Wednesday, September 11, 2013

உலக விண்வெளி வாரம்: மாணவர்களுக்கு கட்டுரை போட்டி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின், திரவ இயக்க அமைப்பு மையம் சார்பில், அக்., 4 முதல், 10ம் தேதி வரையிலான, உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கிடையே, கட்டுரை போட்டி நடக்கிறது.

தமிழகத்தில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், இதில் பங்கேற்கலாம்; எட்டு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியர், "செவ்வாய் கிரகத்தில் குடியேறலாம்" என்ற தலைப்பிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், "பூமியின் வளங்களை பேணுவதில் விண்வெளி ஆய்வின் பங்கு" என்ற தலைப்பில், கட்டுரையை தமிழ் அல்லது ஆங்கில மொழியில் எழுதி அனுப்பலாம்.
மாணவர்கள், தங்கள் கைபட, "ஏ-4" தாளில், ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் வீதம், 2,000 வார்த்தைக்கு மிகாமல் எழுத வேண்டும். பெயர், வயது, வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி, பெற்றோர் பெயர், வீட்டின் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை குறிப்பிட வேண்டும்.
கட்டுரை தங்களால் தான் எழுதப்பட்டது என்பதை உறுதி செய்ய, பள்ளி தலைமையாசிரியரின் ஒப்புதலையும் இணைத்து, அனுப்புதல் அவசியம். கட்டுரைகள், The Administrative Officer, LPSC/ ISRO, Mahendragiri (PO)., Thirunelveli Distric, Pin 627 133. என்ற முகவரிக்கு, செப்., 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, 04637 281210, 281737 அல்லது 94421 40183, 94863 25111 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment