Tuesday, September 3, 2013

பி.எட்., (சிறப்புக் கல்வி) சேர்க்கை அறிவிப்பு 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை, பி.எட்., சிறப்புக் கல்வி படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கில வழியில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இரண்டாண்டுகள் கொண்ட இப்படிப்பிற்கு, விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் குறிப்பேட்டை பல்கலை அலுவலகம் அல்லது அதன் கல்வி மையங்களில் 500 ரூபாய் செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

தபாலில் பெற விரும்புவோர் 550 ரூபாய்க்கான "டிடி" யை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்கவகையில் எடுத்து "பதிவாளர், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், சைதாப்பேட்டை, சென்னை 15" என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் அக்., 13.
நுழைவுத்தேர்வு நடக்கும் நாள் அக்.,27.
விவரங்களுக்கு  www.tnou.ac.in என்ற இணையதளத்தையோ, 044  2430 6617 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளலாம்.

 

No comments:

Post a Comment