Friday, January 31, 2014

பிப்., 6ல் அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்: பொதுச் செயலாளர் தகவல்ஜனவரி

"தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என, இரண்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப்.6ல், மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

பான்கார்டு: பழைய நடைமுறையை தொடர முடிவு

பான் கார்டுக்காக விண்ணப்பிப்பவர்களிடம் பழைய நடைமுறையையே தொடர நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரையில் பான் கார்டு விண்ணப்பிப்பவர்கள், விண்ணப்பத்துடன் அதற்கான தொகை மற்றும் சான்றிதழ்களின் நகலை மட்டும் காட்டினால் போதுமானதாக இருந்தது.

பொதுத்தேர்வு கண்காணிப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை அதிரடி

முறைகேடுகளை தடுக்கும் வகையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு பணிகளுக்கு, ஆசிரியர்களை இனி தேர்வுத்துறை இயக்குனரகமே நியமிக்க முடிவு செய்துள்ளது.

ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில் மேலும் 60 ஜாதிகள்

இதர பிற்படுத்தப்பட்டோர் எனப்படும், ஓ.பி.சி., பிரிவினர் பட்டியலில், மேலும் 60 ஜாதிகளை சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுகிறது.

"மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்"

தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கவர்னர் உரையுடன் நேற்று துவங்கியது. "பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15ம் ஆண்டிற்கான, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும். வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும், இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும்" என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நேற்று பகல் 12:00 மணிக்கு கவர்னர் ரோசய்யா உரையாற்றினார்.
உரையின் சிறப்பம்சம்: இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர, இந்த அரசு உறுதியான ஆதரவை தொடர்ந்து அளிக்கும்.
வளர்ச்சி விகிதம், 2013-14ல் மேம்பட்டு, 5 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்திற்கு ஊக்கம் அளிக்க, 2014 15, திட்டச் செலவின இலக்கு 42,185 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தப்படும்.
மாநிலத்தின் உணவு தானிய உற்பத்தி, 100 லட்சம் டன் அளவை 2013-14ல் மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை தேடுவோரையும், வேலைவாய்ப்பு அளிப்போரையும் இணைக்கும் தளமாக மாநில வேலைவாய்ப்பு இணையதளம் துவக்கப்படும். இதில், வேலைவாய்ப்பு ஆலோசனைகள், பயிற்சிகள் மற்றும் பணியமர்வு உதவிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

3,589 பணியிடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த ஐகோர்ட் உத்தரவு

: தமிழக கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்வுகளை நடத்தியே ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனு: கூட்டுறவு நிறுவனங்களில், உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் குறித்த அறிவிப்பாணை நவம்பர் 2, 2012ல் வெளியானது. "மொத்தம் 3,589 காலியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி, நவம்பர் 23, 2012" என தெரிவிக்கப்பட்டது.

எஸ்.ஏ., தேர்வில் குறைந்தபட்சம் 25% மதிப்பெண்கள் தேவை: சி.பி.எஸ்.இ.,

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், எஸ்.ஏ.,(summative assessments) தேர்வில், குறைந்தபட்சம் 25% மதிப்பெண் பெற்றால்தான், அவர்கள் அடுத்த வகுப்பிற்கு தகுதிபெற முடியும் என்ற விதியை CBSE கட்டாயமாக்கியுள்ளது.

பள்ளிகளில் சுற்றுசூழல் மன்றம்: ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம் 80 லட்சம் ருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Wednesday, January 29, 2014

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பாக மாபெரும் கோரிக்கை எழுச்சிப் பேரணி

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (TETOJAC) சார்பாக 7 அம்சக் கோரிக்கைகளை வலியிறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் வரும் 02/02/2014 அன்று மாபெரும் கோரிக்கை எழுச்சிப் பேரணி . 

சான்றிதழ் சரி பார்ப்பில் பங்கேற்காத டி.இ.டி. தேர்வர்களுக்கு இன்று கடைசி வாய்ப்பு

"கடந்த 2012 - 13ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காத தேர்வர்கள் கடைசி வாய்ப்பாக இன்று நடக்கும் முகாம்களில் பங்கேற்கலாம்" என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.

ஒரு மாணவி; இரு ஆசிரியர்: இப்படியும் இயங்குது பள்ளி

ஒரு மாணவியுடன் இயங்கி வருகிறது விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள பட்டமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி. இதற்கு இரண்டு ஆசிரியர்கள் வேறு பணியில் உள்ளனர்.

