வகையில், சிறப்பு சட்டம் ஒன்றை, சட்டசபையில் கொண்டு வர வேண்டும்" என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் பொதுச்செயலர், மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில், இந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு கல்வி வளாகங்களில், போதிய பாதுகாப்பு இல்லை. மாணவர்களை கண்டித்தாலே உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவர் பயன் பெற "மொபைல் கவுன்சலிங் வேன்

நாமக்கல் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, "மொபைல் கவுன்சலிங் வேன்" வசதி துவக்கி வைக்கப்பட்டது.

Wednesday, October 16, 2013

அகவிலைப்படி - பழைய ஊதியத்தின் (5வது ஊதியக் குழு) அடிப்படையில் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஆணை வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க சான்றிதழ் சரிபார்த்தல் 22, 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்த்தல் பணி 22 மற்றும் 23–ந்தேதிகளில் 14 மாவட்டங்களில் நடக்கிறது.

15 ஆண்டுகளாக மூடப்பட்ட அரசுப்பள்ளி திறப்பு

பொள்ளாச்சி அடுத்த பாலமநல்லூரியில், 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த அரசு துவக்கப்பள்ளி, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் பாலமநல்லூர் பகுதியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வந்தது.

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக வத்திராயிருப்பு மாணவனுக்கு தேசிய விருது

சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்காக, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவனுக்கு, மத்திய அரசின் தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு விருது (இக்னைட்) வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகம் மற்றும் அதன் இணை நிறுவனமான தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு நிறுவனத்தின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதியால் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விருதுக்காக, இந்தியா முழுவதும் 20,836 கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

மாவட்ட பாஸ்போர்ட் மையங்கள் மூடல்: இணையதளத்தில் இனி விண்ணப்பிக்கலாம்

மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஸ்போர்ட் மையங்களில், வரும், 21ம் தேதி முதல், விண்ணப்பம் பெறுவது நிறுத்தப்படுகிறது.
வெளிநாடு செல்பவர்களுக்கு, மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் சார்பில், பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, தமிழகத்தில், 1953ம் ஆண்டு, சென்னை, சாஸ்திரி பவனில் பாஸ்போர்ட் மண்டல அலுவலகம் துவங்கப்பட்டது.

தேர்தல் பணியை புறக்கணிக்காதீர்: ஆசிரியர்களுக்கு அறிவுரை

லோக்சபா தேர்தல் பணியை, புறக்கணிக்கக் கூடாது" என ஆசிரியர்களுக்கு, பள்ளிகல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அடுத்தாண்டு மே மாதம் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கான பணிகளை, தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது. மாவட்ட வாரியாக தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த விபரம், கலெக்டர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பம், அனைத்து துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு வரை அனைவரும் பாஸ் திட்டத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ், 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி "அனைவரும் பாஸ்" என்ற திடத்திற்கு, பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

"மாணவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களை மேம்படுத்த வேண்டும்"

பள்ளியில் மாணவ, மாணவியருக்கு கல்வியறிவை போதிக்கும் ஆசிரியர்கள் அவர்களின் வாசிப்பு, எழுத்துத் திறன்களையும் அவ்வப்போது ஆய்வு செய்து, மேம்படுத்த வேண்டும்," என, தஞ்சை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து அறிவுறுத்தினார்.

மாணவர்களுக்கு ஆன்-லைன் மூலம் ஜாதி சான்று: முதன்மை செயலர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 29 ஆயிரம் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியில் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது," என, தமிழக வருவாய் துறை முதன்மை செயலர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

சிறந்த பள்ளிகள் தேர்வுப் பட்டியல் வெளியாவதில் தாமதம்: காத்திருக்கும் தலைமையாசிரியர்கள்

மாநிலம் முழுவதும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நிலவி வருவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கான ஒரு புதிய வெளிநாட்டுக் கல்விமுறை

ஒரு சராசரி இந்திய வகுப்பறையில், உரையாற்றுதல் பாணியிலான கற்பித்தல் முறையே, நடைமுறையில் உள்ளது. இம்முறையில், ஆசிரியர் பாடம் குறித்து விளக்குவதை மாணவர்கள் ஆழ்ந்து கவனித்து, குறிப்பெடுத்துக் கொண்டு, தேர்வெழுதி, அடுத்த நிலைக்கு செல்கிறார்கள்.

தனியார் பள்ளிகளுக்கே பொதுத்தேர்வு மையம்: அரசுப் பள்ளிகளுக்கு ஆர்வமில்லை

பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையம் அமைப்பதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.

மறதியை அதிகரிக்கும் உணவு வகைகள்: ஆய்வில் தகவல்

சத்தான உணவை, சரியான அளவு எடுத்துக்கொண்டால் உடலில் நோய்க்கு இடமில்லை. அனைத்து மருத்துவ முறைகளும் வலியுறுத்துவது இதைத் தான். இப்போதெல்லாம், எது கிடைத்தாலும் உட்கொள்வது வழக்கமாகி விட்டது. அதிலும் "பாஸ்ட் புட்" வகைகள் எந்த சுவையிலிருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.

மாணவர்களுக்கான சர்வதேச அடையாள அட்டை

மாணவர்கள் மாவட்டங்கள், மாநிலங்களை கடந்து நாடு விட்டு பிற நாடுகளுக்கு சென்று படிப்பது இன்று சாதாரண ஒன்றாகி விட்டது. எங்கு சென்றாலும் நமக்கானதொரு அடையாளம் தேவைப்படுகிறது.
எங்கு சென்றாலும் நமக்கானவற்றைப் பெறுவதற்கு, நம்மை மிகச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ளவும், சட்ட ரீதியான, சமூகப் பாதுகாப்பு, சலுகைகள் போன்றவற்றை பெறுவதற்கும் ஒரு அடையாள அட்டை தேவைப்படுகிறது.

சிறப்பு அனுமதி: குழந்தைகளை இன்று பள்ளியில் சேர்க்கலாம்

இன்று விஜயதசமி வழிபாடு என்பதால் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க அனுமதிக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் அங்கன்வாடி மையங்களில் பராமரிக்கப்படுகிறது.

மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த உத்தரவு: மெல்ல கற்பவர்களுக்கு "ஸ்பெஷல் கிளாஸ்"

பொதுத் தேர்வுக்காக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் படிப்பில் மெல்ல கற்பவர்களை அடையாளம் கண்டு "ஸ்பெஷல் கிளாஸ்" வகுப்புகள் நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

"எல்லா மொழியும் படியுங்க.... தாய்மொழியில் சிந்தியுங்க"

நாம் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், தாய் மொழியில் மட்டுமே சிந்திக்க வேண்டும்" என கல்லூரி விழாவில், பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார்.

"பகிர்தலில் இன்பம்" சம்பிரதாயம் அல்ல: ஆரம்பப்பள்ளி மாணவர்களின் "ஈகை"

ரத்த அணுக்கள் குறைவால் சிகிச்சை பெறும் சக மாணவருக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவர்கள்.
ஈகை மற்றும் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் மனப்போக்கை மாணவர்களிடையே உருவாக்கும் வகையில், அக்., 2 முதல் 8 ம் தேதி வரை, பள்ளிகளில் "பகிர்தலில் இன்பம் வாரம்" கொண்டாடப்பட்டது. வழக்கமாக, இதுபோன்ற உத்தரவுகள், பள்ளிகளில் சம்பிரதாயமான நிகழ்வாகவே இருக்கும். ஆனால், "நாங்கள் இளகிய மனம் கொண்டவர்கள். உதவும் குணத்துக்கா பஞ்சம்" என முன்னுதாரணமாக திகழ்கின்றனர், காரைக்குடி முத்துப்பட்டணம் நகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவர்கள்.
இங்கு, நான்காம் வகுப்பு படிக்கும் விக்ரம், 9, இரண்டு மாதமாக, ரத்த அணுக்கள் பற்றாக்குறையால், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவனது தந்தை, சுப்பிரமணியன், எலக்ட்ரீஷியனாக உள்ளார். விக்ரமின் சிகிச்சைக்காக, இப்பள்ளியில் 340 மாணவர்கள், 15 ஆசிரியர்கள் சார்பில், 30 ஆயிரம் ரூபாய் உதவி வழங்கினர்.
இதுகுறித்து, தலைமை ஆசிரியர் ஹேமலதா கூறியதாவது: "பகிர்தலில் இன்பம் வாரம்" கொண்டாட தீர்மானித்தபோது, விக்ரம் அவதிப்படுவது குறித்து, சக மாணவர்கள் கூறினர். அவனுக்கு உதவ நினைத்து, அனைத்து மாணவர்களிடமும் கூறினோம். மாணவர்கள், 100 முதல் 2,000 ரூபாய் வரை, வழங்க முன் வந்தனர்; ஆசிரியர்களும், உதவி செய்தனர். மொத்தம், 30 ஆயிரம் ரூபாய் வசூலானது.
இதை, விக்ரமின் தாய் லட்சுமியிடம், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், மூர்த்தி முன்னிலையில் மாணவர்களே வழங்கினர். தொடர்ந்து அந்த மாணவருக்கு மருத்துவ உதவி கேட்டு, பல்வேறு அமைப்புகளுக்கு, மாணவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.
அந்த மாணவருக்கு உதவ, 77089 57181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்"

தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்" கிடைத்துள்ளது.
அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு,

பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க அரசு புதிய உத்தரவு

அரசு பள்ளிகளில், 10, பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க, ஒன்றிய அளவில் குழு அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழு, தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கிய பள்ளிகளை ஆய்வு செய்து, அதற்கான காரணங்களை அறிந்து, அரசுக்கு தகவல் தர வேண்டும்.

Sunday, October 13, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியிட ஏற்பாடு

ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமான பணியில் ஈடுபட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: காரைக்குடி ஆசிரியர் 2ம் இடம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் மூர்த்தி, ஆங்கிலத்தில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு; அக்.25, 26ல் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில், பட்டதாரிகளுக்கு, அக். 25, 26ல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்த, சி.இ.ஓ.,க்களுக்கு, வாரியம் உத்தரவிட்டுள்ளது.

6 வயதில் சர்வதேச நீச்சல் போட்டி; நெல்லை மாணவி சாதனை

ஆறு வயதான பள்ளி மாணவி, சர்வதேச அளவில் சைப்ரஸ் நாட்டில் நடந்த நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்து சாதனை படைத்தார்.

பொதுத்தேர்வு கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ., பாணியில் மாற்றம்?

சி.பி.எஸ்.இ., பாணியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தீவிர ஆய்வு செய்து வரும், சி.பி.எஸ்.இ., முன்னாள் தலைவர், பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு, இம்மாத இறுதிக்குள், அறிக்கையை தயார் செய்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Friday, October 11, 2013

தமிழக அரசு ஊழியர் சம்பள உயர்வு பட்டியல்

நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்க வேண்டும்

நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களின் மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் அறிமுகம்

பள்ளி மாணவர்களுக்கான மன குழப்பத்தை போக்க நடமாடும் ஆலோசனை மையம் செயல்படவுள்ளது. முதற்கட்டமாக, இத்திட்டத்தில் பணிபுரியும் உளவியல் ஆலோசகர்களுக்கு சென்னையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ரசாயன துறைக்கான நோபல்: 3 விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிப்பு

ரசாயனத் துறைக்கான, நோபல் பரிசை இம்முறை, மூன்று பேர் கூட்டாகப் பெறுகின்றனர். மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக, இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர்

இடமாறுதலில் செல்ல மனமில்லாததால், பள்ளிக்கு பூட்டு போட்டு, மாணவர்களை தவிக்க விட்ட தலைமை ஆசிரியர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Thursday, October 10, 2013

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.72013 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-7-2013ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு



 
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வினை வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும்.

தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில், ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப் பாடங்களுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின் தேர்ச்சி சதவீதம் குறைகிறது. 

கல்வியில் பின்தங்கிய 8 மாவட்ட மாணவர்களுக்கு இலவச "நோட்ஸ்"

கல்வியில் பின்தங்கிய எட்டு மாவட்டங்களை சேர்ந்த, 10, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச நோட்ஸ் வழங்க" அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அளவில்,10,பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகளில், பின்தங்கிய மாணவர்களை ஊக்கப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க,அரசு உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம்,

நிதி பற்றாக்குறையால் ஆசிரியர்களுக்கான பயிற்சி குறைப்பு

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி இயக்ககம் இணைந்து, தொடக்கப் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுக்கு துவக்க நிலை, உயர்நிலை கற்பித்தல் குறித்த சிறப்பு பயிற்சிகளை அளிக்கிறது.

பேருந்தை சேதப்படுத்தியதால் திருக்குறள் எழுதிய மாணவர்கள்

மானாமதுரையில் நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த கல்லூரி மாணவர்களின் பெற்றோர் அபராதம் கட்டினர். தண்டனையாக மாணவர்கள் ஐந்து பேர், 10 திருக்குறளை 10 முறை எழுதினர்.

இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல்

பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Wednesday, October 9, 2013

28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த

தற்காலிக ஆசிரியர் பணி: தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை

பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.

பி.எட் படிப்பிற்கு அக்.,20ம் தேதி நுழைவுத்தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட் நுழைவுத்தேர்வுக்கு  விண்ணப்பிக்க அக்., 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: சக தேர்வர்களின் மதிப்பெண்களையும் பார்வையிடலாம்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,?

டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.

Tuesday, October 8, 2013

"SMART CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

தாற்காலிக அடிப்படையில் 6,545 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,645 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 3,900 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தாற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்திலும், பட்டதாரி

10ம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற ஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் : முதல்வர் உத்தரவு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்  கீழ் இயங்கும் 100 மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் திட்டத்தை அறிமுகப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

கற்றல் குறைபாடு கண்டறிய இன்று முதல்கட்ட தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கற்றல் குறைபாடுள்ள மாணவர்களை ஆரம்பநிலையில் கண்டறிய மாநில அளவிலான தேர்வு கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 பள்ளிகளில் இன்று நடக்கிறது. மாநிலம் அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் இரண்டு மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வுகள் நடக்க உள்ளன.

அனுமதி இல்லாத பள்ளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்: இயக்குனர் எச்சரிக்கை

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர், பிச்சை எச்சரித்தார். மூன்று மாவட்ட மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கூட்டம், திண்டுக்கல்லில் நடந்தது.

மதுரையில் 54 மடிக்கணினிகள் மாயம்: கல்வித்துறை உத்தரவால் திருப்பம்

மதுரையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், அரசின் 54 இலவச மடிக்கணினிகள் மாயமான சம்பவத்தில், கல்வித் துறை பிறப்பித்த திடீர் உத்தரவால், திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Monday, October 7, 2013

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: 2013-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு தேர்வுக்குழுத்தலைவர் கோரன் ஹான்சன், ஸ்வீடனில்அறிவித்தார். இதில் மருத்துவத்துறைக்காக சிறந்த சேவை செய்ததற்காக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ரோத்மேன், ராண்டி செக்மேன், சுடோஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Click Here

மாவட்ட கல்வி அதிகாரிகளை நேரடியாக நியமிக்க சிறப்பு தேர்வு

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக நிர்வாகப் பணிகளையும் கல்வி அதிகாரிகள் கவனித்துக் கொள்கிறார்கள். பள்ளிக் கல்வித் துறையில் நேரடியான நுழைவுப் பணியாக மாவட்ட கல்வி அதிகாரி பதவி உள்ளது.இந்த பதவி 75 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், எஞ்சிய 25 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது.

முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: கடந்த ஜூலை மாதம் நடந்த முதுநிலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இம்முடிவுகளை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். 
 


Click Here

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013-TENTATIVE ANSWER KEY


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
TENTATIVE ANSWER KEY
Tamil Geography Telugu
English Economics  
Mathematics Commerce  
Physics Political Science  
Chemistry Home Science
Botany Physical Education Director Grade I  
Zoology Micro - Biology  
History Bio - Chemistry  
          

பள்ளி மாணவியருக்கு இலவச விடுதி வசதி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் துவக்கப்பட்டுள்ள மாணவியர் விடுதிகளில் சேர்க்கை நடந்து வருகிறது.
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ், கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மாதிரி பள்ளி, மாணவியர் விடுதி உள்ளிட்டவை துவங்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 12 ஒன்றியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 12 மாதிரிப்பள்ளி துவக்கப்பட்டுள்ளன.
தற்போது, இந்த ஒன்றியங்களில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவியர் தங்கும் வகையில், இலவச விடுதி கட்டுவதற்கு தலா 2.35 லட்சம் ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விடுதி கட்டி முடிக்கும் வரை, தற்காலிக கட்டிடங்களில், விடுதியினை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட கேரம் போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கேரம் போட்டிகள் அக்டோபர், 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8 மணி முதல் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

ரூ.15 ஆயிரம்: அரசினால் வழங்கப்பட்ட இலவச "லேப்டாப்" விலை

தமிழக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழங்கும் இலவச "லேப்டாப்" வெளிமார்க்கெட்டில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு "UNDERSTANDING SIMPLE SCIENCE CONCEPTS THROUGH EXPERIMENTS & PROJECTS" - 12.10.2013- CRC-SCIENCE MODULES

தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு

தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ,
மாணவியர் படிக்கின்றனர். 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம்  துவக்கப்பட்டது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகளில், தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத்தேர்வுக்கு மறுதேர்வு நடத்த நீதிமன்றம்  உத்தரவிட்டபோதும் மறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்முறையீடு செய்தால் முதுகலை தமிழ் ஆசிரியர் நியமனம்  தள்ளிப் போகும்  நிலை ஏற்படும் எனத் தெரிகின்றது.



அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

அதிக புத்தகங்கள் படிக்கும் மாணவர்களை பாராட்டி, ஊக்குவிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வாசிப்புத் திறன் மிகவும்மோசமாக உள்ளதாகவும், எஸ்.எஸ்.ஏ., மூலம் வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தாமல் இருப்பதாகவும், புகார் எழுந்தன.

Sunday, October 6, 2013

கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி

சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களுக்கு கணித பாடத்தை எளிதாக கற்பிப்பது தொடர்பான 2 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கோவையில் எப்போது யு.பி.எஸ்.சி., முதல்நிலை தேர்வு மையம்?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, பல முக்கிய பதவிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. சிவில் சர்வீஸ் போட்டி தேர்வுகளை எழுத, சமீப காலமாக இளைஞர்கள், இளம் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

வனத்தை காக்க பசுமை போராளிகள்: கணித பேராசிரியரின் முயற்சி

மாநிலம் முழுவதும், 2 லட்சம் மாணவர்களை, பசுமை போராளிகளாக உருவாக்கி, அதன் மூலம் வனங்களை காக்கும் பணியில், ஈரோட்டை சேர்ந்த முன்னாள் கணித பேராசிரியர் ஈடுபட்டுள்ளார்.

குருப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பம்: டி.என்.பி.எஸ்.சி., தலைவர் தகவல்

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு முடிவை, டி.என்.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்டது. மேலும், குரூப் 2 தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.

பணியிடம் நிர்ணயம்: ஆசிரியர்கள் கலக்கம்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டு, இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Friday, October 4, 2013

அகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர் -தொடக்க ஆசிரியர்களுக்கு "SOCIAL AWARENESS AND CYBER SAFETY" என்ற தலைப்பில் 19.10.13 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 26.10.13 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் வட்டார வள மையப் (BRC) பயிற்சி நடத்த உத்தரவு

2013-14 கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப்பயிற்றுநர்கள் ஆகியோர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் இணைந்து பணியிடைப் பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.


முதுநிலை தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 2 அரசுப் பள்ளிகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் அறிமுகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் இரண்டு அரசுப் பள்ளிகளில் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தை உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் 84 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் 84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் கடந்த கல்வி ஆண்டில் (2012-13) எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் சேர்ந்த 3,900-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதினர்.

