Monday, September 30, 2013

தமிழ்நாட்டில் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகள்தொடங்க அரசு உத்தரவு

1-வது வகுப்பு முதல் 5-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் தொடக்கப்பள்ளிகள் ஆகும். 1-வது முதல் 8-வது வகுப்புவரை உள்ள பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகள் ஆகும். இந்த தொடக்கப்பள்ளிகள் பல கிராமப்புறங்களில் தான் உள்ளன. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் 23 ஆயிரத்து 815 உள்ளன. இந்த பள்ளிகளில் 15 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். 7 ஆயிரத்து 307 நடுநிலைப்பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 12 லட்சத்து 70 ஆயிரம் மாணவ&மாணவிகள் படிக்கிறார்கள்.

புதிதாக 54 பள்ளிகள்
கல்வித்துறையை மேலும் சிறப்பாக நடத்தவும் உலகத்தரத்திற்கு இணையாக கல்வியை கொண்டு வரவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் காலிப்பணி இல்லாத நிலையை உருவாக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்து பணியாணை வழங்கினார்.
இந்த நிலையில் இந்த வருடம் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 54 தொடக்கப்பள்ளிகளை தொடங்க அனுமதி அளித்துள்ளார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட ஒரு லட்சம் மாணவர்கள் அதிகமாக எண்ணிக்கையில் தொடக்கப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பள்ளிகள் திறக்கப்படுவதால் மேலும் ஏராளமான மாணவர்கள் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment