Friday, September 6, 2013

பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: 342 இடங்கள் காலி

 பி.எட்., முதல்கட்ட கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தம் 342 இடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 21 கல்லூரிகளில் 13 பாடப் பிரிவுகளின் கீழ் உள்ள 2,118 பி.எட். இடங்களில் மாணவர்
சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள லேடி விலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லூரி கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.30) முதல் நடத்தி வருகிறது.
இந்தக் கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வின் கடைசி நாளான வியாழக்கிழமை (செப்.5) பி.எட். தாவரவியல் பிரிவுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. மொத்தம் 220 இடங்களைக் கொண்ட இந்தப் பிரிவுக்கு 320 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 200 இடங்கள் நிரம்பியுள்ளன. 20 இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டுமொத்தமாக 2,118 பி.எட்., இடங்களில் 342 இடங்கள் காலியாக உள்ளன.
காலியாக உள்ள இந்த இடங்களில், முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் தகுதியானவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை செயலர் ஜி. பரமேஸ்வரி கூறினார்

No comments:

Post a Comment