தொலைதூரக் கல்வி முறையில் முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதித் தேர்வு முடிவுக்கு காத்திருப்போர் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தொடக்க பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்காக காத்திருப்போரும் விண்ணப்பிக்கலாம் என, மத்திய தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

வகுப்பை புறக்கணித்த பள்ளி மாணவர்கள்: அதிகாரிகளை விரட்டிய தலைமை ஆசிரியை

போச்சம்பள்ளி: அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவ, மாணவியர் வகுப்புகளை புறக்கணித்தனர். பேச்சு வார்த்தை நடத்த வந்த, தாசில்தார் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலரை, தலைமை ஆசிரியை ஆவேசமாக பேசி, பள்ளியை விட்டு வெளியேறும்படி கூறியதால், பதற்றம் உருவானது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழககல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை ஜெயலலிதா உத்தரவு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், கல்வியைத் தொடர முடியாத  இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு  கல்விக்கான மற்றுமொரு வாய்ப்பை அளிப்பதுடன் அவர்களது  ஆளுமையின் வளர்ச்சிக்கு உதவி செய்து, சமுதாய மேம்பாட்டிற்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் துணை புரியக் கூடிய சமுதாயக் கல்லூரிகளை நடத்தி வருகிறது.  

குரூப்_2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகின்றது.

Thursday, October 3, 2013

PFRDA ACT 2013 - மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்ட மசோதாவின் சட்ட விவர தொகுப்பு

THE PENSION FUND REGULATORY AND DEVELOPMENT
AUTHORITY BILL, 2013

CPS - PFRDA ACT GAZETTE NOTIFICATION REG ORDER CLICK HERE...

ஓய்வூதியம் - 01.06.1988 முதல் 31.12.1995 வரை ஒய்வு பெற்றவர்களுக்கு, அகவிலைப்படியை அகவிலை ஊதியமாக வழங்க வெளியிடப்பட்ட அரசாணைக்கு தெளிவுரை வழங்கி உத்தரவு

குரூப் 1 தேர்வு: வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 1 தேர்வர்களுக்கான வயது வரம்பை 45 ஆக அதிகரிக்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

குரூப்-2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச பொருட்கள்: பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை

மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களை, நேரடியாக பள்ளிகளுக்கே அனுப்பி, வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கட்டாய கல்வி ஒதுக்கீட்டில் கட்டணம் வழங்க இழுபறி: அதிகாரிகள் மவுனம்

கட்டாய கல்வி உரிமை சட்ட இடஒதுக்கீட்டு முறைப்படி, தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு முதல் கட்ட கட்டணத் தொகை குறித்த விவகாரத்தில், கல்வித்துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். இதனால், எதிர்காலத்தில் இத்திட்டத்தின் செயல்பாடு கேள்விக்குறியாகியுள்ளது.

பெரம்பலூரில் ஆசிரியர் காலிப்பணியிடம்: மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 35 அரசு மேல்நிலைப் பள்ளியும், ஒரு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியும், 38 அரசு உயர்நிலை பள்ளியும், 4 ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியும் உள்ளன.

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு

காலாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின், மாநிலம் முழுவதும், இன்று மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன. மாணவ, மாணவியருக்கு, 2ம் பருவ புத்தகங்கள், இலவசமாக வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கனவாகும் மாணவர் "சிறப்பு கட்டணம்": இழுத்தடிக்கும் கல்வித்துறை

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கட்டணத்தை (ஸ்பெஷல் பீஸ்), இரண்டாண்டுகளாக வழங்காமல் கல்வித் துறை இழுத்தடிக்கிறது.
தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2008ம் ஆண்டுக்கு முன் மாணவர்களிடம் நேரடியாக சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த முறை ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கான சிறப்பு கட்டணத்தை அந்த பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித் துறையே வழங்கும் என்று உத்தரவிட்டப்பட்டது.

Wednesday, October 2, 2013

அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள CRC - Proceeding

கம்ப்யூட்டரில் ‘ஸ்கைப்’ மூலம் வெளிநாட்டு மாணவர்களுடன் உரையாடும் வசதி தமிழக அரசு பள்ளிகளில் விரைவில் அமல்


கம்ப்யூட்டர் வசதியை பயன்படுத்தி ஸ்கைப்’ மூலம் வெளிநாட்டு மாணவர்களுடன் பேசும் வசதி தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.மாணவர்களுக்கு சலுகைகள்தமிழ்நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிக

தேர்வு பயம், மன அழுத்தம் ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு

மாணவர்களின் தேர்வு பயம், மன அழுத்தம் உள்ளிட்டவற்றைப் போக்க ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசனைக் குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

அனைத்து ஆசிரியர்களும், 2016 க்குள், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டுமென, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டதால், தனியார் பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வர் பிரச்னையால் பள்ளி விவர சேகரிப்பு பணியில் தேக்கம்

பள்ளி விவரம் சேகரித்து, ஆன்-லைனில் பதிவேற்றும் பணியில், சர்வர் பிரச்னையால், பல மடங்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

முதுகலை தமிழ் தேர்வு ரத்து எதிரொலி: டி.ஆர்.பி., நாளை அவசர ஆலோசனை

முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வை ரத்து செய்து, உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதை அடுத்து, டி.ஆர்.பி., அதிகாரிகள், நாளை காலை ஆலோசனை நடத்துகின்றனர்.

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம்

மதுரையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய பின், சம்பந்தப்பட்ட மாணவரின் விண்ணப்பத்தை நிராகரித்து தேர்வுத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இது, தனித்தேர்வாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, October 1, 2013

ஆசிரியர் வாரியத்திற்கு கோர்ட் உத்தரவு

முதுநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு கடந்த ஜூலை 21-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தமிழ் தேர்வு நடந்தது. இதில் டி. பிரிவில் 47 கேள்விகளில் எழுத்துப்பிழை இருப்பதாக கூறியும், மறு தேர்வு நடத்திட உத்தரவிட கோரியும், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்ப்டடது. இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை, மறுதேர்வு நடத்திட ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன






Type your Register Number and Click 'Results'.
 
Results of MAY 2013 School of Distance Education examinations(All UG Courses)

குரூப்-1 தேர்வு எழுதும் வயது வரம்பை உயர்த்தவேண்டும் அரசுக்கு பட்டதாரிகள் கோரிக்கை


குரூப்-1 தேர்வு எழுதுவதற்கான பட்டதாரிகளின் வயது வரம்பை உயர்த்தவேண்டும் என்றும், வருடந்தோறும் நடத்தவேண்டும் என்றும் அரசுக்கு பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலூர் எஸ்.பொன்னம்பலம், காட்டுமன்னார்கோவில் தேன்மொழி, தர்மபுரி கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பட்டதாரிகள் தமிழக முதல்-அமைச்சர்





Monday, September 30, 2013

தமிழ்நாட்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள்தொடங்க அரசு உத்தரவு

1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும். 1-வது முதல் 8-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகள் ஆகும். இந்த தொடக்கப்பள்ளிகள் பல கிராமப்புறங்களில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் 23 ஆயிரத்து 815 உள்ளன. இந்த பள்ளிகளில் 15 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 7 ஆயிரத்து 307 நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 12 லட்சத்து 70 ஆயிரம் மாணவ&மாணவிகள் படிக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு

புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆராய்ச்சி மாணவருக்கு "நாசா" ஆய்வு மையம் அழைப்பு

சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவரும், கம்பத்தை சேர்ந்தவருமான சலீம்கானுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.

நெருங்கும் கேட் தேர்வு - நீங்கள் தயாரா?

இந்தியாவின் 13 ஐ.ஐ.எம்.,களில் மொத்தமுள்ள 3,000 இடங்களில், எப்படியாவது ஒன்றில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே, சி.ஏ.டி., தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவரின் ஏக்கமாக இருக்கிறது.
எனவே, அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும் கேட் தேர்வை, நல்லபடியாக எழுத வேண்டும் என்ற பதைபதைப்பில் தற்போது மாணவர் உலகம் இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் நிலை குறித்து சர்வே

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

Sunday, September 29, 2013

10 ம் வகுப்பு நேரடி தனித்தேர்வர்களுக்கு செய்முறை வகுப்புக்கு பதிவு செய்ய வாய்ப்பு


அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு

அனைவருக்கும் மேல்நிலை கல்வித் திட்டம்: நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல்

அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் (சிஏபிஇ) நியமித்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில உயர் கல்வித் திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யும் வகையில் அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த 2012 நவம்பரில் சிஏபிஇ ஒப்புதலும் அளித்தது.

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

டி.என்.பி.எஸ்.ஸி குரூப்-2 தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் சென்னையில் சனிக்கிழமை(செப்.28)நடைபெறுகிறது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்க உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி

கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர்.

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.