Monday, September 30, 2013

தமிழ்நாட்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள்தொடங்க அரசு உத்தரவு

1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும். 1-வது முதல் 8-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகள் ஆகும். இந்த தொடக்கப்பள்ளிகள் பல கிராமப்புறங்களில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் 23 ஆயிரத்து 815 உள்ளன. இந்த பள்ளிகளில் 15 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 7 ஆயிரத்து 307 நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 12 லட்சத்து 70 ஆயிரம் மாணவ&மாணவிகள் படிக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு : முதல்வர் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப உத்தரவு

புதிதாக துவங்க உள்ள 54 தொடக்க பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள," கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக ஆராய்ச்சி மாணவருக்கு "நாசா" ஆய்வு மையம் அழைப்பு

சென்னை அண்ணா பல்கலை ஆராய்ச்சி மாணவரும், கம்பத்தை சேர்ந்தவருமான சலீம்கானுக்கு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அழைப்பு விடுத்துள்ளது.

நெருங்கும் கேட் தேர்வு - நீங்கள் தயாரா?

இந்தியாவின் 13 ஐ.ஐ.எம்.,களில் மொத்தமுள்ள 3,000 இடங்களில், எப்படியாவது ஒன்றில் இடம்பிடித்துவிட வேண்டும் என்பதே, சி.ஏ.டி., தேர்வை எழுதும் ஒவ்வொரு மாணவரின் ஏக்கமாக இருக்கிறது.
எனவே, அக்டோபர் மாத மத்தியில் தொடங்கும் கேட் தேர்வை, நல்லபடியாக எழுத வேண்டும் என்ற பதைபதைப்பில் தற்போது மாணவர் உலகம் இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளின் நிலை குறித்து சர்வே

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி ஆரம்பிக்கப்பட்ட பின், பள்ளிகளில் காணப்படும் நிலை குறித்து, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சர்வே துவக்கியுள்ளது.

Sunday, September 29, 2013

10 ம் வகுப்பு நேரடி தனித்தேர்வர்களுக்கு செய்முறை வகுப்புக்கு பதிவு செய்ய வாய்ப்பு


அரசு பணி நியமனங்களில் இணையாக கருத வேண்டிய பட்டங்கள் தமிழக அரசு ஆணை

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் அரசுக்கு சமநிலை குழுவின் பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பி.ஏ., வரலாறு (வோக்கேஷ்னல்) என்ற பட்டம், அரசு பணி நியமனத்தின்போது பி.ஏ. வரலாறு பட்டத்துக்கு

அனைவருக்கும் மேல்நிலை கல்வித் திட்டம்: நிதி செலவினங்களுக்கான குழு ஒப்புதல்

அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டத்துக்கு மத்திய நிதி மற்றும் செலவினங்களுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் (சிஏபிஇ) நியமித்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில உயர் கல்வித் திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யும் வகையில் அனைவருக்கும் மேல்நிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கு கடந்த 2012 நவம்பரில் சிஏபிஇ ஒப்புதலும் அளித்தது.

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம்

டி.என்.பி.எஸ்.ஸி குரூப்-2 தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் முகாம் சென்னையில் சனிக்கிழமை(செப்.28)நடைபெறுகிறது.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக்க உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில், பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து, மாணவர் சேர்க்கையை துவக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி

கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர்.

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையானது

எம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம், எம்.எஸ்சி., கணிதத்திற்கு இணையானது" என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
எம்.எஸ்சி., புள்ளியியல் படித்தவர்களுக்கு, அரசு பணிகளில், பெரிய அளவிற்கு வேலைவாய்ப்பு கிடையாது. அதுவே, எம்.எஸ்சி.,யில், இதர

நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்டம்

மாணவர்களின் கணித திறனை மேம்படுத்துவதற்காக, அரசு நடுநிலைப் பள்ளிகளில், கணித ஆய்வகங்களை நிறுவ கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கணித கற்றல் திறனை வலுப்படுத்துதல் திட்டம் மூலம் ஆய்வக கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.

Friday, September 27, 2013

சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 2 ஆயிரம் பேர் கைது

சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 2 ஆயிரம் பேர் கைதுதமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தொடர் மறியல் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 6–வது ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு

கடந்த 7 மாதத்தில் 4,062 அரசு பணிகள் நியமனம்: குரூப்–1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன் தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் கடந்த 7 மாதங்களில் 4,062 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 1,391 பேர்கள் கலந்து கொள்ளும் குரூப்–1 மெயின் தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையதலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தினத்தந்தி நிருபரின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:–

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாட திட்டத்துக்கு வல்லுநர் குழு ஒப்புதல்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கு உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையிலான வல்லுநர் குழு வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

மதிய தூக்கம் மாணவர்களின் நினைவாற்றலை அதிகரிக்கும்

பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால், மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

44 மாதிரி பள்ளிகளில் "நேர்மை கடைகள்": காந்தி பிறந்த நாளில் ஆரம்பம்

மாணவர்களிடையே, நேர்மையை வளர்க்கும் நோக்கத்தில், காந்தி பிறந்த நாளான, அக்., 2ம் தேதி, 44 மாதிரிப் பள்ளிகளில், "நேர்மை கடைகள்" துவக்கப்படுகின்றன.

டி.ஆர்.பி., தலைவரை சஸ்பெண்ட் செய்ய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

தமிழை அலட்சியப்படுத்தியதற்காக, டி.ஆர்.பி., தலைவரை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், கோரிக்கை விடுத்து உள்ளது.

பள்ளி கட்டண நிர்ணய விசாரணையில் பெற்றோரையும் சேர்க்க பரிசீலனை

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விசாரணையில், பெற்றோரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளையும் கேட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலு தெரிவித்தார்.

Thursday, September 26, 2013

ABOUT 7TH PAY COMMISSION - FULL DETAILS

பிப்.,16ல் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த சிபிஎஸ்இ முடிவு

மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), பிப்ரவரி 16 தேதியன்று மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை (CTET)-2014 நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

பள்ளி ஆசிரியர்களுக்கு "விநோத டிரான்ஸ்பர்" உத்தரவு

அரசு கள்ளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, விநோதமான முறையில் இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம்

தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்க கல்வித்துறை உத்தரவு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளில் பொறுப்பு தலைமை ஆசிரியர்களை நியமித்து மாணவர் சேர்க்கையை துவங்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொசுக்களை அழிக்கும் கருவி: பிளஸ் 1 மாணவியர் கண்டுபிடிப்பு

மனித உடலில் இருந்து வெளியேறும் வாசனையை, திரவம் மூலம் உருவாக்கி, கொசுக்களை கவர்ந்திழுத்து அழிக்கும் புதிய கருவியை, தனியார் பள்ளி மாணவியர் கண்டுபிடித்துள்ளனர்.

10ம் வகுப்பு வினா – விடை புத்தகம் அடுத்த வாரம் விற்பனை

பத்தாம் வகுப்பு, வினா – விடை புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வருகின்றன.

7.4 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு நிதி மேலாண்மைப் பயிற்சி

தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், 7.4 லட்சம் மாணவர்களுக்கு, நிதி மேலாண்மை குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, தேசிய பங்குச்சந்தை நிறுவனம் தெரிவித்து உள்ளது.

பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம்; இன்றைய கூட்டத்தில் முடிவு

பிளஸ் 2, வரைவு பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, இன்று நடக்கும் உயர்நிலை குழு கூட்டத்தில், முடிவு எடுக்கப்படுகிறது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டங்கள்

அக்., 3ல் அனைத்து பள்ளிகளுக்கும் 2ம் பருவ புத்தகங்கள் விநியோகம்

அக்.,3 ல், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும், இரண்டாம் பருவத்திற்கான, பாடப்புத்தகங்களை வழங்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் இனி பதவி வகிப்பார் அரசிதழ் வெளியிடப்பட்டது

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் பதவியில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமர்த்தப்பட்டு வந்தனர். அந்த கல்வி நிறுவனத்துக்கு இடம் மற்றும் நிதி வழங்கியதற்காக, அந்த குடும்பத்தினருக்கு 1929–ம் ஆண்டு முதல் பதவி வழங்கப்பட்டு வந்தது.

10–வது, பிளஸ்–2 தேர்வுகளில் வினாத்தாள், மாணவர்கள் முன்னிலையில் பிரிக்கப்படும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வின்போது தேர்வு அறைகளில் மாணவர்கள் முன்னிலையில்தான் வினாத்தாள் பிரிக்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன்  நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் கொடுக்கக்கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

மத்திய அரசுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது 4 ஆயிரத்து 500 பேர் கைது செய்யப்பட்டனர்.

1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம் தேர்தல் கமிஷன்

1–ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கலாம் என்றும், இளைஞர்களை வாக்காளர் பட்டியல் சேர்ப்பதற்கு புதிய திட்டத்தின்படி, தேர்தல் கமிஷன் பிரதிநிதிகளாக ஒவ்வொரு கல்லூரிகளிலும், அரசியல் சாயமற்ற மாணவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
 

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

இரண்டாம் பருவத்துக்கு 1.56 கோடி இலவச புத்தகங்கள் விநியோகம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1.56 கோடி புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

7வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் : சிதம்பரம் தகவல்

மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த இயலாது: உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்

எழுத்துப் பிழைகளுடன் கேள்வித்தாள் இருந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வுக்கு, மறுதேர்வு நடத்த இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆசிரியர் தேர்வு வாரியம் செவ்வாய்க்கிழமை பதில் தெரிவித்தது.

அங்கீகாரம் பெறாமல் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் எம்.எட். கல்லூரிகள்

தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நேக்) அங்கீகாரம் பெறாத சில கல்லூரிகள் பல்கலைக்கழக எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து எம்.எட்., படிப்பில் மாணவர்களை சேர்த்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கொசுக்களால் பரவும் நோய்கள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவு

பள்ளிகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மதுரை விசாகா பள்ளி மாணவி ஒருவர், டெங்கு பாதித்து பலியானதாக எழுந்த புகாரை தொடர்ந்து, பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழாசிரியர் நியமன தேர்வில் பிழை: ஐகோர்ட் இன்று உத்தரவு

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமன தேர்வில் அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், மாற்று வழிமுறைகள் குறித்து, மதுரை ஐகோர்ட் கிளை இன்று(செப்., 25) உத்தரவிடுகிறது.
மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி

பழைய பள்ளிக் கட்டடங்களை இடிக்க கல்வித்துறை உத்தரவு

மாணவ, மாணவியரின் பாதுகாப்பு கருதி, பள்ளி வளாகத்தில் பழைய கட்டடங்கள் இருந்தால், அவற்றை, உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும்" என பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டு உள்ளார்.

கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து

சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு நாடகம், பேரணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் வரும் 9ம் தேதி விழிப்புணர்வு நாடகம், பேரணி, கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளதாக அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி சரோஜா தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: பங்கேற்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்., 30 ல் நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேனி மாவட்டப்பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இம் மாதம் 30ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

Tuesday, September 24, 2013

தரம் உயர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிகள் AND G.O

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்" என்ற தலைப்பில் கருத்தாளர்கள் பயிற்சி.

2013-2014 ஆம் கல்வியாண்டு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வள மைய அளவில் "எளிய அறிவியல் சோதனைகள்'என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி:

தொடக்கநிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி-25.09.2013

உயர் தொடக்க நிலை முதன்மைக் கருத்தாளர் பயிற்சி-27.09.2013

இடம்:SIMET HALL,SCERT, CHENNAI.

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

சான்றிதழ் சரிபார்த்து காத்திருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க ஆன்லைன் பிரச்சாரம்

மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க "சேவ் மை புக்" என்ற தலைப்பில் ஆன்லைனில் பிரச்சாரம் துவங்க இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.

நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 

ஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத்தரவால் தலைமை ஆசிரியர்கள் குழப்பம்

பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானிய நிதி ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட தொகை டி.டியாக அனுப்ப வேண்டும் என்ற உத்தரவுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு "ஸ்மார்ட் கார்டு" இறுதி கட்டத்தில் பணிகள்

பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள அட்டை வழங்குவதற்கான, இறுதி கட்ட பணியை விரைவில் முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

டி.இ.டி., தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலை வாய்ப்பக முன்னுரிமைப்படி, ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கூடுதல் கட்டண வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் மாநில கூட்டம், சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், சங்கத்தின் தலைவர் அருமைநாதன், முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனி தேர்வு துவங்கியது

பிளஸ் 2 தனித் தேர்வுகள், மாநிலம் முழுவதும், 114 மையங்களில் துவங்கின. நேற்று, மொழி முதல்தாள் தேர்வு நடந்தது. தொடர்ந்து, வரும், 2ம் தேதி வரை நடக்கும் தேர்வை, 42 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, மாநிலம் முழுவதும், 124 மையங்களில் துவங்கின.
47 ஆயிரம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்; வரும், 5ம் தேதி வரை, தேர்வுகள் நடக்கின்றன. வரும், 2014, மார்ச், ஏப்ரலில் நடக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், முறைகேடு எதுவும் நடக்காத அளவிற்கு, பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை, தேர்வுத்துறை அமல்படுத்த உள்ளது.

பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் படிப்பதற்கு "மேக்னிபையர்" கருவி

பார்வைகுறைபாடுள்ள மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக பாக்கெட் அளவு "வீடியோ மேக்னிபையர்" கருவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டியில் பழநியை சேர்ந்த மாணவர்கள் இருவர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.
பழநி அருகே க.வேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவன் தினேஷ்குமார். இவரது படைப்பான சூரிய ஒளியில் இருந்து சுடுநீர் தயாரிப்பது, சூரிய ஒளி மூலம் நீரை தூய்மைப்படுத்துவது ஆகியவற்றிற்கு மாநில அளவில் முதல் பரிசாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. மாணவனுக்கு வழிகாட்டியாக ஆசியர் சூரியபிரகாஷ் இருந்தார்.

குழந்தை பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையில்...

குழந்தைப் பருவத்திற்கும், வளர் இளம் பருவத்திற்கும் இடையேயான ஒரு பருவம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ட்வீன் என்று அழைப்பர். 11 வயது முதல் 13 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் இதற்குள் அடக்கம்.
இந்த நிலையைக் குழந்தைகள் அடையும்போது, அவர்களின் செயல்பாடு, எண்ணங்கள் மற்றும் பேச்சுகளில் பல மாறுதல்கள் தோன்றும். இதனைக்

Sunday, September 22, 2013

டி.ஆர்.பி. வெளியிட்ட 'கீ ஆன்சர்'-ல் குழப்பம்

முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்திய தேர்வுக்கான விடைத்தாள் பட்டியலில் (கீ-ஆன்சர்), பல கேள்விகளுக்கு தவறான விடைகள் குறிப்பிடப்பட்டு இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி விடைத்தாள்கள் திருத்தப்பட்டால்,

மாணவர்கள் கண்டிப்பாக கொண்டுவரக்கூடாது வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைக்கவேண்டும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

பள்ளிக்கூடங்களில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிக் கூடங்களாக தரம் உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:-

நீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு

குறைந்தது 10 நாள்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாலுமி பயிற்சி

தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனம் 6 மாத கால பொதுமுறை மாலுமி பயிற்சியை வழங்கவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக்னறன.
இப்பயிற்சிக்கு மொத்தம் 40 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழக அரசின் சட்டப்படி இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படும்.

ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


சென்னை, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70 பேரை, பதிவு மூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு,

மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண "மொபைல் கவுன்சிலிங்"

மதுரை உட்பட 4 மாவட்டங்களில், மாணவர்களுக்கு "கவுன்சிலிங்" அளிப்பதற்கான வேன், நேற்று மதுரை வந்தது.
தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண் பெற்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்டிப்பதால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். இதற்கு தீர்வு காண, மாணவர்களுக்கு உளவியல் ரீதியான "கவுன்சிலிங்" வழங்க, "மொபைல் வேன் கவுன்சிலிங்" திட்டத்தை அரசு துவக்கியது.

சாக்கடை கழிவுநீர் தேக்கம், சுத்தமில்லாத கழிப்பறை: கேள்விக்குறியாகும் அரசுப் பள்ளிகளின் சுகாதாரம்

அரசு பள்ளிகளையொட்டி கழிவு நீர் தேக்கம், துப்புரவு தொழிலாளர் பணியிடம் நிரப்பப்படாததால், கழிப்பறைகள், கொசு உற்பத்தி மையமாக மாறி, மாணவர்களின் சுகாதாரத்திற்கு உலைவைக்கிறது. மர்ம காய்ச்சல் துவங்கும் முன், கல்வித்துறை அதிகாரிகள், நடவடிக்கை

மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்து அடாவடி: தலைமையாசிரியர் நிர்பந்தத்தால் பெரும் அதிர்ச்சி

முதல் பருவத்தேர்வு வினாத்தாள் அச்சடிக்க, பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும் "பார்கோடிங்" முறை அமல்: முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பே இல்லை

பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பிளஸ் 2 காலாண்டு தேர்வில் குளறுபடி: மாணவர்கள் அதிர்ச்சி

பிளஸ் 2 காலாண்டு தேர்வு வேதியியல் வினாத்தாளில், பாடத்திட்டத்திற்கு வெளியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Friday, September 20, 2013

தமிழகத்தில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை ஜனவரிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவு

காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இப்போதுள்ள நடைமுறைகளின்படி, ஒவ்வொரு கல்வியாண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்.
மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக இந்த ஆண்டு இந்தக் காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

+2 காலாண்டுத் தேர்வு: பாட அட்டவணையை மீறி கேள்விகள் கேட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகம் முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை +2 வேதியியல் தேர்வுக்கு கேள்வித்தாள்களை பள்ளிகளில் வழங்கியுள்ளனர். அதைப் பார்த்த மாணவ மாணவியர் அதிர்ச்சி அடைந்தனர்.

தோல்வியடைந்த கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் சரியே: உயர் நீதிமன்றம்

தேர்வில் தோல்வியடைந்த கணினி ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்தது சரியே; ஜனவரிக்குள், தேர்வு நடவடிக்கையை, பள்ளிக்கல்வித் துறை முடித்துவிட வேண்டும்&' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நிதி ஒதுக்க அனுமதி

எம்.பி.,க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, பள்ளிக்கூடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் வாங்கவும், கூட்டுறவு சங்கங்களுக்கு கட்டுமான வசதியை ஏற்படுத்தவும் ஒதுக்கீடு செய்யலாம்" என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

குரூப்-1 மெயின் தேர்வு தள்ளி வைப்பு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

வரும், 27 முதல், 29ம் தேதி வரை நடக்க இருந்த, குரூப்-1 மெயின் தேர்வு, அக்டோபர், 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடக்கும்" என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் முறைகேடு? தேர்வுத்துறை மீண்டும் ஆய்வு

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின் நடந்த மறு மதிப்பீட்டு விடைத்தாள்கள் அனைத்தையும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு மூலம், மீண்டும், தேர்வுத்துறை ஆய்வு நடத்தி வருகிறது. மறு மதிப்பீட்டில், முறைகேடு நடந்திருக்குமோ என்ற சந்தேகம் காரணமாக, நான்கு மாதங்களுக்குப் பின், மீண்டும், விடைத்தாள்களை ஆய்வு செய்யும் பணியில், தேர்வுத் துறை ஈடுபட்டுள்ளது.

தேர்வு விடைத்தாள் வடிவமைப்பு மாற்றம்: தனி தேர்வுகளில் அமல்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில், புதிய விடைத்தாள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செப்., 23 முதல் நடக்கும் தனி தேர்வுகளில், மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில், இவற்றை தேர்வுத்துறை வழங்குகிறது.

தினமலர் செய்தி எதிரொலி: ஆசிரியர்களின் சம்பளப் பிரச்னை தீர்ந்தது

தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும், 3,565 இடைநிலை ஆசிரியர் மற்றும் 1,581 பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடங்களை, வரும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. "தினமலர்" நாளிதழ் செய்தி எதிரொலியாக, 5,146 ஆசிரியர்களும், எந்த சிக்கலும் இன்றி, சம்பளம் பெறுவது, உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்: 30ம் தேதிக்குள் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,900 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஜூலையில், போட்டி தேர்வை நடத்தியது. 1.5 லட்சம் பேர், தேர்வை எழுதினர். தேர்வின், தற்காலிக விடைகளை வெளியிட்ட சிறிது நாட்களில், அனைத்து பாடங்களுக்கும், தேர்வு பட்டியலையும், டி.ஆர்.பி., தயாரித்தது.

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 80 சதவீதமாக இருந்தது இதனை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 1-ம் தேதியினை கணக்கிட்டு அகவிலைப்படியை 80 சதவீதத்தில் இருந்து 90 சதவீதாக உயர்த்த அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி ஓய்வூதிதாரர்களும் பயனடைவார்கள்.

Thursday, September 19, 2013

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., சீட் ரூ.1 லட்சம்

பி.எட்., இடங்கள், சுயநிதி கல்லூரிகளைக் காட்டிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இம்முறை அதிக விலைக்கு விற்கப்படுவதாக பெற்றோரும், மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

10, பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு முதல்முறையாக ஆன்-லைனில் நுழைவுச்சீட்டு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக முதல் முறையாக ஆன்-லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள்: ஒப்புதல் பெற விண்ணப்பிக்கலாம்

முப்பருவமுறையின் கீழ் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற தனியார் விண்ணப்பிக்கலாம் என, மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனம் : ஐகோர்ட் உத்தரவு

பி.ஏ., (கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப்), பி.காம்., பட்டப் படிப்பிற்கு சமம் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதை பின்பற்றாமல், முதுகலை வணிகவியல் ஆசிரியர் நியமனத்தில் மனுதாரரை நிராகரித்தது ஏற்புடையதல்ல. பணி நியமனம் வழங்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பிளஸ் 1 காலாண்டு தேர்வில் குழப்பம் : ஆங்கில வழி மாணவர்கள் தவிப்பு

பிளஸ் 1 காலாண்டு பொதுத்தேர்வில், இயற்பியல் வினாத்தாளில், 5,10 மார்க் கேள்விகள் சரியாக அச்சடிக்காமல் விடுபட்டதால், ஆங்கில வழிக்கல்வி மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகினர்.

இலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி?

ஆதிதிராவிட மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க, கொண்டு வரப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்த, நடப்பு ஆண்டுக்கு, 813 கோடி ரூபாய் தேவைப்படுவதால், திட்டத்தை, நடைமுறைப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் பதிவு

வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தனி தேர்வுக்கு இன்று முதல் "ஹால் டிக்கெட்"

பிளஸ் 2 தனி தேர்வு, வரும், 23ம் தேதி துவங்குகிறது. மாநிலம் முழுவதும், 130 மையங்களில் நடக்கும் தேர்வை, 40 ஆயிரம் மாணவர் எழுதுகின்றனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு

டி.என்.பி.எஸ்.சி சார்பி்ல் நடக்க உள்ள குரூப் -1 தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்தியி்ல், குரூப்-1 க்கான முதன்மை தேர்வு செப். 27, 28, மற்றும் 29-ம் தேதிகளில் நடக்க விருந்ததது. தற்போது முதன்ம‌ை தேர்வு அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 18, 2013

COMMON SYLLABUS CLASS IX II TERM


COMMON SYLLABUS
CLASS IX
 II TERM



MATHS 

SCIENCE 

SOCIAL SCIENCE -
(TAM VER) (ENG VER)

முதுநிலை பட்டதாரிகள் தேர்வு: தமிழுக்கு மறு தேர்வு நடத்தமுடியுமா?: உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தமிழ்நாடு முதுலை பட்டதாரிகள் தேர்வில் தமிழ் தாளில் குளறுபடிகள் நடந்த குற்றச்சாட்டை அடுத்து தேர்வு வாரிய தலைவரை நேரடியாக ஆஜராக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இதனையடுத்து முதுநிலை பட்டதாரிகள் தேர்வு வாரிய தலைவர் இன்று நேரில் ஆஜரானார்.அவரிடம் தமிழ் மறு தேர்வு நடத்தமுடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த வாரிய தலைவர் அரசிடம் ஆலோசனை பெற்றே முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வு: 86 ஆயிரம் பேர் பதிவு

வரும் செப்டம்பர், அக்போடரில் நடைபெற உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித்தேர்வுகளை எழுத மொத்தம் 86 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வை 46 ஆயிரம் பேரும் பிளஸ் 2 தனித்தேர்வை 40 ஆயிரம் பேரும் எழுத உள்ளனர்.
இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 23-ஆம் தேதி தொடங்க உள்ளன. பத்தாம் வகுப்பு தனித்தேர்வு அக்டோபர் 1ம் தேதி வரையிலும், பிளஸ் 2 தனித்தேர்வு அக்டோபர் 5-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

அங்கன்வாடி குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு புதிய பாட திட்டம் : மாற்றப்பட்ட கல்வித்திட்டம் எளிமையானது


கோவை மாவட்டத்திலுள்ள அங்கன் வாடி குழந்தைகளுக்கு, கற்பிக்கும் முறையில், மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 1,688 அங்கன் வாடிமையங்கள் செயல்படுகின்றன. இங்கு 10,000க்கும் மேற்பட்ட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பிக்கப்படுகிறது. இதில் மொழியறிவு, கணிதம் மற்றும் அறிவியல் பாடம் கற்றுத்தரப்பட்டது.

9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மாற்றம்

சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கான விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

குரூப்-2 தேர்வு: ஒரு லட்சம் பேர் விண்ணப்பம்

சார்- பதிவாளர், வணிக வரித்துறை உதவி அலுவலர் உள்ளிட்ட பதவிகளை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத, பட்டதாரிகள், அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

TNPSC DEPARTMENTAL EXAM DEC-2013 ANNOUNCED

Departmental  Examination December 2013 Announced by TNPSC

Apply Online Click Here


Notification : Tamil  | English

Tuesday, September 17, 2013

ஆசிரியர்களுக்கு இனி அடையாள அட்டை!

தமிழகத்தில் 538 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பல கல்லூரிகளில், தகுதியான ஆசிரியர்கள் இல்லை. சாதாரண பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கியே பி.இ பட்டதாரிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்கிளே பிஇ வகுப்பை எடுக்க வைக்கின்றனர். பல்கலைக்ககழு ஆய்வுக்கு வரும் போது, வேறு கல்லூரிகளில் பணியுரியும் ஆசிரியர்களை வரவைத்து, போலி ஆவணங்களை தயார் செய்து, ஏமாற்றி விடுகின்றனர்.

நவோதயா வித்யாலயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை

மத்திய அரசின் கீழ் செயல்படும் வித்யா சமிதி பள்ளியில் 6ம் வகுப்பு சேர்வதற்கு நடைபெறும் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: தற்போது 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடங்கள்: ஆந்திரா, கர்நாடகா, கேரளா & புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும்.
தேர்வு முறை: ஆப்ஜெக்டிவ் மாதிரியில் 2 மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 50 மதிப்பெண்களுக்கு Mental Ability, 25 மதிப்பெண்களுக்கு Arithmetic, 25 மதிப்பெண்களுக்கு Language Streams-ல் கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் www.navodaya.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அக்டோபர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.பிப்ரவரி 8ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறுகின்றது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் பி.எட்., படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் பி.எட்., படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்

தேசிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.17) முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
 அரசுத் தேர்வுகள் துறையின்

பி.எட். இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 17, 18 தேதிகளில் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நடத்தி வருகிறது.

வினாத்தாளில் பிழை: டி.ஆர்.பி., தலைவர் ஆஜராக உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகளுக்கு, முழு மதிப்பெண் கோரிய வழக்கில், "ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் சில விளக்கங்கள் பெற வேண்டியுள்ளதால், செப்.,18 ல் ஆஜராக வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ், www.dge.tn.nic.in, என்ற இணையதளம் வழியாக, இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதில் தாமதம்

தலைமையாசிரியர்களின் கெடுபிடியால், பள்ளிகளில், பகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர ஆசிரியர்களாக பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Monday, September 16, 2013

வினாத்தாள்-விடைத்தாள்களை பாதுகாக்க தேர்வுத்துறை நடவடிக்கை


எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை தேர்வுத்துறை எடுத்துள்ளது. விடைத்தாள்களை தபால் துறை மூலம் அனுப்புவதற்கு பதிலாக வேறு வாகனங்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.விடைத்தாள் சேதம் கடந்த வருடம் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் விடைத்தாள் கட்டுகள் விருத்தாசலம்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு 10 நாட்களில் வெளியாகும் - ஆசிரியர் தேர்வு வாரியம்


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.8 லட்சத்து 50 ஆயிரம் பேர்தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை

இடைநிலை ஆசிரியர்கள் 23-இல் பேரணி

மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னையில் செப்டம்பர் 23-ஆம் தேதி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநிலப் பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த கோரிக்கை

மத்திய அரசு அலுவலர்களை போல் தமிழக அரசு அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தவேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் மாநில தலைவர் சௌந்தர்ராஜன் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு மாலை அளித்த பேட்டியில்-

மாணவர்களிடம் பரவும் புதுவித "போதை" பழக்கம்

திண்டுக்கல்லில் சில கல்லூரி மாணவர்களிடம் புதுவித போதை பழக்கம் பரவுகிறது.சிறுவர்களும், மாணவர்களும் ஒயிட்னர், தின்னர் போன்றவற்றை போதை பொருட்களாக பயன்படுத்தினர். சிறுவர்கள் நல அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து, சமீபத்தில் ஒயிட்னர், தின்னர் பயன்பாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்தது.

ஏழை மாணவ, மாணவியர் கல்வியறிவுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: அமைச்சர்

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தச் மாணவ, மாணவியர் தங்குதடையின்றி கல்வியறிவை பெறும் வகையில், முதல்வர் ஜெயலலிதா, 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதை, மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்," என அமைச்சர் வைத்திலிங்கம் பேசினார்.

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்" திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் விரைவில் 1,000 உதவியாளர்கள் பணி நியமனம்

பள்ளிக்கல்வித் துறையில், 1,000 உதவியாளர் பணியிடங்கள், நேரடி தேர்வு மூலம், விரைவில் நிரப்பப்பட உள்ளன. அரசு துறைகளில், உதவியாளர் பணியிடம், மிகவும் முக்கியமானது. இளநிலை உதவியாளர்களுக்கு மேல் நிலையிலும், கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு, கீழ் நிலையிலும், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். கோப்புகளை உருவாக்குவது, அதை பராமரிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை, உதவியாளர்கள் செய்கின்றனர்.

Saturday, September 14, 2013

GROUP 2 - 2012 தேர்வு முடிவுகளை வெளியிடக்கோரி TNPSC முன் தேர்வு எழுதியோர் ஆர்ப்பாட்டம்


மாணவர்களின் போலியான விண்ணப்பங்கள் நிராகரிப்பு



விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மறு தேர்வு எழுத விண்ணப்பித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள் 692 பேரின் விண்ணப்பங்கள் போலியானது என நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.


அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் நியமன வழக்கு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி திட்டம்

ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வி திட்டம் 2011ல் துவங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர்கள் இலவசமாக கல்வி கற்க முடியும். இந்த ஆண்டு இத்திட்டத்தில் கல்வி பயில 430 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்தியாவில் சிறந்த 20 மருத்துவக் கல்லூரிகள்

இந்தியாவில் சிறந்த 20 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்:
1. AIIMS, Delhi
2. AFMC, Pune
3. JIPMER, Pondicherry
4. Chhatrapati Shahuji Maharaj MU, Lucknow
5. St. John's Medical College, Bangalore
6. Kasturba Medical College, Manipal
7. Bangalore Medical College, Bangalore
8. Seth GS Medical College, Mumbai
9. Institute of Medical Sciences, BHU, Varanasi
10. CMC Ludhiana
11. Amrita School of Medicine, Kochi
12. UCMS Delhi
13. Sri Ramachandra Medical College, Chennai
14. B.J. Medical College, Ahmadabad
15. B.J. Medical College, Pune
16. Medical College, Calcutta
17. MGIMS, Wardha
18. M.S. Ramaiah Medical College, Bangalore
19. Government Medical College, Chandigarh
20. Gandhi Medical College, Hyderabad

பி.எட்.,யில் புதிய பாடங்கள்!

பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கல்விக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பி.எட் படிப்பில் புதிய பாடங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

ஐஐடி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை

சென்னை ஐஐடி பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று சிபிஐ விசாரணை நடத்த ஆணை பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், தனி நீதிபதி உத்தரவின்படி பேராசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத் தொகையை ஒரு வாரத்துக்குள் வழங்கவும் உத்தரவிட்டனர்.

மாணவர்களுக்கு ஓவிய போட்டி: செப்.,30க்குள் முடிக்க உத்தரவு

மாநில ஓவியபோட்டிக்காக, மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, செப்., 30க் குள் முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடுத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன்

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில், தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால், 1988 ஜூன் 1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை.

"அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிப்பவர்கள் பொது தேர்வை எழுத முடியாது"

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வை எழுத முடியாது என, தேர்வுத்துறை இயக்குனர், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவே, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் பிரச்னை குறித்து, தமிழக அரசு, விரைந்து முடிவெடுத்து, அங்கீகாரம் வழங்க வேண்டும்" என தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.

பிளஸ் 1 தேர்வெழுத வந்த போதை மாணவர் இடைநீக்கம்

குடிபோதையில், பள்ளியில் காலாண்டு தேர்வு எழுத வந்த, பிளஸ் 1 மாணவர், பள்ளியில் இருந்து, 20 நாள், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை, அரசு மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 1 வரலாறு பிரிவு மாணவர்கள் தேர்வு எழுதிய அறையில், நேற்று முன்தினம், மது வாடை அடித்தது. மாணவர்களிடம் ஆசிரியர் சோதனை நடத்தியதில், மாணவர் ஒருவர் குடி போதையில் வந்தது தெரியவந்தது. அவரிடம், விசாரித்ததில், திருமண விருந்துக்கு சென்று, மது அருந்தி விட்டு வந்ததாக தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை செயல்பாடு: அமைச்சர் ஆலோசனை

பள்ளி கல்வித்துறைக்கு, கூடுதல் பொறுப்பேற்றுள்ள, அமைச்சர் பழனியப்பன், துறை செயல்பாடு குறித்து, அதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.

நேர்முகத் தேர்வு அல்லாத குரூப்-2 தேர்வு முடிவை வெளியிடக் கோரி, தேர்வெழுதியவர்கள், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த ஆண்டு, நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய, 1,400 பணியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத, 1,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கும், குரூப்-2 தேர்வு நடந்தது. இதில், நேர்முகத் தேர்வை உள்ளடக்கிய பணியிடங்களை நிரப்ப, அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
நேர்முக தேர்வுக்குப் பின், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான தேர்வு முடிவை, இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில், தேர்வு முடிவை வெளியிடக்கோரி, தேர்வர்கள், நேற்று, தேர்வாணைய அலுவலகம் முன், திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"அக்., 15ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

சமூக விரோதிகளால் இளம் வயதிலேயே தடம் மாறும் மாணவர்கள்

தேனியில் சமூக விரோதிகள் பள்ளி மாணவர்களை மயக்கி தவறான செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் இளம் வயதிலேயே தடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஆன்-லைன் மூலம் கற்கும் வசதி அறிமுகம்

பழைமைக்கும் பழமையாக, புதுமைக்கும் புதுமையாக ஆன்-லைன் முறையில் புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என, துணைவேந்தர் திருமலை கூறினார்.
தஞ்சையில் அரண்மனை வளாகத்திலுள்ள தமிழ்ப்பல்கலை., பதிப்புத்துறை அலுவலகத்தில் நூல்களுக்கு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா மற்றும் தமிழ்ப்பல்கலை., தொடக்கநாள் விழா நடந்தது. பதிவாளர் கணேஷ்ராம், செம்மொழி தமிழ் உயராய்வு மைய

பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை - கல்வித்துறை உத்தரவு


பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1½ லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 உயர்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 9-வது வகுப்பு முதல்

பார்வையற்றவர்களுக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி

தேசிய பார்வையற்றோர் தினத்துக்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நிதி வசூலிக்க, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில், கொடிகள், உண்டியல் மூலம் பார்வையற்றோருக்காக பள்ளிகளில் நிதி வசூலிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

Friday, September 13, 2013

டிஇடி: தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ் தவிர பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,  2 பல்கலைக்கழக உறுப்பு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி  மூலமாக தொடங்கி வைத்தார்.

பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆர்.எம்.எஸ்.ஏ தென் மண்டல ஆய்வு கூட்டம்: 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு


பாளை.,யில் நாளை (14ம் தேதி) நடக்கும் ஆர்.எம்.எஸ்.ஏ தென் மண்டல அளவிலான ஆலோசனை கூட்டத்தில் 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான அனைத்து நிலை பணியாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை (14ம் தேதி) மேலத்திடியூர் பி.எஸ்.என் இன்ஜினியரிங் கல்லூரியில் நடக்கிறது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலா

நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு

நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மழை விடுமுறை எதிரொலி: பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுக்கு புதிய கேள்வித்தாள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு, மழை காரணமாக, நேற்று விடுமுறை. ஆனால், பிற மாவட்டங்களில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்றைய காலாண்டு தேர்வுகள், வழக்கம் போல் நடந்தன. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில், புதிய கேள்வித்தாள்கள் அச்சிடப்பட உள்ளன.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வும், மாநில அளவில், பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 10ம் தேதி, தேர்வு துவங்கியது. 10ம் தேதி, மொழி முதல் தாள் தேர்வும், 11ம் தேதி, மொழி இரண்டாம் தாள் தேர்வும் நடந்து முடிந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சுவடியியல் பட்டய வகுப்பு துவக்கம்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சுவடியியல் பட்டய வகுப்பு நேற்று துவங்கியது. அதையொட்டி, சுவடிகள் குறித்த, சிறப்புக் கண்காட்சியும், நேற்று துவங்கியது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், இந்த ஆண்டு, தமிழ் சுவடியியல் பட்டய வகுப்பு துவங்கப்பட்டு உள்ளது. இதில், சுவடியியல் துறையில் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்வர். இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 15ல் நடந்தது. இதில், 50 மாணவர் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வகுப்பில், சுவடிகளின் தோற்றம், வளர்ச்சி, பதிப்பு வரலாறு, செய்யுளியல், யாப்பு, ஆகியவற்றைப் பற்றி அறியவும், ஓலைச் சுவடிகளைப் படிக்கவும், படியெடுக்கவும், பதிப்பிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.

விடுதி மாணவர்களுக்கு அடையாள அட்டை: ஆதிதிராவிட நலத்துறை புது முயற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், அனைத்து விடுதிகளில், மாணவர் அல்லாதோரின் வருகையை கட்டுப்படுத்த, அடையாள அட்டை முறையை கொண்டு வர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் சாத்தியமாகுமா என்பது, நடைமுறைக்கு வரும்போது தெரிய வரும்.

Thursday, September 12, 2013

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு, பள்ளிகள் பார்வை குறித்து அறிவுரை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது

அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில இயக்குனரக உத்தரவை அடுத்து, மாநிலம் முழுவதும் ஆண்டுதோறும் 6 முதல் 14 வயது வரை உள்ள, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒரே மாதத்தில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள்

ஒரே மாதத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்பில் 8,464 மதிப்பெண் சான்றிதழ்களும், பிளஸ் 2 வகுப்பில் 7,830 மதிப்பெண் சான்றிதழ்களும் அனுப்பப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 2,434, பிளஸ் 2 வகுப்பில் 2,867 சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
விண்ணப்பித்து பல ஆண்டுகளாகக் காத்திருந்தவர்களுக்கு இப்போது மாற்று மதிப்பெண் சான்றிதழ்கள் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புறக்கணிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்?: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

மாவட்ட அளவில் நடக்கும் கலை இலக்கிய போட்டிகள், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கல்வித்துறை நிராகரித்துள்ளது.
கோவையில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மெட்ரிக் பள்ளி மாணவர்களின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள், தரப்பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டனர். முன்னிலை இடங்கள் அனைத்து பிரிவுகளிலும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் தட்டிச்சென்றுள்ளனர்.

பொது வினாத்தாளை பயன்படுத்த தனியார் பள்ளிகள் தயக்கம்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும், காலாண்டு தேர்வுக்கான வினாத்தாளை பயன்படுத்த, சில தனியார் பள்ளிகள் தயக்கம் காட்டுகின்றன. அந்த பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டு முதல், தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திற்கும், ஒரே மாதிரியாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. அதற்காக, வெளியிடப்படும் தேர்வு அட்டணையை, அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும்.

டி.என்.பி.எஸ்.சி., விண்ணப்பதாரர் நிரந்தர பதிவு விவரங்கள் மாயம்

டி.என்.பி.எஸ்.சி., ஆன்-லைனில், நிரந்தர பதிவாளர்களுக்கான விவரங்கள் இல்லாததால், விண்ணப்பதாரர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தலைவராக நட்ராஜ் இருந்த போது, பல வகை குரூப் தேர்வுகளை, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. மேலும் ஒரு வசதியாக, "நிரந்தரப் பதிவு" முறையும் அறிமுகப்படுத்தப்பட்டது.

Wednesday, September 11, 2013

ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் " சிறப்பு குறை தீர்க்கும் முகாம் " திட்டத்தை விரிவு படுத்த பள்ளிகல்வி துறை ஆணை .

சிபிஎஸ்இ: இந்தாண்டு முதல் ஓபன் புக் முறையில் பாடம்

சிபிஎஸ்இ பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டு முதல் 'ஓபன் புக்' எனப்படும் திறந்த புத்தக தேர்வு முறையின்படி பாடம் நடத்தப்பட உள்ளது.
9 மற்றும் 11 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் திறந்த புத்தக தேர்வு முறையின் அடிப்படையில் பாடங்கள் ஆரம்பிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும், ஐந்து முக்கிய பாடங்களில், ஒன்றாக ஓபன் புக் பாட முறை தேர்வு இருக்கும் என்று கவுகாத்தி சிபிஎஸ்இ தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேர்வு கட்டணம் செலுத்தும் முறையில் மாற்றம்: கிராமப்புற மாணவர் சிரமம் குறையும்

தனித்தேர்வு கட்டணங்களை, வங்கியில் செலுத்தும் முறையில் உள்ள, சிரமங்களை நீக்கி, நேரடியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் உள்ள, பணியாளர்களிடம் வழங்குவதற்கு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன், அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். இந்த பணிகளை கவனிக்க, இயக்குனரகத்தில் இருந்து பணியாளர்கள், பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

10ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை (12/09/2013)வெளியீடு

பத்தாம் வகுப்பு, இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவு, நாளை வெளியிடப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் பலர், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். இதில் முதல் கட்டமாக, குறிப்பிட்ட மாணவர்களுக்கு, ஏற்கனவே மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மறுகூட்டல் முடிவுகள், நாளை காலை, 10:30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

உலக விண்வெளி வாரம்: மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், திரவ இயக்க அமைப்பு மையம் சார்பில், அக்., 4 முதல், 10ம் தேதி வரையிலான, உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கிடையே, கட்டுரை போட்டி நடக்கிறது.

உலகளவில், "டாப்' பல்கலை பட்டியல் வெளியீடு: 200க்குள் இந்திய பல்கலைக்கு இடம் இல்லை


உலகளவில், தரம் வாய்ந்த பல்கலைகளின் பட்டியலை, அமெரிக்க நிறுவனம், நேற்று வெளியிட்டது. இதில், முதல், 200 இடங்களில், இந்திய பல்கலைகள் எதுவும் இடம்பெறவில்லை. டில்லி ஐ.ஐ.டி.,க்கு, 222வது, "ரேங்க்' கிடைத்துள்ளது.

வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை : பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (வியாழன்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, September 10, 2013

கல்வியறிவில் திரிபுரா முதலிடம்


நாட்டிலேயே கல்வியறிவு பெற்றோர் அதிகமுள்ள மாநிலங்களில், திரிபுரா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. திரிபுராவில் 94.65 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். முதல் இடத்தில் இருந்த கேரளா தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அங்கு கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 93.91 ஆகும். தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் சதவிகிதம் 80.3 ஆக உள்ளது.

நல்லாசிரியர் விருதுக்கு போலீஸ் சான்று : தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், போலீஸ் ஸ்டேஷன்களில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று சான்று பெற வேண்டும் என்பதை அரசு திரும்ப பெறவேண்டும்' என, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நர்சரி - பிரைமரி - மெட்ரிக் - மேல்நிலை பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம், கோவையில் நடந்தது.

அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு இலவச காலணி வழங்க ரூ.1.19 கோடி

அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,), படிக்கும், 23,878 மாணவருக்கு, இலவச காலணி வழங்க, அரசு, 1.19 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இந்த நிதியில், தமிழகம் முழுவதும் உள்ள, அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்களுக்கு, இலவச ஷூ வினியோகம் செய்ய, "டெண்டர்" கோரப்பட்டு உள்ளது.

என்.சி.சி., சான்றிதழுக்கு மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவு

போலீஸ் பணி மறுக்கப்பட்டவருக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால், வாய்ப்பு கிடைத்துள்ளது.
கான்ஸ்டபிள், ஜெயில் வார்டன், தீயணைப்பு ஊழியர் பணி தேடி, பார்த்திபன் என்பவர் விண்ணப்பித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கான, கட்-ஆப் மதிப்பெண், ஆயுதப்படை போலீசுக்கு, 73; சிறப்பு பிரிவு போலீசுக்கு, 67; சிறை வார்டனுக்கு, 67; தீயணைப்பு துறைக்கு, 67 என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 66, மதிப்பெண் பார்த்திபன் பெற்றிருந்தார். அதனால், அவர் தேர்வு செய்யப்படவில்லை.

சான்றிதழ் இன்றி 4,000 மாணவர்கள் பாதிப்பு: முதல்வர் உத்தரவுக்காக காத்திருப்பு

ஈரோடு மாவட்டத்தில், பர்கூர், கடம்பூர் மலைப்பகுதி மக்களுக்கு, சான்றிதழ் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மலைவாழ் மக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில், பர்கூர் மலை, கடம்பூர் மலை, தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இம்மலைப் பகுதிகளில், சோளகா, ஊராளி, மலையாளி இனத்தவர்கள், அதிகம் பேர் உள்ளனர்.
அரசின் நேரடி பார்வை இல்லாததாலும், வனத் துறையினரின்

டி.ஆர்.பி., தேர்வு: தமிழ் பாட முடிவை வெளியிட தடை


டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான தேர்வு முடிவை வெளியிட மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது. டி.ஆர்.பி., தேர்வு கடந்த ஜூலை 21ம் தேதி நடந்தது. இந்நிலையில், தமிழ் தேர்வில் 47 கேள்விகள் தவறுதலாக இருந்ததாகவும், இதனால் தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் விஜயலட்சுமி என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில்

Monday, September 9, 2013

பி.லிட் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பி.லிட்., படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில்  பி.லிட்., (2011-12) பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. மறுதேர்வு, மறுமதிப்பீடு குறித்த விவரங்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தில் கேட்டறியலாம்.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிய www.bdu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு "இ.சி.எஸ்.," சம்பளம்

முறைகேட்டை தவிர்க்க, அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு, "இ.சி.எஸ்.," (எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறையில் சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Sunday, September 8, 2013

அறிவியல் பட்டதாரிகளுக்கான சர்வதேச போட்டிக்கான தகுதித் தேர்வு

 அறிவியல் பாடங்களில் சர்வதேச அளவில் நடத்தப்படும் 2014 போட்டிகளில் (International Olympiads) கலந்து கொள்ள வழிவகை செய்யும் நேசனல் ஒலிம்பியாட் திட்டத்தை IAPT மற்றும் HBCSE அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன. இதில் கலந்துகொள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


ஆசிரியர்கள் அச்சம் தவிருமா?

முன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.
தொடக்கக்கல்வி முதல் கல்லூரிக்கல்வி வரை பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு அஞ்சும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 கடந்த ஜூன், ஜூலையில் நடந்த, பிளஸ் 2 உடனடித் தேர்வை எழுதி, விடைத்தாள் நகல் பெற விண்ணப்பித்த தேர்வர்கள், இன்று முதல், 10ம் தேதி வரை, www.examsonline.co.in என்ற இணையதளத்தில் இருந்து, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவு எண், பிறந்த தேதி மற்றும் ஜூன், 2013ல் பெற்ற மதிப்பெண் சான்றிதழில் உள்ள, டி.எம்.ஆர்., கோடு எண்களை பதிவு செய்து,
 அறிவியல் துறையில் நான் சாதித்திட ஊக்கமாக இருந்தது, தமிழ் வழியில் நான் கற்ற ஆரம்பக்கல்வி தான்" என்று கோவை மாவட்டம் பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.   

 பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு 14,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது," என, தமிழக பள்ளி மற்றும் உயர்
கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசினார்.
பீளமேடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி பொன்விழா நிறைவு நாள் நிகழ்ச்சி, நேற்று மாலை நடந்தது. தமிழக பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பேசியதாவது:
"கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகரித்தால், பல்துறைகளும் நல்ல

Saturday, September 7, 2013

PART TIME TEACHER'S

PART TIME TEACHER'S ஊதியம்  இனி  ECS மூலம்  வழங்க  மாநில திட்ட  இயக்குனர்  உத்தரவு 

தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளி கல்வித்துறை

 காலாண்டு தேர்வை தொடர்ந்து, அந்த நாட்களில், ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்க, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார்.

இரண்டு லட்சம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்குகள் (CPS) வெளியீடு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 2 லட்சம் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியக் கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திலுள்ள ஊழியர்கள் தங்களது 2011-12- ஆம் ஆண்டுக்கான வருடாந்திர கணக்கு அறிக்கையை கருவூலங்களில் சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளிடம் (டி.டி.ஓ.) பெற்றுக்கொள்ளலாம் என சென்னையிலுள்ள முதன்மை கணக்குத் தணிக்கை அலுவலகம் அறிவித்துள்ளது.

குக்கிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியரை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவு

தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக செல்கிறார்களா என்பதை வட்டார அளவில் குழு அமைத்து  கண்காணிக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் குக்கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பள்ளிகளில் விடுப்பு  விண்ணப்பம் அளிக்காமல் பணிக்கு வராமல் இருப்பதை கண்டறிந்து தடுப்பதற்காக வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி  மேற்பார்வையிட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட தொடக்க கல்வி அலுவலரும், அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அலுவலரும் இணைந்து  இப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

Friday, September 6, 2013

பி.எஸ். அப்துர் ரகுமான் பல்கலை.யில் படிக்க 13 வயது மாணவிக்கு அனுமதி

வண்டலூர் பி.எஸ்.அப்துர்ரகுமான் பல்கலைக்கழக ஆராய்ச்சிப் படிப்பில் சேருவதற்கான ஒப்புதல் கடிதத்தை 13 வயது மாணவி சுஷ்மா வர்மாவிடம் வழங்குகிறார் துணைவேந்தர் ஜெ.ஏ.கே.தரீன். உடன் மாணவியின் பெற்றோர் தேஜ்பகதூர் தம்பதி, மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால், இணை துணைவேந்தர் பெரியசாமி. 
 
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னெüவைச் சேர்ந்த 13 வயதான சிறுமி சுஷ்மாவிற்கு வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பும், பி.ஹெச்டி ஆய்வுப் படிப்பும் பயில அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 342 இடங்கள் காலி

 பி.எட்., முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 342 இடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை- டி .சபிதா 

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 558 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு முறையில் மாற்றம்

 சி.பி.எஸ்.இ., (Central Board of Secondary Education) பள்ளியில், 9 மற்றும் 10வது படிக்கும் மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களின் வினாத்தாள்கள் ஆன்லைன் மயமாக்கப்பட்டு, அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் ஒரே வினாத்தாள் முறை வர உள்ளது. இதன் மூலம் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இது இந்த கல்வி ஆண்டில்( 201314), படிக்கும் மாணவர்களுக்கு, செப்.16 முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஆங்கில  வழிக்கல்வி  கற்பதில்  சிக்கல் - பாடப்புத்தகங்கள்  தட்டுப்பாடு

பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு இதுவரை ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் வழங்காததால், ஆறாம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SSLC Supplementary Examination (Sep / Oct - 2013) 

SSLC பொதுத் தேர்வு  கால அட்டவணை மற்றும் அறிவிப்புகள்

SSLC Sep/Oct-2013 Exam Time Table

 

Thursday, September 5, 2013

Results of Departmental Examinations - MAY 2013

click here

ஆசிரியர் தகுதித்தேர்வு: செப்டம்பர் இறுதிக்குள் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட ஆசிரியர் தேர்வுவாரியம் திட்டமிட்டுள்ளது.
தகுதித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். தேர்வு பணிகளை அக்டோபர் மாத இறுதிக்குள் முடிக்க தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அதை தொடர்ந்து தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.5 முதல் செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வி அமைச்சர் வைகை செல்வன் நீக்கம்

 தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த வைகை செல்வன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அப்பணியை, தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக

ஆசிரியர் இடமாறுதல் வழக்கு: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு 

 ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.

Wednesday, September 4, 2013


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு- sep- 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை

தமிழக அரசின் சார்பதிவாளர், வணிக வரித்துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கான,  1064 பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2 


GENERAL INFORMATION: The State Level National Talent Search Examination for
the Academic Year 2013-2014 will be held on 17th November 2013 for all the students
currently studying in Std .X in any recognized school located in the State.
ஆசிரியர்கள்  அணைவருக்கும்  கல்வி சிகரம் - TNGTFA  ன்
சார்பில்  இனிய      ஆசிரியர் தின  வாழ்த்துக்கள்




ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்படுகிறது.

இரண்டாம் பருவ புத்தகங்கள் அடுத்த வாரத்தில் இருந்து வினியோகம்

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு அடுத்த வாரத்தில் இருந்து, இரண்டாம் பருவத்திற்கான 2.6 கோடி பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை திட்டம், அமலில் உள்ளது. பள்ளி திறந்ததும் ஜூன் முதல் செப்., வரையிலான முதல் பருவத்திற்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. அக்டோபர் முதல், இரண்டாம் பருவ பாடத்திட்டங்கள் நடத்தப்படும்.

Tuesday, September 3, 2013

பி.எட்., (சிறப்புக் கல்வி) சேர்க்கை அறிவிப்பு 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை, பி.எட்., சிறப்புக் கல்வி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகள் கொண்ட இப்படிப்பிற்கு, விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பல்கலை அலுவலகம் அல்லது அதன் கல்வி மையங்களில் 500 ரூபாய் செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் 10 சதவீதம் உயர்கிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இதற்கான, அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில், தற்போது, 80 சதவீதம் அகவிலைப்படியாக உள்ளது. இதை, 10 சதவீதம் உயர்த்தி, 90 சதவீதமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.