Monday, September 16, 2013

மாணவர்களிடம் பரவும் புதுவித "போதை" பழக்கம்

திண்டுக்கல்லில் சில கல்லூரி மாணவர்களிடம் புதுவித போதை பழக்கம் பரவுகிறது.சிறுவர்களும், மாணவர்களும் ஒயிட்னர், தின்னர் போன்றவற்றை போதை பொருட்களாக பயன்படுத்தினர். சிறுவர்கள் நல அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து, சமீபத்தில் ஒயிட்னர், தின்னர் பயன்பாட்டிற்கு மத்திய சுகாதாரத்துறை தடை விதித்தது.

சமீபகாலமாக, கல்லூரி மாணவர்கள் சிலர் புதுவித, போதை பழக்கத்திற்கு, அடிமையாகி வருகின்றனர். திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களிடம், இப்பழக்கம் வேகமாக பரவி வருகிறது. இதற்காக, குளிர்பான கேனின் அடிப்பகுதிக்கு அருகில் ஒரு பெரிய ஓட்டையும், மேல் பகுதியில் ஒரு சிறு ஓட்டையும் போடப்படுகிறது. அடிப்பகுதி ஓட்டையில், சிறிய ஓஸ் (பைப்) பொருத்தப்படுகிறது. அடிப்பகுதியை நெருப்பால் வாட்டும் போது, ஓஸ் நன்றாக கேனில், அசையாமல் பிடித்து கொள்கிறது.
ஓஸ்சின் மேல் பகுதியில், பிளாஸ்டிக் பேப்பரை சுற்றி, அதில் 4 சிறிய ஓட்டைகள் போடப்படுகிறது. பின்னர், கேனில் சிறிதளவு நீரை ஊற்றி ஓஸ்சின் மேல் பகுதியில், கஞ்சா வைத்து அதில் நெருப்பு வைக்கப்படுகிறது. அதிலில் இருந்து வெளியேறும் புகை, ஓசின் கீழே உள்ள ஓட்டை வழியாக வெளியேறி கேன் நீரில் கலக்கிறது.
கேனின் வாய் வழியாக, மாணவர்கள் உறிஞ்சும் போது, ஒருவித போதை ஏற்படுகிறது. இதில் அதிக போதை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் டி.எஸ்.பி., சுருளிராஜ் கூறுகையில், "கஞ்சா விற்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

No comments:

Post a Comment