Saturday, September 14, 2013

பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை - கல்வித்துறை உத்தரவு


பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 1½ லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், 10 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 500 உயர்நிலைப்பள்ளிகள், 5 ஆயிரத்து 800 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 1 கோடியே 50 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள். 9-வது வகுப்பு முதல்
பிளஸ்-2 வரை மட்டும் 50 லட்சம்பேர் படிக்கிறார்கள். செல்போன்-பிரச்சினைஇந்த மாணவர்களில் பலர் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டு செல்கிறார்கள். பள்ளிக்கு செல்லும்போதும் சரி பள்ளிக்கூடத்தில் ஓய்வு நேரத்திலும் சரி செல்போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.சிலர் வகுப்பறையில் கூட ‘சுவிட்ச் ஆப்’ செய்யாமல் எஸ்.எஸ்.எம். அனுப்புகிறார்கள். பள்ளிக்கூட அளவிலேயே செல்போனில் விளையாடுகிறார்கள். சிலர் காதல் வயப்படுகிறார்கள். அதற்கு செல்போன் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.இதனால் பாடத்தில் அக்கறை காட்டாமல் தேர்வில் தோல்வி அடைந்து விடுகிறார்கள். அதிக மார்க் எடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தும் அது நிறைவேறாமல் போய்விடுகிறது.ஏற்கனவே பள்ளிக்கூடங்களில் எந்த மாணவரும் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என்று பள்ளிக்கூடங்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்தது. என்றபோதிலும் செல்போன்களை வைத்திருக்கும் வழக்கம் தொடருகிறது. பள்ளிக்கூடத்தில் செல்போனுக்கு தடை இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி நேற்று கூறியதாவது:-ஏற்கனவே பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வரக்கூடாது என்று தடைவிதித்து பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் இருந்து முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக பள்ளிகள் அனைத்துக்கும் சுற்றறிக்கை விடப்பட்டு உள்ளது. இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன் கொண்டுவருவதாக புகார்வருவதால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் எந்த ஒரு மாணவ-மாணவியும் செல்போன் கொண்டு வரக்கூடாது.அவ்வாறு மீறி கொண்டுவருவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த செல்போனை ஆசிரியர் வாங்கி வைத்துக்கொண்டு எச்சரித்து வகுப்புமுடிந்ததும் வீட்டுக்கு செல்லும்போது வழங்குவார். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதாஇது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறுகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வியில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். அதன் காரணமாக விலை இல்லாமல் மாணவர்களுக்கு பல பொருட்களை வழங்கி வருகிறார். செல்போனுக்கும் கல்வித்துறை அதிகாரிகள் கடுமையாக தடை விதித்தால் நன்றாக இருக்கும் என்றனர்.

No comments:

Post a Comment