Thursday, September 26, 2013

பணிக்கு வராத தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

காலாண்டு தேர்வு விடுமுறை நாளில் பணிக்கு வராத அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.

கல்வித்துறையின் அனைத்து வேலை நாட்களிலும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அவசியம் பணியில் இருக்கவேண்டும் என்ற அரசாணை ஏற்கனவே உள்ளது. சில தவிர்க்க, முடியாத காரணத்தால் மட்டுமே பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும்.
தற்போது காலாண்டு விடுமுறை துவங்கிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை கேட்கும் புள்ளி விவரங்களை சேகரிப்பதில் கல்வித்துறை ஊழியர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்தது. இதையொட்டி சி.இ.ஓ.,க்கள் அரசு பள்ளிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். சில பள்ளிகளுக்கு டெலிபோனிலும் பேசி, பணியில் இருக்கிறார்களாக என, உறுதிப்படுத்த முயன்றனர்.
சிவகங்கை உட்பட சில மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பலர் பணியில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் இலவச பொருட்களின் வினியோகம், கல்வி உதவித்தொகை, தேர்வு பெயர் பட்டியல்களை பெற முடியவில்லை.
அரசின் விதிமுறையை மீறி பணிக்கு வராத தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment