Thursday, March 27, 2014

தேர்வு நேரத்தில், டி.இ.டி., பணி தேவையா?

தேர்வு நேரத்தில், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மிகவும் அவசியமா" என மாவட்டங்களில் உள்ள கல்வி அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தேர்வுப் பணி முடிந்தபின், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருத்துவமனையில் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவி

விபத்தில் சிக்கிய 10ம் வகுப்பு மாணவி, அரசு மருத்துவமனையில், ஆசிரியர் உதவியுடன், தேர்வு எழுதியுள்ளார்.
கடலூர் மாவட்டம், வீரபெருமாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 15; பண்ருட்டி சுப்புராய செட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவி.

தமிழ் முதல்தாள் எளிது: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

தமிழ் முதல்தாள் மிக எளிதாக இருந்தது" என மாணவர்கள், ஆசிரியர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வி.ஏ.ஓ., தேர்வு: விண்ணப்பிக்க முடியாமல் மாற்றுத் திறனாளிகள் தவிப்பு

அரசு பணி தேர்வாணையத்தால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வி.ஏ.ஓ., தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு ஒதுக்கீட்டில், குளறுபடி செய்துள்ளதால், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முறைகேடு நடக்காமல் இருக்க...தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு

பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்" என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

கணினி அறிவியலில் தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர். இத்தேர்வு குறித்து மாணவர்கள், ஆசிரியரின் கருத்து......

Monday, March 24, 2014

8ம் வகுப்பு நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .

mid¤J eLãiy¥gŸëæš v£lh« tF¥ò gæY« khzt khzéa®fS¡F 2013-2014-M« fšé M©o‰fhd KG M©L¤ nj®é‰கான fhy m£ltid...

03/04/2014 - வியாழன்  - தமிழ் 
08/04/2014 - செவ்வாய்  -ஆங்கிலம் 
10/04/2014 - வியாழன்   -கணிதம் 
11/04/2014  - வெள்ளி     -E.V.S/P.E.T
15/04/2014 - செவ்வாய்   -அறிவியல் 
16/04/2014 - புதன்              -சமூக  அறிவியல்

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான() முடிவுகளை சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ளது. http://cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மின்தடையால் படிப்பும் தடை; 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ம் தேதி துவங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக துவங்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டு மாணவர்கள் மத்தியில் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

3% இடஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிப்பு; மாற்றுத் திறனாளி அமைப்புகள் அதிருப்தி

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சதவீத இடஒதுக்கீடு உத்தரவு முற்றிலும் செயல்படுத்தப்படாமல் உள்ளதாக மாற்றுத் திறனாளிகளின் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: தேர்வு துறை புது திட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில், சீனியர் ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், ஜுனியர்களை ஈடுபடுத்த வேண்டும்" என தேர்வுத்துறை உத்தரவிட்டு உள்ளது.

வாக்காளர் பட்டியல் பணி: 4 ஆண்டுகளாக ஆசிரியர்கள் காத்திருப்பு

மதுரை மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, நான்கு ஆண்டுகளாக மதிப்பூதியம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரோபோ எழுதிய செய்தி பத்திரிகையில் வெளியீடு

இயந்திர மனிதன் (ரோபோ) எழுதிய செய்தி, அமெரிக்காவின் "தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்"பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Sunday, March 23, 2014

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட், மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த டிசம்பர் மாதத்தில் B.Ed., B.Ed(Se) ஆகிய படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிட்டன. தேர்வு முடிவுகளில் சந்தேகம் கோரி விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

மார்ச் 24 முதல் குரூப் 4 கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணியிடங்களை ஒதுக்குவதற்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

10ம் வகுப்பு தேர்வு ஏற்பாடுகள் தீவிரம்: பறக்கும் படை தயார்

இன்னும் மூன்று நாட்களில் (26ம் தேதி) துவங்க உள்ள 10ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை தீவிரமாக செய்து வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

பிளஸ் 2 உயிரியல் வினாத்தாளில் குளறுபடி: "சென்டம்" வாய்ப்பு குறைவு

பிளஸ் 2 பொதுத்தேர்வருக்கான உயிரியல் வினாத்தாளில், நான்கு ஒரு மதிப்பெண் வினாவும் ஒரு மூன்று மதிப்பெண் வினாவிலும் பிழை இருப்பதால், தேர்வர்கள் குழப்பத்துக்கு ஆளாகினர். அதனால், உயிரியல் பாடத்தில் சென்டம் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.

மேலந்தல் பள்ளி ஆசிரியர்கள் மீது மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை

பள்ளிக்கு வராமல் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட ஏழு ஆசிரியர்கள் மீது, மாவட்ட கல்வி அதிகாரி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தென்னாப்ரிக்க பள்ளிகளில் இந்திய மொழிப் பாடங்கள்

தென் ஆப்ரிக்க பள்ளிகளில் இந்தி, தமிழ், குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட, இந்திய மொழிகளைக் கற்பிக்க அந்நாட்டு கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

அறிவியல் உபகரணங்கள் வாங்க தலைமை ஆசிரியர்கள் மறுப்பு

அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் கடந்த 2011ம் ஆண்டு முதல் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த அறிவியல் உபகரணங்கள் வாங்க, ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

டி.இ.டி., 2ம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7ல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்., 7 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ளது.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து கடந்த மாதம் முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் 3 கேள்விகள் தவறு: மதிப்பெண் வழங்க வலியுறுத்தல்

: பிளஸ் 2 உயிரியல் பாட தேர்வில் மூன்று, ஒரு மதிப்பெண் கேள்விகள், தவறாக கேட்கப்பட்டுள்ளன. இதற்குரிய மூன்று மதிப்பெண்ணை தேர்வுத்துறை வழங்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, March 21, 2014

தமிழகத்தில் குரூப்-2ஏ தேர்வு ஜூன் 29-க்கு ஒத்திவைப்பு

மக்களவை தேர்தல் பணிகள் காரணமாக, மே 18-ல் நடைபெறவிருந்த குரூப்-2ஏ தேர்வு, ஜூன் 29-ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

எஸ்.எம்.எஸ். மூலம் மாதிரி வினாக்களைப் பெறும் வசதி அறிமுகம்

பத்தாம் வகுப்பு முதல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் வரை பல்வேறு விதமான தேர்வுகளுக்கான மாதிரி வினாக்களை எஸ்.எம்.எஸ். மூலம் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை ஏப்ரல் 28-ஆம் தேதிக்குப் பதிலாக, மே இறுதியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., நுழைவுத்தேர்வு நாளை தொடக்கம்

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., மற்றும் எம்.டெக்., பாடப்பிரிவுகளுக்கான நுழைவு தேர்வுகள் நாளை துவங்குகிறது.

10ம் வகுப்பு தேர்வு நேரம்: அரசு ஆசிரியர்களிடையே குழப்பம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 உயிரியல் தேர்வு எப்படி: மாணவர்கள் கருத்து

உயிரியல் பாடத்தில், 200 மதிப்பெண் பெறுவது கடினமே" என பிளஸ் 2 மாணவர்கள், ஆசிரியை கருத்து தெரிவித்துள்ளனர்.
கே.அபிநயா (மாணவி, என்.எம்.ஆர்.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவில்லிபுத்தூர்): உயிரியல் பாடத்தில், விலங்கியலில் 10, 3 மார்க் கேள்விகள் எளிதாக இருந்தது. ஐந்து மார்க் கேள்விகள் கட்டாய வினாக்கள் மட்டுமின்றி, எதிர்பாராத கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தது.

பொது தேர்வுகளில் எந்த மாதிரி பேனாக்களை பயன்படுத்தலாம்

பொது தேர்வுகளில் நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள "ஜெல்" பேனாக்களையும் விடை எழுத பயன்படுத்தலாம் என கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.

கல்வி மாவட்டத்தை பிரிக்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

நாமக்கல் கல்வி மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்க வேண்டும்" என நாமக்கல் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.

தேர்வு மையம் கேட்டு மாணவர்கள் மறியல்

கல்லல் முருகப்பா பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையம் செயல்பட்டு வந்தது. இங்கு முருகப்பா பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி, சாந்திராணி பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். இந்த ஆண்டு அனைத்து பள்ளிகளும் இங்குள்ள பிரிட்டோ பள்ளியில் தான் தேர்வு எழுத வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

10ம் வகுப்பு வினாத்தாள்கள் வருகை

விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வினா தாள்கள் நேற்று விழுப்புரத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மாறிவரும் உலகம் - பரிணமிக்கும் புதிய பணி வாய்ப்புகள்

மாறிவரும் காலகட்டம், பல பழைய தொழில் துறைகளையும், புதிய பணி வாய்ப்புகளை வழங்கும் புத்தாக்கத் துறைகளாக மாற்றி வருகிறது. அந்த வகையில், புதிய யுகத்தின் பணி வாய்ப்புகளை வழங்கும் சில பழைய துறைகளை இங்கு அலசலாம்.

நடுநிலை, துவக்கப் பள்ளிகளில் ஏப்.,21ல் பருவத்தேர்வு

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான, மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல், 21ம் தேதி துவங்கி, ஏப்ரல் 29ம் தேதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகளை மார்ச், 21ம் தேதி துவங்கி, 29ம் தேதி முடிக்க, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மூலம், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் கலெக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சதீஸ், கலெக்டரின் நேர்முக உதவியார் கஸ்தூரி மற்றும் பலர் பங்கேற்றனர்.கலெக்டர் சண்முகம் பேசியதாவது:

பட்டத்திற்கு பின் பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு வேலை வழங்க உத்தரவு

பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க பரிசீலிக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் நாளை துவங்குகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, எட்டு லட்சத்து 26 ஆயிரம் மாணவ, மாணவியர் கடந்த, 3ம் தேதி முதல் எழுதி வருகின்றனர். தேர்வில் எவ்வித குளறுபடியும் ஏற்படக் கூடாது என்பதற்காக, தேர்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தேர்தல் பணியா, தேர்வுப் பணியா... ஆசிரியர்கள் தவிப்பு

சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல் தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில் பிளஸ் 2 தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு இன்று வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு செல்வது எனத்

Wednesday, March 19, 2014

ஏப்ரல் 1ம் தேதி முதல் அனுமதி அட்டைகள்!

சி.பி.எஸ்.இ., நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான(AIPMT - 2014) அனுமதி அட்டையை(Admit card), வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், விண்ணப்பித்தவர்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதியில் 900 வார்த்தைகள் சேர்ப்பு

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருந்து வெளியாகும் அகராதியான ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியி்ல் தற்போது 900 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி காத்தரின் கானர் மார்ட்டின் தெரிவித்துள்ளார்.

தகுதித் தேர்வில் விலக்கு அறிவிப்பு: குழப்பத்தில் 18,000 ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண் பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள் (எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் 18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மாணவ, மாணவியருக்கு 6.5 லட்சம் சைக்கிள் வாங்க டெண்டர்

மேல்நிலைக் கல்வி கற்கும், மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், வரும் 2014-15ம் கல்வியாண்டில், ஆண்டில் 6.5 லட்சம் சைக்கிள்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு: மாணவர்கள் தயாராக ஒருவாரம் விடுமுறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், தேர்வுக்கு, மாணவ, மாணவியர், சிறப்பாக தயாராவதற்கு வசதியாக பல தனியார் பள்ளிகள், ஒரு வாரம், விடுமுறை அறிவித்து உள்ளன.

Saturday, March 15, 2014

பள்ளித் தேர்வுகளை ஏப்.,16 க்குள் முடிக்க உத்தரவு

ஏப்., 24ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்காக, பள்ளிகளில் ஓட்டுப்பதிவு நடத்த, ஓட்டுச்சாவடி அதிகாரி மற்றும் அலுவலர்கள் ஏப்., 22ல், பள்ளிக்கு வர துவங்கி விடுவர்.
இதன் காரணமாக, மாணவர்களின் படிப்பு மற்றும் தேர்வுகள் பாதிக்க கூடாது என்பதற்காக, ஏப்., 16 க்குள், தேர்வுகள் நடத்தி முடிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளிகளை திறக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பாணியில் கேள்வி: "சென்டம்" சரியுமா?

கடினமான கேள்வி மற்றும் தவறான கேள்வியால் கணித தேர்வில், சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை சரியும் என கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்வுத்துறையின் அதிரடி திட்டங்கள்: மாணவர், ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு

பொதுத் தேர்வு திட்டங்களில், முறைகேடுகளுக்கு வழிவிட்ட ஒரு சில ஓட்டைகளையும், பல புதிய திட்டங்கள் மூலம், முழுமையாக அடைத்து தேர்வுத் துறை சாதனை படைத்துள்ளது. துறையின் நடவடிக்கைக்கு, மாணவர் மட்டும் அல்லாமல் ஆசிரியர் அமைப்புகளும், வரவேற்பு தெரிவித்துள்ளன.

விபத்தில் சிக்கிய மாணவன் மருத்துவமனையில் தேர்வு எழுத ஏற்பாடு

சாலை விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர், மருத்துவமனையில் கணித தேர்வு எழுதினார்.

கணித தேர்வில் ஒரு கேள்வி தவறு; 2 கேள்விகள் மிக கடினம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான கணித தேர்வு, நேற்று நடந்தது. இதுவரை நடந்த தேர்வுகள் எளிதாக இருந்ததைப் போல், கணித தேர்வும் இருக்கும் என மாணவர் எதிர்பார்த்த நிலையில் 16 மதிப்பெண்களுக்கான, இரு கட்டாய கேள்விகள், அவர்களை திணறடித்தன. மேலும், ஆறு மதிப்பெண் கேள்வி தவறாக கேட்கப்பட்டதால், அதிர்ச்சி அடைந்தனர்.

Wednesday, March 12, 2014

10ம் வகுப்பு தனித்தேர்வருக்கு மார்ச் 18 முதல் செய்முறை தேர்வு

 10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும் 18 முதல் 22ம் தேதி வரை, செய்முறை தேர்வு நடக்கவுள்ளது.

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு: தமிழகத்தில் 260 பேர் தேர்வு

ஐ.ஏ.எஸ்., மற்றும், ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகளுக்காக, கடந்த ஆண்டு, டிசம்பரில் நடத்தப்பட்ட, மெயின் தேர்வு முடிவை, யு.பி.எஸ்.சி., நேற்றிரவு வெளியிட்டது. தமிழகத்தில் 914 பேர் மெயின் தேர்வை எழுதியதில், 260 பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பு: மதுரையில் துவக்கம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரையில் இன்று துவங்குகிறது. மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உட்பட ஏழு மாவட்டத்தினர் இதில் பங்கேற்கின்றனர்.

10ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு "ஹால் டிக்கெட்"

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு நேற்று முதல், "ஹால் டிக்கெட்" பதிவிறக்கம் செய்ய தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச் 26ல் துவங்குகிறது.

பள்ளிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் விநியோகம்

 கடலூர் மாவட்டத்தில், இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2014-15ம் கல்வியாண்டிற்குத் தேவையான இலவச பாட புத்தகங்கள் படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு

அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் மேற்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்கக் கூடாது.

Monday, March 10, 2014

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்

கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.
மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 3ம் தேதி துவங்கியது; 25ம் தேதி முடிகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்

  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் 25ம் தேதியுடன் இத்தேர்வு முடிவடைகிறது. மறுநாள் 26ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது.

கல்வி தகவல் மேலாண்மை முறை: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையில் கல்வி தகவல் மேலாண்மை முறை என்ற பெயரில் தனி நபர் தகவல் தொகுப்பு முறைக்கு ஆசிரியர்களின் பணி விவரங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும்

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான, 2014 அகடமிக் ஆண்டின் வகுப்புகளை, ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து தொடங்குமாறு தனது பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

இலவச சீருடைக்கு நிதி ஒதுக்காததால் நூல் தயாரிப்பு நிறுத்தம்

தமிழகத்தில், கூட்டுறவு நூற்பாலைகளுக்கு பஞ்சு கொள்முதல் செய்ய, நிதிஒதுக்கீடு செய்வதில் இழுத்தடிப்பு செய்வதால், நூல் உற்பத்திக்கு பஞ்சு இல்லாமல், உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இலவச சீருடை திட்டம் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் வெளியானதாக பரபரப்பு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பினருக்கு நடந்து முடிந்த, இயற்பியல் தேர்வுக்கான மூன்று வினாத்தாள், தேர்வுக்கு முன்பே இணையதளத்தில் வெளியானதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Monday, March 3, 2014

மொழிப்பாடம் எளிது: தேர்வு எழுதிய மாணவர்கள் மகிழ்ச்சி


இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வினை எழுதினார்கள். மாணவர்களுடன் சென்னை புழல் சிறையில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட சிறைவாசிகளும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வை எழுதினர்.

100 சதவீத இ-கல்வியறிவு: கேரள கிராமம் தேர்வு

கேரள மாநில தலைநகர், திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள பள்ளிச்சால் பஞ்சாயத்து, அந்த மாநிலத்தின் முதல் 100 சதவீத, "இ-கல்வியறிவு" கிராமமாக தேர்வாகியுள்ளது.

பொது தேர்வுகள்: "நோ பவர் கட்"

பொதுத் தேர்வுகள் இன்று துவங்குவதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்தடை இருக்காது என மின்வாரியம் அறிவித்து உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. அதை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு உட்பட மற்ற வகுப்புகளின் தேர்வுகள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடக்கவுள்ளன. மாணவர்களின் படிப்பிற்கு இடையூறு ஏற்படா வண்ணம், மார்ச், ஏப்ரல் மாதங்களில், தமிழகம் முழுவதும் மின்தடை இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டால் ஆயுள்கால தடை

 மாநிலம் முழுவதும் பிளஸ்2 தேர்வுகள் இன்று துவங்குகின்றன. "ஆள்மாறாட்டத்தில், ஈடுபடும் மாணவர்கள் தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும்" என்று முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.

"தேர்வு மையங்கள் அருகே ஒலிப்பெருக்கி வேண்டாம்"

பொதுத் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு அருகே, ஒலிப் பெருக்கிகளை அமைக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் தீவிரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில், போதுமான அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை கல்வித்துறை அதிகாரி கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் பணியிடத்துக்கு மவுசு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளதால், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு மவுசு உருவாகியுள்ளது. இரு ஆண்டுகளாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடியாமல் வைத்திருந்த பள்ளி நிர்வாகத்தினர், தற்போது பல லட்சம் ரூபாய் வரை ஆசிரியர் பணியிடங்களை விலைபேசி வருகின்றன.

"லாங் லீவ்" எடுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

தேர்வு நேரத்தில், நீண்டகால விடுப்பு எடுத்துள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் விவரங்களை, பள்ளி வாயிலாக, பள்ளிக்கல்வி இயக்குனர் சேகரிக்க உத்தரவிட்டுள்ளதால் லீவுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வை நடத்த ரூ.30 கோடி

ஒன்றரை மாதம் நடக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வுப் பணியில் வினாத்தாள் மற்றும் விடைத்தாளை கொண்டு செல்லும் பணியில் வாடகை கார்கள் பயன்படுத்துவதால், அவர்களுக்கு, தொடர்ச்சியாக வேலை கிடைத்துள்ளது. தேர்வை நடத்த 30 கோடி ரூபாயை தேர்வுத்துறை செலவழிக்க உள்ளது.

தேர்வு மையத்தில் 9.30க்கு இருக்க வேண்டும்: ஆசிரியர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு மையத்தில் கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு புகார்களை பெற கட்டுப்பாட்டு அறை அமைப்பு

பொது தேர்வு தொடர்பான குறைகள், புகார்களை பெறுவதற்கு வசதியாக, 12 மணி நேரம் செயல்படும் வகையில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம்: மாணவர்கள் பாதிப்பு

அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் செய்முறை தேர்வு மற்றும் பொதுத் தேர்விற்கு தயாராகும் நேரத்தில், "பணி நிரவல்" மூலம் பட்டதாரி ஆசிரியர்களை இடமாறுதல் செய்ததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர்.

மார்ச் 3ல் பிளஸ் 2 தேர்வு: 8.26 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி துவங்குகிறது. 8.26 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் தேர்வை சுமுகமாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை, முழுவீச்சில் செய்து முடித்து தயார் நிலையில் உள்ளது.

66 மையங்களில் விடைத்தாள் திருத்தம்: மே முதல் வாரத்தில் ரிசல்ட்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 66 மையங்களில் நடக்கும். மே முதல் வாரத்தில், தேர்வு முடிவு வெளியாகும்" என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் கூறினார்.
தேர்வு தொடர்பாக, அவர் வெளியிட்ட, முக்கிய புள்ளி விவரங்கள்:
தமிழ் வழியில், தேர்வை எழுதும், 5,45,771 மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

41 கல்வியியல் கல்லூரிகளுக்கு "நாக்" அங்கீகாரம்

தமிழகத்தில் செயல்படும் 41 கல்வியியல் கல்லூரிகளுக்கு, "நாக்" குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
தேசிய அளவில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும் பணியை, தேசிய தர நிர்ணய மற்றும் அங்கீகார கவுன்சில் - "நாக்" செய்து வருகிறது.