Thursday, September 26, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: பங்கேற்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் செப்., 30 ல் நடக்கிறது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தேனி மாவட்டப்பிரிவு சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் இம் மாதம் 30ம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது.

கை, கால் ஊனமுற்ற மாணவ, மாணவியருக்கு 50 ,100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து, வீல்சேர் ரேஸ் 100 மீட்டர்.
பார்வையற்றோருக்கு 50, 100மீ, ஓட்டம் நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், டென்னிஸ் பந்து எறிதல்.
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு, 50, 100 மீ ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல்.
காது கேளாதோருக்கு 100, 200 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறும்.
போட்டிகளில் பங்கேற்க வயதுவரம்பு கிடையாது. முதல் மூன்று இடங்களில் வரும் வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment