Friday, May 16, 2014

வேலை வாய்ப்பு பதிவு குறித்து தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆன் லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் வழங்கப்பட்டது.

340 பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டுபிடிப்பு

அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.) சார்பில் கடந்த மார்ச் மாதம் துவங்கி இம்மாதம் 10ம் தேதி வரை, திருப்பூர் வட்டார பகுதிகள் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பள்ளி செல்லாத குழந்தைகள் 298 பேர், மாற்றுத்திறனாளி குழந்தைகள் 42 பேர் என 340 பேர் இருப்பது தெரியவந்தது.

80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பம்

நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

10ம் வகுப்பு தேர்விலும் 90% தேர்ச்சி கிடைக்குமா? - கல்வித்துறை எதிர்பார்ப்பு!

பிளஸ் 2 தேர்வு முடிவைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதமும் 90ஐ தாண்டலாம் என கல்வித்துறை வட்டாரம் எதிர்பார்க்கிறது.

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.

அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Wednesday, May 14, 2014

நலிவடைந்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்க மறுக்கும் பள்ளிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்விக்கான விண்ணப்பங்களை தர தனியார் பள்ளிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்து தவறான அறிக்கை: ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 9ம் தேதி வெளியான நிலையில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தாலும், சில மாவட்ட பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. அதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

7 கல்வி நிறுவனங்களுக்கு இறுதி கெடு விதிப்பு

குமரி மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளியிடவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியல் வைக்க வேண்டும்" என, சேலம் மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் மாணவர்களால் வாங்கப்படுகின்றன.

பள்ளி வாகனங்களில் செயல்படாத தீயணைப்பு கருவிகள்: மாணவர்கள் அதிர்ச்சி

பள்ளி வாகனங்களில் நடத்தப்பட்ட தகுதி சான்றிதழ் சோதனையில், தீ விபத்தை தடுக்க வைத்திருந்த கருவிகளில் தீயணைக்கும் புகை கலவை இன்றி வெறும் கருவி மட்டுமே இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம்: 25 மாணவர்கள் கைது

பெங்களூருவில் நடைபெற்ற இன்ஜினியரிங், மருத்து நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டத்தி்ல் ஈடுபட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாமலை பல்கலையில் பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் விற்பனை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு 31ம் தேதி வரை மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை செய்யப்படும் என, பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tuesday, May 13, 2014

கால்நடை மருத்துவ படிப்புக்கு முதன்முதலாக இணைதளத்தில் விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக படிப்புக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதன்முதலாக இணைதளத்தில் விண்ணப்பிக்கும் முறை இந்தாண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரிசல்ட் தாமதம் - கவலையில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள்

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்

பதவி உயர்வு பட்டியலை பள்ளிக்கல்வித்துறை திருப்பி அனுப்பியதால், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம் மே 14 முதல் விநியோகம்

ஆசிரியர் பயிற்சி படிப்பு விண்ணப்பம், நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றை நிரப்ப, நாளை முதல் விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளது.

டி.சி., மதிப்பெண் பட்டியலுக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டாம்: ரைமண்ட் உத்திரியராஜ்

பி.இ.க்கு விண்ணப்பிக்க மாற்றுச் சான்றிதழான டி.சி மற்றும் மதிப்பெண் பட்டியலுக்காக மாணவர்கள் காத்திருக்க வேண்டாம். இரண்டும் இல்லாமலும் பி.இ. விண்ணப்பத்தை அனுப்பலாம் என பி.இ. சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் தெரிவித்தார்.

12.67 லட்சம் மாணவர்களுக்கு கிரையான்ஸ்

தமிழகத்தில் 12.67 லட்சம் மாணவர்களுக்கு கிரையான்ஸ் (வண்ண மெழுகு பென்சில்) வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு சார்பில் கிரையான்ஸ் பென்சில் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கையா? - குறைகள் சரியாவது எப்போது?

பிளஸ் 2 பொது தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி, மற்ற மாவட்டங்களுக்கும் பரவுமோ என ஆசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

பள்ளி வாகன பாதுகாப்பு - 23ம் தேதி வரை கெடு

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை வரும் 23ம் தேதிக்குள் முடிக்குமாறு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

Wednesday, May 7, 2014

"வெயிட்டேஜ்" மதிப்பெண் குளறுபடி: அரசுக் கல்லூரி பட்டதாரிகள் பாதிப்பு

ஆசிரியர் பணி தேர்வுக்கான "வெயிட்டேஜ்" மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் அரசு கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டாய கல்வி சட்டத்தின் கீழான மாணவர் சேர்க்கைக்கு புதிய அட்டவணை வெளியீடு

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான புதிய அட்டவணையை மெட்ரிக் கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. மே 29 தேதிக்குள் ஆர்.டி.இ. சேர்க்கை பணிகள் முடியும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது.

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவு எப்போது?

இந்த ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு பாடத் திட்டத்தின்படி, பள்ளித் தேர்வுகளை நாடெங்கிலும் ஒரே மாதிரியாக சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 1ல் துவங்கி ஏப்ரல் 17ல் முடிவடைந்தது.

ஒரே நாளில் இரண்டு தேர்வு: பட்டதாரிகள் தவிப்பு

"நெட்", டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால் "எந்த தேர்வை எழுதுவது" என பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

டி.இ.டி. 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்படுகிறது

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி மாநிலம் முழுவதும் நேற்று துவங்கியது.

தாய்மொழியில் துவக்கப்பள்ளிப் படிப்பு கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட்

துவக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு, தாய்மொழி அல்லது வட்டார மொழியில் தான் கற்பிக்க வேண்டும் என, மாநில அரசுகள் கட்டாயப்படுத்த முடியாது" என, சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் நேற்று உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை வழங்க தாமதப்படுத்தி வரும் உதவி தொடக்க கல்வி அலுவலக கிளார்க் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போடி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Sunday, May 4, 2014

உபரி ஆசிரியர்கள் பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் இடமாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும்.

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. 

"விடைத்தாள் திருத்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்": ஐகோர்ட் உத்தரவு

விடைத்தாள்களை திருத்த தகுதியான ஆசிரியர்களை நியமிக்கும்படி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி. தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு

பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்" என, டி.இ.டி. தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்

வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பழைய பாடத்திட்டத்தின் படி பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வித் திட்டத்தை 2012- - 13ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தியது.

ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் புதிய அட்டவணையை வெளியிடவில்லை. இது, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

Saturday, May 3, 2014

தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக முதல்வருக்கு மாணவி எழுதிய உருக்கமான கடிதம்

சத்தீஸ்கரில் 10ம் வகுப்பு மாணவி தனக்கு பாஸ் மார்க் போடும்படி முதல்வர் ரமண் சிங்கிற்கு உருக்கமாக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே 6 முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பம் வினியோகம்

தமிழ்நாடு கால்நடை அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
சென்னையில் கால்நடை அரசு மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 6ம் தேதியில் இருந்து வினியோகிக்கப்படும் என பல்கலைக் கழகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இணையதளம் வழியாகவும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்

பி.இ. படிப்பில் சேர அண்ணா பல்கலை இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பி.இ. படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது.

முதல் 100 இடங்களுக்குள் வந்த இந்திய கல்வி நிறுவனம்

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள், முதன்முதலாக ஐ.ஐ.டி., குவகாத்தி இடம் பெற்றுள்ளது. இந்த தரவரிசையில் இடம்பெறும் முதல் இந்தியக் கல்வி நிறுவனம் இதுதான் என்ற பெருமையை, ஐ.ஐ.டி., கவுகாத்தி பெறுகிறது.

அரசு இசைப் பள்ளியில் சிறார்களுக்கான கோடைகால இசைப் பயிற்சி

ஈரோடு சம்பத் நகரில் உள்ள அரசு இசைப்பள்ளியில், சிறார்களுக்கான கோடை கால கலைப்பயிற்சி முகாம் துவங்கியது.
வரும் பத்தாம் தேதி வரை, தினமும் காலை பத்து முதல், மதியம் 12 மணி வரை நடக்கிறது. சிறார்களின் கலை ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இளம் வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் ஜவகர் சிறுவர் மன்றம், தமிழகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்குகிறது.

பள்ளியை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா!

மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை உடைத்து, உள்ளே நுழைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமையான இப்பள்ளி பத்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Friday, May 2, 2014

முடிந்தன வழக்குகள் - இனி அனைத்தும் கல்வித்துறையின் கையில்...

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன. இனி அடுத்தகட்ட பணிகள் கல்வித்துறையின் கைகளில்தான் உள்ளன.

இருக்கை முற்றுகைக்கு உள்ளான உதவி தொடக்க கல்வி அலுவலர்

மடத்துக்குளம் உதவி தொடக்ககல்வி அலுவலரை, ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், மூன்று மணிநேரம் இருக்கை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 1,184 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில், இதுவரை நடந்த பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின்படி, மொத்தம் 1,184 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. புதிய பாடங்களை ஏற்றுக்கொள்ள பல்கலைகளுக்கு யு.ஜி.சி. கடிதம்

சி.பி.எஸ்.இ. அமைப்பு, பள்ளி மேல்நிலைப் படிப்பில் அமல்படுத்தியுள்ள 13 புதிய பாடங்களை, இளநிலைப் பட்டப் படிப்பில் ஏற்றுக்கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பல்கலைகளுக்கும் யு.ஜி.சி. அறிவுறுத்தியுள்ளது.

குற்ற சம்பவங்களை தடுக்க தலைமையாசிரியர்களுக்குப் பயிற்சி

கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.