Thursday, September 5, 2013

பள்ளிக் கல்வி அமைச்சர் வைகை செல்வன் நீக்கம்

 தமிழக பள்ளிக் கல்வி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த வைகை செல்வன் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அப்பணியை, தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக
இருக்கும் பழனியப்பன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவல், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தினமான இன்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக் கல்வித்துறையில் மட்டும் இதுவரை 4 அமைச்சர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment