Thursday, November 14, 2013

HAPPY CHILDREN'S DAY

பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை

கூடலூர் பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக்கூடாது, என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என கூடலூர் நகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. சுகாதாரத் துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க, மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

Wednesday, November 13, 2013

வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட "மங்கள்யான்"

"மங்கள்யான்" செயற்கைக்கோள், வெற்றிகரமாக, ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, "மஙகள்யான்" செயற்கைக்கோள், தற்போது பூமியை, நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்ட பாதையின் உயரத்தை அதிகரிக்க, பல கட்டங்களாக பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை நடந்த, நான்காம் கட்ட முயற்சியில், குறிப்பிட்ட வேகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை,

குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு

குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை

ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

Friday, November 8, 2013

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்" மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர மொபைல் வேன் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக 10 வேன்களை கல்வித்துறை வழங்கி உள்ளது.

டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.

Thursday, November 7, 2013

செவ்வாய் கிரகத்தை அடைய மங்கள்யானுக்கு 10 மாதங்கள் ஏன்?

பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்" செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்" என "அறிவியல்புரம்" இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார்.

குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள்: காற்றில் பறக்கும் உத்தரவு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்" என 7,000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4% பேர் தேர்ச்சி

Tuesday, November 5, 2013

Equivalence of Degree

Equivalence of Degree – various educational qualifications
possessed by the candidates as equivalent to the courses offered by the various
Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued
.

கனமழை: புதுச்சேரி, கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக,புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதேப் போல் கனமழை காரணமாக,கடலூரில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டத்திற்கு வராத ஆன தலைமையாசிரியர்களுக்கு கண்டிப்பு

மதுரையில் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தலைமையாசிரியர்கள் "ஆப்சென்ட்" ஆனதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். மருத்துவ விடுப்பு எடுத்த தலைமையாசிரியர்களது சான்றிதழ்களை "மெடிக்கல் போர்டுக்கு" அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விருது பெற்ற நடுநிலைப் பள்ளி; மூடத்துடிக்கும் கல்வித் துறை

ஜி. தும்மலப்பட்டியில் பவள விழா கண்ட பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஜி. தும்மலப்பட்டியில் 1922 ஜூன் 26ல் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் ஆரம்பபள்ளி துவங்கப்பட்டது. 91 ஆண்டுகளான இப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து உள்ளது.

ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்

பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
பள்ளிகல்வித்துறை உத்தரவுப்படி மாவட்ட வாரியாக 9ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதற்கென விஞ்ஞானிகள் தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார்.

Monday, November 4, 2013

இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து கற்கும் மாணவிகள்

அமர்வதற்கு பெஞ்ச் இல்லாததால், அரசு பள்ளி மாணவிகள், தினமும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்போர், குறிப்பாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு இலவச சைக்கிள், பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை மட்டுமின்றி மாணவிகள் அமரும் வகையில் டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றையும் வழங்கி வருகிறது.

மாதிரி பள்ளிகள் குறித்த அரசு முடிவு: மாநில அரசின் உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தல்

மாதிரி பள்ளிகள் குறித்து டில்லியில் நடக்கும் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கல்வி அமைச்சர் பங்கேற்று மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.