Tuesday, December 31, 2013

HAPPY NEW YEAR-2014


பொதுத்தேர்வு எழுதுவோர் விவரம்: அடுத்த வாரம் வெளியாகிறது

 பொதுத் தேர்வு எழுதுவோர் விவரங்களை அடுத்த வாரம் வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டு உள்ளது. பிளஸ் 2 தேர்வை 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை 10.5 லட்சம் பேரும் எழுதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை இடமாற்றம் செய்ய, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து, பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இயற்கை விவசாயக் கல்வியை வலியுறுத்திய விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்

 
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.


தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர் நம்மாழ்வார்.

குரூப்-1 பணியிடம் அளிப்பதில் விதிமீறல்

குரூப்-1 காலி பணியிடங்களை, உரிய விதிமுறைப்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,), அரசு உயர் அதிகாரிகள் அளிப்பதில்லை எனவும், இதன் காரணமாக சொற்ப இடங்களே காட்டப்படுவதாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதை டி.என்.பி.எஸ்.சி., வட்டாரமும் ஆமோதித்துள்ளது.
அரசு விதியின்படி ஒவ்வொரு ஆண்டும் நவ., 1ம் தேதி குரூப்-1 நிலையில் உள்ள காலி பணியிடங்களை கணக்கெடுக்க வேண்டும். பின் இரு பணியிடங்கள், பதவி உயர்வுக்கும், ஒரு பணியிடம் நேரடி நியமனத்திற்கும் என பிரித்து அதன்படி, பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பதவி உயர்வு வழங்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

தொடக்கக் கல்வியில் பணி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும், முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்" என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், தொடக்கக் கல்வித்துறையில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 2004-05ம் ஆண்டு முடிய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், ஐந்தாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது எனவும், ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு அந்தந்த பாட பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பது எனவும் அரசு முடிவெடுத்தது.

Monday, December 30, 2013

Collaborative Leavning through “ Conneting Class Room” across Tamil Nadu

NMMS 2012 FINAL INSTRUCTION


ALL SCHOOLS SHOULD ENSURE THAT THE BANK ACCOUNT No. WHICH OPENED FOR NMMS 2012 BY SELECTED STUDENTS MUST BELONG TO STATE BANK OF INDIA ONLY. 

THE SCHOOLS THOSE WHO ARE NOT SENDING NMMS 2012 SELECTED CANDIDATES PARTICULARS IN PRESCRIBED FORMAT YET , INSTRUCTED TO SEND IMMEDIATELY WITHOUT FAIL. MATTER MOST URGENT. FAILED SCHOOLS WOULD BE VIEWED SERIOUSLY.

Chief Educational Officer,
Coimbatore

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு பதவி உயர்வு

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு நேற்று நடந்த கலந்தாய்வில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த 897 பேருக்கு பதவி உயர்வு வழங்க மாநிலம் முழுவதும் நேற்று கலந்தாய்வு நடந்தது.

11ம் வகுப்பிற்கு முப்பருவ கல்வி: வலியுறுத்தும் கல்வித்துறை

தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில் முழுக்க முழுக்க பிளஸ் 2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ் 1 வகுப்பிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்" என கல்வித்துறை வலியுறுத்தி உள்ளது.

ஏப்ரல் 26ம் தேதி குரூப்-1 தேர்வு நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட 79 பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப்-1 முதல்நிலை தேர்வு, ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.

தேசிய தகுதித் தேர்வு: 15 ஆயிரம் பேர் பங்கேற்பு

கல்லூரி மற்றும் பல்கலைகளில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான, யு.ஜி.சி.,யின் தேசிய தகுதித் தேர்வு (நெட்) நேற்று நடந்தது.

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆசிரியர்களின் கற்பித்தல் முறை சி.டி.,களில் பதிவு

 பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ள வீடியோ, ஆடியோ கற்பிக்கும் முறைக்காக, ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நிகழ்வுகளை சி.டி.,களில் பதிவு செய்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ்2 வகுப்பில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகளை, சி.டி.,களில் பதிவுசெய்து, அவற்றின் மூலம் மற்ற பள்ளி மாணர்களுக்கு கற்பிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Saturday, December 28, 2013

பட்டதாரி ஆசிரியருக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்

பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங் நாளை 32 மாவட்டங்களிலும் நடக்கிறது. ஜன., 1ம் தேதி முதல் முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு இந்த கவுன்சிலிங் நடக்கிறது.

3ம் பருவ பாடப் புத்தகம்: பள்ளிகளுக்கு விநியோகிக்கும் பணி துவக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான 3ம் பருவத்திற்கான புத்தகங்களை விநியோகிக்கும் பணி துவங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்கள் இயங்கி வருகிறது. பெங்களூரு, ஜதராபாத் மாநிலங்களில் அச்சடிக்கப்பட்ட தமிழக அரசின் பாடத்திட்ட 3ம் பருவத்திற்கான புத்தகங்கள், நேற்று முன்தினம் விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் பதவி உயர்வு அளிக்க கோரிக்கை

நேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்" என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், வலியுறுத்தி உள்ளது.

Thursday, December 26, 2013

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

குழந்தைகள் தொடர்பான பிரச்னை: பள்ளிகளில் ஆலோசனை பெட்டி

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஜன., முதல் குழந்தைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு ஆலோசனை பெட்டி வைக்கப்பட உள்ளது.

47% பட்டதாரிகள் பணிகளைப் பெற தகுதியற்றவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் வழங்கப்படும் வழக்கமான கல்விமுறை, பணி வாய்ப்புக்கான திறன்களை மாணவர்களுக்கு வழங்காதபடியால், குறைந்தபட்சம், இந்தாண்டின் பாதியளவு பட்டதாரிகள், எந்தப் பணியையும் பெற முடியாமல், வேலையற்று இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Wednesday, December 25, 2013

உதவி பெறும் 3 பள்ளிகள் அரசிடம் ஒப்படைப்பு தொடர்ந்து நடத்த முடியாததால் நிர்வாகத்தினர் முடிவு

வால்பாறையில் உள்ள உதவி பெறும் 3 பள்ளி கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் பள்ளி நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.தொடக்க பள்ளிகள் கோவை மாவட்டத்தில் 1,341 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது

பார்வையற்ற பி.எட். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பதற்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவும், தேர்வுக்காக இலவச பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் பி.எட். படித்து விட்டு ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் பலர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர்.

இடைநிலை ஆசிரியர் சம்பளம் தொடர்பாக மனு தாக்கல்

இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மத்திய அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணையாக மாற்றியமைக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணை, இரண்டு வாரங்களுக்கு, தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வு: அடுத்த வாரம் முடிவுகள் வெளியீடு

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு அடுத்த வாரத்தில் வெளியாகிறது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூனில் நடந்த ஆசிரியர் பயிற்சி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வை, "ரெகுலர்" மாணவர் மற்றும் தனி தேர்வு மாணவர் என 40 ஆயிரம் பேர் எழுதினர். தற்போது, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்ததை அடுத்து, அடுத்த வாரத்தில் முடிவு வெளியாகும் என துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கம்

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்" ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதனால், பல லட்சம் ரூபாயை கொட்டிக் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tuesday, December 24, 2013

ஆஸ்திரேலியாவில் சிறப்பு ஒலிம்பிக்: சிவகாசி மாணவருக்கு 2ம் இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் சிவகாசி மாணவர்மோனிஸ் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
சிவகாசி ரிசர்வ் லையனை சேர்ந்த ராஜா, தங்கராதா தம்பதியினரின் 2வது மகன் மோனிஸ்,13. இவர், மூளை வளர்ச்சி குன்றியவர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "அகாப்ட்" என்னும் சிறப்பு பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.

மத்திய அரசின் "ஸ்காலர்ஷிப் திட்டம்" நடுநிலைப்பள்ளிகளுக்கு தகவல் இல்லை

"எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

யு.ஜி.சி., நெட் தேர்வு 29ம் தேதி நடக்கிறது

யு.ஜி.சி., நடத்தும் நெட் தேர்வு சென்னையில் 13 மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது.
பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., சார்பில் விரிவுரையாளர்களுக்கான, "நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட் - நெட்" தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.  இந்தாண்டிற்கான தேர்வு, இம்மாதம், 29ம் தேதி, நாடு முழுவதும் நடக்கிறது.

முதுகலை தமிழாசிரியர் பணி: 694 பேருக்கு அழைப்பு

நீண்ட இழுபறிக்குப் பின், முதுகலைத் தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), நேற்று வெளியிட்டது. தேர்வெழுதிய, 1.6 லட்சம் பேரில், 694 பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த ஜூலை 21ல், தேர்வு நடந்த நிலையில் தமிழ் அல்லாத பிற பாடங்களின் தேர்வு முடிவு அக்., 7ம் தேதி வெளியானது. வழக்கு காரணமாக தமிழ் தேர்வு முடிவு வெளியாகவில்லை.

Sunday, December 22, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.
கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.

பள்ளிகளில் "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைக்கும், "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட நடவடிக்கை துவங்கி உள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும் விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக, "கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தில், இணையதள வசதி மூலம் புராஜக்டர் மற்றும் ஆடியோ சிஸ்டம் கொண்டு, ஒரு வகுப்பறையில் நடத்தும் பாடத்தை, அனைத்து பள்ளிகளிலும், அதே பிரிவை சேர்ந்த மாணவர்கள் கவனிக்கவும், விவாதம் நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர் காலியிடம்: பிளஸ் 2 மாணவர்கள் பாதிப்பு

அரசு பள்ளிகளில் 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் அரசு பொதுதேர்விற்கு தயாராகும் பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: கல்வித்துறை உத்தரவு

உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Saturday, December 21, 2013

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை தர வேண்டும்

உயர் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் மாணவர்களிடையே ஆர்வத்தை தூண்டுகின்ற தலைசிறந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு - 22.65 லட்சம் மாணவர்கள் பதிவு

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர். மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில் 21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

அதிகமாக பொரித்த உணவை சாப்பிட கூடாது: மாணவர்கள் மூலம் பெற்றோருக்கு விழிப்புணர்வு

பொரித்த உணவை அதிகமாக உட்கொள்வதால் இதயநோய் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் மாணவர்கள் மூலம் இதனை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.

தேசிய நல்லாசிரியர் விருது: தேர்வுக் குழுவுக்கு "கிடுக்கிபிடி"

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யும் தேர்வுக் குழு மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

நிதி பற்றாக்குறையால் மெட்ரிக் பள்ளியை மூட முடிவு: பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை கணபதி பகுதியில் உள்ள குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை வரும் கல்வியாண்டுடன் மூட உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கு முழுக்கா?

"அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்துடன் இணைப்பது குறித்து எவ்வித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை" என பள்ளிக் கல்வித்துறை, முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில் புதிய தேர்வு மையம்: தேர்வுத்துறைக்கு பரிந்துரை

சர்ச்சையில் சிக்காத பள்ளிகளில், புதிதாக 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மையம் அமைக்க, தேர்வுத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மார்ச் 3ல் பிளஸ் 2 வகுப்புகளுக்கும், மார்ச் 26ல், 10ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ளன.

ஆங்கில பொது தேர்வுக்கு விடுமுறை இல்லையா? மாணவர்கள் புகார்

பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படாததால், பள்ளி கல்வித்துறைக்கு மாணவர்கள் புகார் அனுப்பியுள்ளனர்.
வரும் மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகளும், மார்ச் 26 முதல் ஏப்., 9ம் தேதி வரை, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் நடக்கின்றன. தேர்வின்போது, மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதற்கு வசதியாக இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

Friday, December 20, 2013

1,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு

தமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு சில நாள்களில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து அவர்களுக்கான பதவி உயர்வு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிக்காக சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) வெளியிட்டுள்ளது.
இந்த சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதும் பார்வையற்றவர்களுக்கும், அவர்களது உதவியாளர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

பொது நூலகத்துறை 30 கோடி ரூபாய்க்கு, தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாங்க உள்ளது. "இதற்கு, ஜன., 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் (கூடுதல் பொறுப்பு நூலகத் துறை) அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 2ம் வாரத்துக்குள் விடைத்தாள் மதிப்பீடு முடிக்க நடவடிக்கை

லோக்சபா தேர்தலை, ஏப்ரல் மாதத்தில் நடத்துவதற்கான சாத்தியக்கூறு உள்ளதால், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் இரண்டாவது வாரத்துக்குள் முடித்து விட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவு வெளியாவதில் மீண்டும் சிக்கல்

மதுரை கிளையில் வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளதால், முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

விடுமுறையிலும் சிறப்பு வகுப்பு நடப்பதால் சர்ச்சைடிசம்பர்

நீலகிரியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில், விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகளை நடத்துவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், அரசுப் பள்ளிகள், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல செயல்படுகின்றன. இந்நிலையில், உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பல, மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தில் முனைப்பு காட்டுகின்றன. இதனால், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, காலை, மாலை நேரங்களில் பள்ளி நேரம் தவிர்த்து, கூடுதல் நேரங்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் உட்பட அரசு விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்துகின்றன.

அரசு பள்ளிகளில் மின் சிக்கன வார விழா

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மன கழகத்தின், நாமக்கல் அடுத்த தத்தாத்திரிபுரம் மின்வாரிய அலுவலகம் சார்பில், ஏளூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே, மின்சிக்கனம் குறித்த விழிப்புணர்வு வார விழா நடந்தது.

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நாளை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
"சிபாகா" (கோவை பில்டர்ஸ் மற்றும் கான்ராக்டர்ஸ் அசோசியேஷன்) அமைப்பின் தலைவர் சேகர் கூறியதாவது: மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, அவர்களை ஊக்கப்படுத்தக் கூடிய அனைத்து விதமான செயல்களையும் சிபாகா செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பினை வழங்குகிறது. இதற்கு பொதுமக்கள் ஆதரவை சிபாகா கோருகிறது.

Thursday, December 19, 2013

பி.எட். தேர்வு: மாநில அளவில் திருவண்ணாமலை மாணவர் சிறப்பிடம்

திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர், பி.எட். தேர்வில் மாநில அளவில் 7-ம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அண்மையில் பி.எட். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியரின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் திருவண்ணாமலை விக்னேஷ் கல்வியியல் கல்லூரி மாணவர் எம்.பிரபு, மாநில அளவில் 7-வது இடம் பிடித்துள்ளார்.

எம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு

இந்திராகாந்தி தேசிய நிறந்தநிலை பல்கலைக்கழகத்தில், 2014ம் கல்வியாண்டில் ஜூலை மாதத்தில் சேர்க்கை பெற அழைப்பு விடுத்துள்ளது.
எம்.பில், (எஜூகேஷன், எகனாமிக்ஸ, சோசியலாஜி, அரசியல் அறிவியல்)
பி.எச்டி., (மெக்கானிக்கல், வராலாறு, பொருளாதாரம், சோசியாலஜி, நூலக மற்றும் தொழில்நுட்ப அறிவியல், அந்திரோபாலஜி, அரசியல் அறிவியல், பைன் ஆர்ட்ஸ்) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றன.

மாணவரின் தேர்வு பயத்தை குறைக்க ஆசிரியர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில், பொதுத்தேர்வை சந்திக்கும் எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவரின் மன அழுத்தம் மற்றும் தேர்வு பயத்தை குறைக்க, ஆசிரியர்களுக்கு  சிறப்பு, "கவுன்சலிங்" வழங்கப்படுகிறது.

பள்ளிக்கு யானைகள் "விசிட்": சுற்றுச்சுவர் இல்லாததால் அச்சம்

வால்பாறை அருகே, சுற்றுச்சுவர் இல்லாத துவக்கப்பள்ளிக்கு, யானைகள் அடிக்கடி விசிட் அடிப்பதால், மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் 43 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளும், 8 நடுநிலைப் பள்ளிகளும், 9 அரசு நிதியுதவி பெறும் துவக்கப் பள்ளிகளும், 2 அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இது தவிர 5 அரசு நலப்பள்ளி, அரசு உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி உட்பட மொத்தம் 88 பள்ளிகள் செயல்படுகின்றன.

Wednesday, December 18, 2013

சென்னை ஐ.ஐ.டி மாணவர்களுக்கு இந்த ஆண்டு கூடுதல் வேலை வாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் 600 பேருக்கு வளாக நேர்முக தேர்வில் இந்த ஆண்டு சுமார் 181 நிறுவனங்களிடம் இருந்து 716 பணி வாய்ப்புகள் வந்துள்ளன. இதுகுறித்து இந்திய தொழில்நுட்ப கழகத்தின் துணைப்பதிவாளர்  லெப்டினன் கேனல் ஜெயக்குமார், கூறும் போது

பொது தேர்வில் முறைகேட்டை தடுக்க மாஸ்டர் பிளான்

 தமிழக கல்வித்துறை வரலாற்றில் மாவட்டங்களில் உள்ள கல்வித்துறை அதிகாரிகளே அரசு பொது தேர்வுக்குரிய சூப்ரவைசர்கள், பறக்கும்படை உறுப்பினர்களை அந்தந்த மாவட்டத்திற்கு நியமனம் செய்து வந்தனர். தேர்வுகளில் முறைகேட்டை தடுக்கும் வகையில் முதல், முதலாக சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறையில் இயக்குனர்களே இந்த நியமனத்தை செய்ய உள்ளனர்.

பதவி உயர்வை வெறுத்த ஆசிரியர்கள்: அவசர அழைப்பால் ஏமாற்றம்

பள்ளிக் கல்வித் துறையின் அவசர பதவி உயர்வு "கவுன்சிலிங்"கை, ஆசிரியர்கள் பலர் வெறுத்து, "தற்காலிகமாக வேண்டாம்" என பதில் கொடுத்துள்ளனர்.