Wednesday, December 31, 2014

WELCOME 2015

டி.ஆர்.பி. தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில், கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கு ஜன.,6 மற்றும் 8 ல் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Saturday, December 27, 2014

என்.எம்.எம்.எஸ். தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் பங்கேற்பில்லாத அவலநிலை

கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவித் பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் 650 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அதிக மதிப்பெண்கள் பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இவர்கள் மருத்துவம்,பொறியியல், வேளாண்மை ஆகிய உயர் படிப்புகளை மேற்கொள்வதற்காக சிறந்த ஆசிரியர்கள், வல்லுனர்கள் மூலம் வழிகாட்டுதல்கள் அளிக்கப்படுகிறது. சின்னசேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும், கள்ளக்குறிச்சி அடுத்த பெரிய சிறுவந்தூர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கும் ஊக்குவிப்பு பயிற்சி முகாம், இன்று (26ம் தேதி) துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இத்தகவலை விழுப்புரம் சி.இ.ஓ., மார்ஸ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களிடையே செஸ் மீதான ஆர்வம் அதிகரிப்பு: விஸ்வநாத் ஆனந்த்

மாணவர்களிடையே செஸ் விளையாட்டின் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதாக செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: செஸ் விளையாட்டில் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதனை கற்றுக்கொள்ள ஆகும் செலவு குறைவாகும்.
பிற விளையாட்டுகளை போன்று இந்த விளையாட்டிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மாநில அரசும் பள்ளிகளி்ல் கற்று தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என அவர் கூறினார்.

உலகின் சிறந்த 10 விஞ்ஞானிகளில் இஸ்ரோ தலைவருக்கு முதலிடம்!

2014-ம் ஆண்டிற்கான, உலகின் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Thursday, December 25, 2014

குரூப்-2 தேர்வானவர்களுக்கு 29-ல் கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு டிச.29-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. விஏஒ தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.27-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

குரூப்-4 தேர்வில் 10 லட்சம் பேர் போட்டி; உணர்த்துவது என்ன?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் - 4 பணிகளுக்கான தேர்வுகளில், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று இருக்கின்றனர். அரசுப் பணிகள் தேர்வு என்றாலே, லட்சக்கணக்கில் பங்கேற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் அடையாளம் இது; வேலைவாய்ப்பும் குறைவாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.

பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

புதிய உத்திகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

பள்ளி வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கற்றல் மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகள் கையாண்டிருந்தால், அவற்றை இணையதளத்தில் பதிவுசெய்ய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேலி, கிண்டலுக்கு ஆளாகும் பள்ளி மாணவிகளுக்கு நிம்மதி

கேலி செய்பவர்கள் குறித்து அறிய சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் போலீசார் தனித்தனியாக கவுன்சிலிங் நடத்தினர்.
மாணவிகளை கிண்டல் செய்பவர்களை கண்டறிய பள்ளி வாளகத்தில் புகார் பெட்டி வைப்பதற்கும், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கட்டாய கல்வி சட்டத்தின்கீழ் சேர்க்கை நடத்த மாட்டோம்: தனியார் பள்ளிகள்

கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

Wednesday, December 17, 2014

ஆன்சர் கீ தயாரிக்கப்பட்டு விடைத்தாள் திருத்தப்படும்: முதன்மை கல்வி அலுவலர்

"மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான சிறப்பு ஆன்சர் கீ தயாரிக்கப்பட்டு, அதன்படி விடைத்தாள் திருத்தப்படும்" என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்தார்.

3ம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு இலவச பாடபுத்தகங்கள் வழங்கி வருகிறது. 2014-15ம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான பாடபுத்தகங்கள் வினியோகிக்கும் பணி, நேற்று துவங்கியது.

ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, திட்டம் தயாரித்தல் குறித்த பணியிடை பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில் 6, 7, 8ம் வகுப்பு அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை மற்றும் திட்டம் தயாரித்தல் குறித்த பணியிடை பயிற்சி அடுத்தாண்டு ஜன., 6, 7, 8 ல், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tuesday, December 16, 2014

கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவர்கள் அவதி: 8-ம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் பயனில்லை

எட்டாம் வகுப்பு திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்காமல் 6,695 மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வெளிச்சத்திற்கு வந்த பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்

திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்தில் மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறையே: அமைச்சர் ஸ்மிருதி இரானி

கிறிஸ்துமஸ் திருநாளில் பள்ளிகள் செயல்படும் என, செய்தித்தாளில் வெளியான செய்தி தவறானது. அன்று வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறையே என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பி.எட். சேர்ப்பு முறைகேடு: இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருநெல்வேலி சுடலைக்கண்ணு மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) விதிமுறைகளுக்கு மாறாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை தொலைக் கல்வியில் 2010 ல் பி.எட்., படிப்பில் 500 பேருக்கு பதிலாக 523 பேர், 2011ல் போதிய கல்வித் தகுதி இல்லாத 16 பேரை அனுமதித்தனர்.

வி.ஏ.ஓ. தேர்வின் முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி

கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி(2014) டி.என்.பி.எஸ்.சி. நடத்திய கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) பதவிக்கான எழுத்துத் தேர்வின் முடிவுகள், டிசம்பர் 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் பரமக்குடி பள்ளி ஆசிரியர் சாதனை

மாநில அளவில் சென்னையில் நடந்த அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில், பரமக்குடி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாகராஜன் சாதனை படைத்தார்.

Sunday, December 14, 2014

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க இயலாது: தமிழக அரசு அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ரூ.5200 - ரூ.20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2800, தனி ஊதியம் ரூ.750 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.9300-ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

10ம் வகுப்பு அரையாண்டு தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி: ‘புளூ பிரின்ட்’படி வினாக்கள் இல்லை

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரையாண்டு தேர்வில், தமிழ் முதல் தாள் வினாத் தாளில், ‘புளூ பிரின்ட்’படி நெடுவினாக்கள் இடம்பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

குழந்தைகளின் ஸ்பெல்லிங் திறன் மேம்பட...

ஸ்பெல்லிங் எனப்படும் எழுத்துக்கள்தான் ஒரு வார்த்தையை உருவாக்குவதற்கான மூலாதாரங்கள். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால், படிப்பதற்கும், எழுதுவதற்கும் துணைபுரிய பல சாதனங்கள் வந்துவிட்டதால், ஸ்பெல்லிங் தொடர்பான பழக்கங்கள் குறைந்துவிட்டன.

துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மேற்கு வட்டார வளமையம் சார்பில், துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் குழந்தை விஞ்ஞானி விருதுக்கு தேர்வு

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் குழந்தை விஞ்ஞானி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாராட்டினார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த ஜூன் மாதம் நடந்த, குரூப் - 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

Friday, December 12, 2014

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் 649 பேருக்கு டிச.16-ல் நிர்வாக பயிற்சி

தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சென்னை, விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த கூடுதல் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி டிசம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை சென்னையில் நடந்தது.

25 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 89,954 மாணவர்கள் சேர்ப்பு: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு

கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 89 ஆயிரத்து 954 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் 2013-14ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் 49,864 மாணவ, மாணவி களும், நடப்பு கல்வி ஆண்டில் 89,954 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2013-14ம் ஆண்டில் சேர்க்கப் பட்ட மாணவர்களுக்காக தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணம் ரூ.25.13 கோடி கோரி அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. 25 சதவீத இடஒதுக்கீட்டின்கீழ் நுழைவுநிலை வகுப்பில் (1-ம் வகுப்பு) ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப் பிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு மே 3 முதல் 9-ம் தேதி வரை என்பது மே 18-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, வாய்ப்பு கள் மறுக்கப்பட்ட மற்றும் நலி வடைந்த பிரிவினர் அனைவரும் பயன்பெற வசதியாக பள்ளி தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்கள் வரை இச்சேர்க்கையை மேற்கொள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதன் படி மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

680 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நீட்டிப்பு: அரசு உத்தரவு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் குறுகிய கால பயிற்சி பெற்ற பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்தில் கொண்டுவருவதற்காக உபரியாக இருந்த 702 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் சரண் செய்யப்பட்டன.

விடுமுறை எடுத்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்டிசம்பர்

பள்ளிக்கு வராமல் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கல்வித் துறை வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு

”கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,” என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பட்டாசு வீசி தாக்குதல்

கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வின் போது உள்ளே புகுந்த கும்பல், பட்டாசு வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தால் 89,954 பேர் சேர்ப்பு

தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த ஆண்டு 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில தலைமை தொடர்பு அலுவலரும், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனருமான பிச்சை தெரிவித்து உள்ளார்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம்

சி.பி.எஸ்.இ., பள்ளி வகுப்புகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தர தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

Thursday, December 11, 2014

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதியில் நிறுத்தும் தனியார் பள்ளிகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க மறுப்பதுடன், பாதியில் நிறுத்தும் அவலமும் நீடிக்கிறது. இதனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அவர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க பள்ளிகளில் ‘பொங்கல்’ விடுமுறை நாளாக அறிவிப்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 10, 2014

பள்ளிக் கல்வி இயக்குநர் திடீர் இடமாற்றம்

பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் நேற்று திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவர் மாநில ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை அந்த பதவியில் இருந்து வந்த எஸ்.கண்ணப்பன் மாற்றப்பட்டு, பள்ளிக்கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் டி.சபீதா பிறப்பித்துள்ளார்.

CPS ஓய்வூதிய திட்டத்தில் குளறுபடி - ஆசிரியர்கள் குற்றச்சாட்டு