Sunday, September 22, 2013

மாணவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண "மொபைல் கவுன்சிலிங்"

மதுரை உட்பட 4 மாவட்டங்களில், மாணவர்களுக்கு "கவுன்சிலிங்" அளிப்பதற்கான வேன், நேற்று மதுரை வந்தது.
தேர்வில் தோல்வி, குறைந்த மதிப்பெண் பெற்று ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்டிப்பதால், மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலை முடிவுக்கு செல்கின்றனர். இதற்கு தீர்வு காண, மாணவர்களுக்கு உளவியல் ரீதியான "கவுன்சிலிங்" வழங்க, "மொபைல் வேன் கவுன்சிலிங்" திட்டத்தை அரசு துவக்கியது.

இதன்படி, நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேன் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரைக்கு வழங்கப்பட்ட வேனால், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு "கவுன்சிலிங்" அளிக்கப்படும். வேனில், ஒரு மனநல டாக்டர் இருப்பார். பள்ளிகளுக்கு சென்று "கவுன்சிலிங்" அளிப்பார். கல்வி திட்டங்கள், தன்னம்பிக்கை "சி.டி.,"க்களை காண்பிக்க "டிவி" வசதியும் உண்டு.

No comments:

Post a Comment