டி.இ.டி. சலுகை மதிப்பெண்: தமிழக அரசு தீவிர ஆலோசனை

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

கற்றல் திறன் குறைவாக உள்ள மாணவர்களை மேம்படுத்த முடிவு

கடலூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைவாக உள்ள 9ம் வகுப்பு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி மாதம் திறனாய்வுத் தேர்வு நடக்கிறது.

ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி: அருப்புக்கோட்டை மாணவர் தேர்வு

அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு இ.சி.இ. பயிலும் மாணவர் பாலகிருஷ்ணவேல் ராஞ்சியில் ஜார்கண்ட் யோகா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 38 வது "தேசிய யோகா சாம்பியன்ஷிப் 2013" போட்டியில் கலந்து கொண்டார்.

புறக்கணிக்கப்பட்ட நல்லொழுக்க வகுப்பு: பாதுகாப்பின்றி ஆசிரியர்கள்.

நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.

"ஆங்கில கல்வி முறை தேவையற்றது"

நம் நாட்டில் பின்பற்றப்படும் ஆங்கில கல்வி முறை பயனற்றது. இந்த கல்வி முறையில் படிக்கும் இளைஞர்களுக்கு, சமுதாய பொறுப்புணர்வு வருவதில்லை என ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
வேலை தேடுவதற்கான கல்வியாகவே இது உள்ளது. சுவாமி விவேகானந்தர் விரும்பிய, தேசபக்தியுடன் கூடிய கல்வியே, இப்போதைய தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.

அடிக்கடி கேட்கப்படும் புள்ளி விபரம்: மாணவர்கள் தேர்ச்சி குறையும் அபாயம்

மாணவர்களின் புள்ளி விவரங்களை அடிக்கடி கேட்பதால் கற்பிக்கும் ஆசிரியர்கள், தகவல் சேகரிப்பில் நாட்களை கடத்தும் நிலை உள்ளது. இதனால், அரசு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க இதற்கென தனி பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு வரும் 8ம் தேதி துவங்குகிறது

அரசு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 8ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து தமிழக தட்டச்சு பயிலக உரிமையாளர்கள் சங்க மாநில பொதுச் செயலர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் தொழில் நுட்பக் கல்வித்துறை மூலம் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வுகளின் கால அட்டவணைப்படி வரும் பிப்ரவரி 8ம் தேதி சுருக்கெழுத்து தமிழ் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வு நடக்கிறது.

குரூப்- 4 தேர்வு: இலவச பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகர் ஹரிஹரன்பாபு கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கு மாவட்ட நிர்வாகத்தால் இலவச பயிற்சி வகுப்புகள் பிப்.3 முதல் துவங்கி ஏப்.25 வரை நடக்கிறது. பங்கேற்க விரும்புவோர் தங்களது புகைப்படத்துடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது போனில் பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு 04567-221160ல் தொடர்பு கொள்ளலாம்.

கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த ஆசிரியர்கள்

திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கல்வித் துறைக்கு ரூ.20 ஆயிரம் கோடி? பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு

பள்ளி கல்வித் துறைக்கு வரும் பட்ஜெட்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச நிதி பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும். முந்தைய தி.மு.க., ஆட்சியில் 10 ஆயிரம் கோடியை தாண்டிய நிலையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் இந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு "ஜெட்" வேகத்தில் எகிறி வருகிறது.

25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை: மெட்ரிக் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ் மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் ஆரம்பநிலை சேர்க்கையில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். வரும் கல்வி ஆண்டில் இதை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பிச்சை எச்சரித்து உள்ளார்.

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் குளறுபடி: முழுநேர பிஎச்.டி. பட்டதாரிகள் ஏமாற்றம்

உதவி பேராசிரியர்கள் பணியிட நியமனத்திற்கு மதிப்பெண்கள் வழங்குவதில் பகுதி நேர பிஎச்.டி. படித்து பணிபுரிந்த அனுபவத்திற்காக கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் முழுநேர படிப்பாக பிஎச்.டி., முடித்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Monday, January 27, 2014

அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்: அதிகாரிகள் நம்பிக்கை

"வரும் பொது தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், கணிசமாக அதிகரிக்கும்" என கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும், 5,691 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்து 10ம் வகுப்பு பொது தேர்வையும், 2,595 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் 2 தேர்வையும், மாணவ, மாணவியர் எழுத உள்ளனர். கடந்த தேர்வில் அரசு பள்ளிகள் 10ம் வகுப்பில் 79 சதவீத தேர்ச்சியையும் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீத தேர்ச்சியையும் பெற்றன.

"பணி நிரவல் இன்றி பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது"

பணி நிரவல்" கவுன்சிலிங் நடத்தாமல் புதிய பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

"பான்கார்டு" வாங்க கடுமையாகிறது விதிமுறைஜனவரி

வருமான வரி துறையின், "பான்கார்டு" வாங்குவதற்கான விதிமுறை கடுமையாகிறது.
நிதி பரிவர்த்தனை நிரந்தர கணக்கு எண் எனப்படும், "பான்கார்டு", வருமான வரி செலுத்துவோருக்கு மட்டுமின்றி, இதர நிதி சார்ந்த அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அத்தியா வசியமாக உள்ளது.

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஜூன் மாதம் அறிமுகம்

நடப்பாண்டு மத்தியில், சோதனை அடிப்படையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, கொச்சி, மைசூரு, ஜெய்பூர், புவனேஸ்வர், சிம்லா ஆகிய நகரங்களில் இந்த பிளாஸ்டிக் கரன்சிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

மதிப்பெண் சான்றிதழ் தன்மை: தலைமை ஆசிரியருக்கு எச்சரிக்கை

மதிப்பெண் பட்டியலில் உண்மை தன்மை அறிவதில் விதிமீறி செயல்படும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களை அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: புறக்கணிக்க ஆசிரியர்கள் முடிவு

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணியை புறக்கணிப்பதாக தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பிளஸ் 1ல் தொடரும் பழைய பாடத்திட்டம்: அதிகாரிகள் மெத்தனம்

பிளஸ் 1 வகுப்புக்கு, புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணியில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளதால், வரும் கல்வியாண்டில், மீண்டும் பழைய பாடத்திட்டமே தொடர்வது உறுதியாகி உள்ளது.

Sunday, January 26, 2014

65வது குடியரசு தினம் கொண்டாட்டம்

நாட்டின் 65 வது குடியரசு தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
டில்லி செங்கோட்டையில் ஜனாதிபதி காலை 9.30 மணிக்கு கொடியேற்றி விழாவினை துவங்கி வைத்தார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.

சுதந்திரம்... குடியரசு.... என்ன வேறுபாடு?

நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வு நிச்சயமாக இரண்டு தினங்களின் போது இருக்கும். ஒன்று சுதந்திர தினம்; மற்றொன்று குடியரசு தினம். இந்த தினத்துக்கு என்ன வித்தியாசம்; எப்படி வந்தது; ஏன் கொண்டாடுகிறோம் என்பதை தெரிந்து கொள்வது நமது கடமை.
சுதந்திரம் என்று சொல்லும் போது, யாரிடம் இருந்தோ விடுதலை பெற்றிருக்க வேண்டும் என்பதை குறிக்கிறது.

காத்து வாங்கும் அறிவியல் மையம்: மாணவர்களிடையே ஆர்வம் இல்லை

பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் அறிவை மேம்படுத்த அரசு சார்பில் 8.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மண்டல அறிவியல் மையம் பார்வையாளர்கள் வருகை குறைவால் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்"

  "ஆசிரியர் பணியிட மாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது" என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணமாலை கூறினார்.
அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்ய வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி முகாம்

அரசு பொதுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, ஜே.கே., பவுண்டேஷன் இணைந்து திருக்கோவிலூர் ஞானானந்தா மேல்நிலைப் பள்ளியில் ஊக்குவிப்பு பயிற்சி நடந்தது.

Thursday, January 23, 2014

சென்னை பல்கலை: முதுகலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலை: கிரேட் சிஸ்டம் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளின் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2014ம் ஆண்டிற்கான யு.பி.எஸ்.சி., தேர்வு அட்டவணை வெளியீடு


இந்த 2014ம் ஆண்டில், தான் நடத்தும் பலவிதமான பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளுக்கான தேதி விபரங்களை யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. யு.பி.எஸ்.சி.,யின் பல்வேறு தேர்வுகளுக்கான விபரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.


கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம்

திண்டுக்கல்லில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழை சரிபார்க்கும் குழுவில் இடம்பெறுவது தொடர்பான பிரச்னையில் கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சான்றிதழ் சரிபார்க்கும் பணி தாமதமாக துவங்கியது.

பிளஸ் 2 தமிழ் திருப்புதல் தேர்வில் பிளஸ் 1 கேள்விகள்: மாணவர்களிடம் "விளையாடும்" கல்வித்துறை

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் கேள்விக்குப் பதில் பிளஸ் 1 பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

தனியார் பள்ளிகளை குறி வைக்கும் இடைத்தரகர்கள்: அங்கீகாரம் பெற்று தருவதாக வசூல்

அங்கீகாரம் பெறுவதற்காக சில மெட்ரிக் பள்ளிகளில் இடைத்தரகர்கள் பணம் வசூல் செய்வதை தடுத்த நிறுத்தவேண்டும்" என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச அறிவியல் கண்காட்சி: வத்திராயிருப்பு மாணவர் தேர்வு

அமெரிக்காவில் நடைபெற உள்ள சர்வதேச அறிவியல் கண்காட்சியில், இந்தியா சார்பில் கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பதவி உயர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி., கடும் எதிர்ப்பு

அரசு துறைகள், அதிகாரிகளுக்கு, தன்னிச்சையாக பதவி உயர்வு வழங்க அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு: ஆதிதிராவிடர் ஆணையத்திடம் புகார்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), இடஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முன் வராதது குறித்து தேசிய ஆதிதிராவிட ஆணையத்திடம், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு புகார் அளித்துள்ளது.

செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கட்டாயமில்லை: டி.ஆர்.பி.

ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, "செமஸ்டர்" வாரியாக மதிப்பெண் சான்றிதழ்கள் கட்டாயமில்லை" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"சான்று சரிபார்ப்பில் பங்கேற்ற 80% பேருக்கு பணிவாய்ப்பு"

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றுகள் சரிபார்ப்பில் பங்கேற்ற, 80 சதவீதம் பேர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்கும் என மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் பாலமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Wednesday, January 22, 2014

KALVISIGARAM ON ANDROID PHONE NOW!!!!

dear Viewers
           KALVISIGARAM website now on ANDROID CELL PHONES.
Now you can download and use via your android cell phones.
CLICK HERE TO DOWNLOAD "KALVISIGARAM" ANDROID APPLICATION.

அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி

அரசு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலம் கூறியதாவது: அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களை சென்றடைய வேண்டும்.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறை தேர்வு

செய்முறை தேர்வு முடிவுகளை, பிப்., 28ம் தேதிக்குள் அனுப்ப தேர்வுத்துறை கேட்டுள்ளதால், பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., முதல் வாரமே தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மாநில பாடத்திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: அரசின் மேல்முறையீடு தள்ளுபடி

பத்தாம் வகுப்பு வரை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் கற்பிக்கும் சிவகாசி தனியார் பள்ளிக்கு, மேல்நிலையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அனுமதி வழங்க வேண்டும்" என்ற தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்த மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச், அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததது.

Tuesday, January 21, 2014

பிளஸ் 2 வினா - விடை புத்தகம்: 2.50 லட்சம் பிரதிகள் விநியோகம்

சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் பயன்பெறும் வகையிலான வினா - விடை புத்தகத்தை கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டார்.

கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு: மாநிலம் முழுவதும் இன்று துவக்கம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் கல்வி தரத்தை அறிய கற்றல் அடைவு நிலை மதிப்பீட்டுத் தேர்வு இன்று (ஜன., 21) துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது.

அரசு விடுதிகளில் உள்ளூர் மாணவர்கள்: அதிகாரிகளின் திடீர் ஆய்வு அவசியம்

வருசநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வாலிப்பாறை, தண்டியக்குளம், காந்திக்கிராமம், மேலபூசனூத்து, சாந்திபுரம், காமராஜபுரம் ஆகிய மலைக் கிராமங்களில் இருந்த 1000 க்கும்மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.
பள்ளி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் ஆதிதிராவிட மாணவர், பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியும், மாணவிகளுக்கு தனி விடுதியும் திறக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர் விடுதியிலும் 50 மாணவர்கள் படித்து வந்தனர்.

பொதுத் தேர்வுகளுக்கான தேர்வர்களின் பட்டியலை வெளியிட்டது சி.பி.எஸ்.இ

சி.பி.எஸ்.இ., வாரியத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களின் பட்டியல், அந்த வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கான அனுமதி அட்டைகள்(admit card), ஜனவரி 27ம் தேதி, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி விதிமுறைகள் கல்வி அலுவலகம் அருகேயே மீறல்.

மாணவர் சேர்க்கை பணிகளை ஏப்ரல் மாதம் தான் துவக்க வேண்டும் என்ற தமிழக அரசு கண்டிப்பான உத்தரவை மீறி சென்னையில் கல்வித் துறை அலுவலகம் அருகே உள்ள பள்ளியில் நேற்று எல்.கே.ஜி., விண்ணப்பம் வழங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

6,000 ஆண்டுகள் பழமையான பாண்டு நாகரிகம் கண்டுபிடிப்பு

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாண்டு பகுதியின் நாகரிகம் 6,000 ஆண்டுகள் பழமையானது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Monday, January 20, 2014

கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்.

கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்க முறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று,

தலைமை ஆசிரியர் பதவி வேண்டும்: வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திருச்சி தென்னூர் கோவிந்தராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது.

பிளஸ் 2 மாணவர்கள் பதிவெண் பட்டியல்: தலைமையாசிரியர்களுக்கு கெடு

"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண் பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட "நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தெரிவித்தார்.

புலியை தேடும் பணியில் தொய்வு: பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

ஊட்டி அருகே, குந்தசப்பை பகுதியில் உலா வந்த புலி, தும்மனட்டி பகுதிக்கு இடம் மாறியுள்ளதாக வந்த தகவலையடுத்து, வனத்துறை தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அடைவுத் திறன் தேர்வு: ஆசிரியர்,மாணவர்களுக்கு தனி வினாத்தாள்.

தமிழகத்தில் நாளை துவங்க உள்ள 3, 5, 8ம் வகுப்பு ஆசிரியர், மாணவர்களுக்கென அடைவுத்திறன் தேர்விற்கான வினாத்தாள்கள் தனித்தனியாக தரப்படும் என அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாமதமாகும் குரூப்-2 தேர்வு விண்ணப்ப அறிவிப்பாணை

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக அறிவிப்பாணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில், சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில், "2014ம் ஆண்டிற்கு தேவைப்படும் குரூப்-2 பணியிடங்கள் 1181. இதற்கான அறிவிப்பாணை 2014, ஜன., 3வது வாரத்தில் வெளியாகும். அதன் பின் ஆன்லைனில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 18.5.2014ல் தேர்வும், ஆக., 3வது வாரத்தில் தேர்வு முடிவு அறிவிக்கப்படும்" எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆதிதிராவிட மாணவர் விடுதிக்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு

கோவை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 27 ஆதிதிராவிட மாணவ, மாணவியர் விடுதிகள் கட்ட 27 கோடி ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

Sunday, January 19, 2014

அனுமதியின்றி கல்விச்சுற்றுலா அழைத்துசென்றால் கடும் நடவடிக்கை

அனுமதியின்றி கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மார்ச், ஏப்., மாதங்களில் முழு ஆண்டு தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களை கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகள் தயாராகி வருகின்றன. கடந்த காலங்களில் கல்விச்சுற்றுலாவின்போது எதிர்பாராதவிதமாக சில மாணவர்கள் உயிரிழந்தனர்.

புகைப்படத்துடன் 60 லட்சம் விடைத்தாள்: பிளஸ் 2 தேர்வுக்காக அச்சடிப்பு தீவிரம்

பிளஸ் 2 தேர்வுக்காக மாணவர் புகைப்படம், பதிவு எண்கள் உள்ளிட்ட பல விவரங்களுடன் 60 லட்சம் விடைத்தாள்களின் முதல் பக்க தாள் அச்சடிக்கும் பணி சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
பொதுத் தேர்விலும், தேர்விற்குப் பின் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியலிலும் எந்த குளறுபடியும் வரக்கூடாது என்பதற்காக பல புதிய திட்டங்களை தேர்வுத் துறை அமல்படுத்தி உள்ளது. இதில், விடைத்தாளில் செய்யப்பட்டுள்ள மாற்றம் மிகவும் முக்கியமானது.

110 கோடி: "பேஸ்புக்" வலைதளத்தில் இருந்து வெளியேறிய மாணவ, மாணவியர் எண்ணிக்கை

பேஸ்புக்" சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக "டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்" வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியுமா?: டி.இ.டி. தேர்வர்கள் கவலை

சான்றிதழ்களில் கல்வி அலுவலர்களின் கையெழுத்து பெற போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் 20ம் தேதி துவங்கும் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமில் பங்கேற்க முடியுமா என ஆசிரியர் தகுதி தேர்வர் (டி.இ.டி.,) கவலை அடைந்துள்ளனர்.

மாணவர்கள் போக்குவரத்துக்கு ரூ.1.84 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத பகுதி மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், 1.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மற்றும் பேருந்து வசதி இல்லாத, 813 குடியிருப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். இவர்களில் தொடக்கப் பள்ளிகளில் 8 ஆயிரம் பேரும், நடுநிலைப் பள்ளிகளில் மூன்றாயிரம் பேரும் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று பயில்கின்றனர்.

கணினி ஆசிரியர் தேர்வு வழக்கு: மறுஆய்வு கோரிய மனுக்கள் தள்ளுபடி

அரசு பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட கணினி ஆசிரியர்களை வரன்முறை செய்யும் விதமாக, 2010ல், தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இந்த தேர்வில் சில கேள்விகளுக்கு, சரியான விடைகள் தரப்படவில்லை என புகார் கூறப்பட்டது.

ஜனவரி இறுதியில் பிளஸ் 2 தேர்வு பதிவு எண் வழங்கப்படுகிறது

மார்ச் 3ம் தேதி துவங்கும் பிளஸ் 2 பொது தேர்வை 8.26 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களுக்கான பதிவு எண்கள், இம்மாத இறுதியில் வழங்கப்படுகின்றன.

டி.ஆர்.பி., உத்தரவால் பட்டதாரிகள் பரிதவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, பருவத்தேர்வு வாரியாக மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்" என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) உத்தரவிட்டுள்ளதால், பல்கலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் அலைந்து தவிக்கின்றனர்.

Friday, January 17, 2014

அனைவருக்கும் கல்வி இயக்கம் ரூ.44.57 கோடி ஒதுக்கீடு

முழுமை பெறாத கட்டிட பணியை விரைந்து முடிக்கும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநிலம் முழுவதும் 44.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக்கும் திறன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தொட்டபெட்டாவில் 48 பள்ளிகளுக்கு விடுமுறை

ி: ஊட்டி தொட்டபெட்டா சுற்றுப்பகுதிகளில், மூன்று பேரைக் கொன்ற புலி இன்னும் பிடிபடாததால், அப்பகுதிகளில் உள்ள 48 பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உதவித்தொகை பெற 4,231 பள்ளி மாணவர்கள் தேர்வு

மத்திய அரசின் உதவித்தொகைகளைப் பெற நடத்தப்படும் NMMSS என்ற தேர்வில், மொத்தம் 4,231 பீகார் மாநில பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வு கடந்தாண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்டது.

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் வேலை !!! அரசு மவுனத்தால் ஆசிரியர்கள் பீதி

மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
தொகுப்பூதியம்

Wednesday, January 15, 2014

6,7 மற்றும் 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி நடைபெறவுள்ளது.


6,7 மற்றும் 8ம்  வகுப்பு சமூக அறிவியல் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புவியியல் பாடம் தொடர்பாக "அறிவோம் அகிலத்தை " (Map Reading Skill Training) என்ற பயிற்சி  அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது .ஒன்றிய அளவிலான இப்பயிற்சி 20/01/2014 மற்றும் 21/01/2014 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது .

டி.ஆர்.பி., உத்தரவால் டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள் அதிருப்தி

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால் தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டி.இ.டி. தேர்வில் வென்றவர்களுக்கு ஜன., 20 முதல் சான்று சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றோர் விபரம் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது.

4,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் இந்தாண்டு குரூப்-1, குரூப்-2, குரூப்-4 , வி.ஏ.ஓ., உள்ளிட்ட பல தேர்வுகள் மூலம் 4,000 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு: 8 மாணவர்கள் சதம்

 ஐ.ஐ.எம்., எனப்படும், மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான, கேட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாயின. இதில், எட்டு மாணவர்கள், 100 சதவீத மதிப்பெண் பெற்றனர். பத்து பேர், 99.99 சதவீத மதிப்பெண் பெற்றனர். இவர்களில், பெரும்பாலானோர், ஐ.ஐ.டி., மாணவர்கள்.

பொங்கல் தினத்தில் இயங்கிய பள்ளி முற்றுகை

பொங்கலுக்கு விடுமுறை விடாமல் வகுப்பு நடத்திய கோத்தகிரி சி.எஸ்.ஐ., பள்ளியை இந்து அமைப்பினர் முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிஷன்ஸ் காம்பவுண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் சி.எஸ்.ஐ., அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு கட்டணம் அறிவிப்பு

அரசு பொதுதேர்வு எழுத உள்ள பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க" அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Monday, January 13, 2014

வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு

 மாணவர்களிடம் "வாசிப்பு திறன்" குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் முன்பணம்: ஆசிரியர்கள் தவிப்பு

திருப்பரங்குன்றம் கல்வி ஒன்றியத்தில், ஆசிரியர்களுக்கு பொங்கல் முன்பணம் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.5 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், திருப்பரங்குன்றம் பிளாக்கில், பலருக்கு இப்பணம் கிடைக்கவில்லை.

Sunday, January 12, 2014

இணையதள வகுப்பறைகள்: மாற்றம் காணும் கல்வி

ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

NMMS 2013 ONLINE APPLICATION DATE EXTENSION FROM 11.01.2014 TO 20.01.2014

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: திருத்தப்பட்ட முடிவுகள் வெளியீடு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வின் திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை (ஜன.9) இரவு வெளியிடப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

மே 18ல் குரூப்-2ஏ தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப்-2ஏ தேர்வு வருகிற மே மாதம் 18 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு ஜனவரி 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக 2,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலை உறுதி

புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை விரைவில் நடத்துவதற்கு வசதியாக, தேங்கிக் கிடந்த பல தேர்வுகளின் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நேற்று அதிரடியாக வெளியிட்டது. பட்டதாரி ஆசிரியர் விடைத்தாள் அனைத்தையும் மறுமதிப்பீடு செய்து, நான்கு மதிப்பெண் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் எச்சரிக்கை

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர், டியூஷன் எடுக்கக் கூடாது; மீறினால், சஸ்பெண்ட் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் எச்சரித்துள்ளார்.

Friday, January 10, 2014

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION ANNUAL RECRUITMENT PLANNER 2014- 2015

TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION
ANNUAL RECRUITMENT PLANNER 2014-
2015

ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகரிப்பு: பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இடமாறிச் செல்வதால், முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை 232 ஆக அதிகரித்துள்ளது. பொதுத்தேர்வில் மாணவர் தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயத்தால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்க கோரிக்கை

அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும், 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர், தங்களுக்கும், பொங்கல் போனசாக, 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினக்கூலி அடிப்படையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றுபவர், ஒப்பந்த பணியாளர், ஒப்பந்தம் அடிப்படையிலான தற்காலிக உதவியாளர், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர், பகுதிநேர பணியாளர் உள்ளிட்டோருக்கு, 1,000 ரூபாய், போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் கட்டாய டியூஷன் - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, கட்டாய டியூஷன் எடுக்கும் வழக்கம், ஆசிரியர்களிடையே பரவலாக உள்ளது.

தமிழ்நாடு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் , பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவுப்பு .

 தமிழ்நாடு  பொதுத்துறை நிறுவனங்கள்  மற்றும்  வாரியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் , பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவுப்பு .

Thursday, January 9, 2014

பிளஸ் 2 தனித்தேர்வர்களின் உரிமை கோராத 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களை அழிக்க முடிவு

பிளஸ் 2 தனித்தேர்வர்களின் சுமார் 50 ஆயிரம் மதிப்பெண் சான்றிதழ்களுக்கு பல ஆண்டுகளாக யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இந்த சான்றிதழ்கள் மூன்று மாதங்களுக்குப் பிறகு அழிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 31க்கு பிறகு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட தடை

தமிழகத்தில், மே 31-ம் தேதிக்கு பிறகு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுமதிக்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குநர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான கல்வித் துறை அதிகாரிகள், அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:

பயன்படுத்தப்படாமல் பாழாகும் அரசு பள்ளி கட்டடம்

பரங்கிப்பேட்டையில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடங்கள் ஆறு ஆண்டாக பயன்படுத்தப்படாமல், செடிகள் முளைத்து சேதமடைந்து வருகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி: நாளை துவக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் சென்னை நந்தனத்திலுள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புத்தக கண்காட்சி நாளை துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், தினசரி மாலை கவியரங்கம், பட்டிமன்றம், சிறப்பு சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

அங்கீகாரம் பெற 203 பள்ளிகள் காத்திருப்பு: அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்

தனியார் பள்ளிகள் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தும் கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அங்கீகாரம் கிடைக்காமல் கோவையில் 203 பள்ளிகள் பரிதவித்து வருவதாக தனியார் பள்ளி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தலைமை ஆசிரியர்களுக்கு நாளை முதல் சிறப்புப் பயிற்சி

கடந்த கல்வி ஆண்டு நடந்த பொதுத்தேர்வில் 70 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிப்ரவரி 15ல் மாணவர் சேர்க்கை

: நாடெங்கிலும் உள்ள 1,100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையை வரும் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கவுள்ளன. சேர்க்கை அறிவிப்பு மற்றும் வழிகாட்டு விதிமுறைகள், வெகு விரைவில், கேந்திரிய வித்யாலயா சங்கதனால்(sangathan) வெளியிடப்படும்.

Tuesday, January 7, 2014

Pongal Festival, 2014 – Grant of Pongal Prize to P ensioners / Family Pensioners and Ex-Village Officers -


Pongal Festival, 2014– Grant of Pongal Prize to Pensioners / Family Pensioners
and Ex-Village Officers - Orders - Issued. 

பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்றக் கோரி பிப்ரவரி 5-ல் ஆர்ப்பாட்டம்

பத்தாம் வகுப்புத் தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

அண்ணா பல்கலை: குறுகிய கால ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்' படிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் குறுகிய கால "ஆரக்கல்' கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் படிப்பை அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ராமானுஜன் கம்ப்யூட்டிங் மையத்தில் இந்தப் படிப்பு வழங்கப்பட உள்ளது.
இதில் பிறக் கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெற முடியும்.
இந்தப் படிப்புக்கான முதல் பேட்ச் பிப்ரவரி 5-ம் தேதியும், இரண்டாம் பேட்ச் பிப்ரவரி 8-ம் தேதியும் தொடங்கப்படவுள்ளது.
இந்தப் படிப்பு குறித்து மேலும் விவரங்களுக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu  என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

கல்வியியலில் எம்.ஏ படிப்பு

பெங்களூரில் உள்ள ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் 2 வருநட முழுநேர முதுகலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
படிப்பு: MA Education, MA Development
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்டிபபை முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு படிவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் பட்டயத் தேர்வு: 8 மையங்களில் சான்றிதழ் வழங்கல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதியதற்கான சான்றுகள் நேற்று முதல் வழங்கப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் பட்டய தேர்வுக்கான முதல் மற்றும் 2-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியானது. இதற்கான மதிப்பெண் மற்றும் பட்டயச் சான்றுகள் திரூர் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கப்படுகிறது.

தேர்வு அட்டவணையை வெளியிட டி.என்.பி.எஸ்.சி., தயங்குவது ஏன்?

ஆண்டு முழுவதும் நடத்த உள்ள போட்டி தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணையை தயாரித்து வெளியிட அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முன் வராதது ஏன்?" என, தேர்வர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருநெல்வேலியில் உருவான "கிரையோஜெனிக்" ராக்கெட்: இணை இயக்குனர் பெருமிதம்

ஜி.எஸ்.எல்.வி.,யில் பொருத்தப்பட்ட "கிரையோஜெனிக்" ராக்கெட் திருநெல்வேலியில் உள்ள மகேந்திரபுரி திரவ இயக்க திட்ட மையத்தில் தயாரிக்கப்பட்டது" என்றார், அதன் இணை இயக்குனர் கார்த்திகேயன்.

சந்தைக் கடையா? அரசுப் பள்ளியா? கேள்விக்குறியாகும் மாணவர்கள் படிப்பு

 
மேலூர் அருகே போதிய வகுப்பறை இல்லாத பள்ளி மாணவர்கள் தங்கள் படிப்பை சந்தை கடைகளுக்கு இடையில் கலையரங்க, மரத்தடி என கூறு போட்டு படிக்கும் அவலநிலை உள்ளது.

தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய நடுநிலைப்பள்ளிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வு நேற்று துவங்கியது.
நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கடந்த மாதம் கருத்துரு பெறப்பட்டது. 11 நடுநிலைப்பள்ளிகள் தங்களது பள்ளிகளை தரம் உயர்த்துமாறு கருத்துரு அளித்தன. அப்பள்ளிகள் பற்றிய முழு விவரங்களும் கருத்துருவில் இணைத்து தரப்பட்டது.

பள்ளிப் பேருந்து பாதுகாப்பு - ஜி.பி.எஸ். பொருத்துவதை கட்டாயமாக்கியது சி.பி.எஸ்.இ

பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு அம்சங்களை கண்காணித்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய, பள்ளிப் பேருந்துகள் அனைத்தும், GPS (Global Positioning System) அமைப்பைக் கொண்டிருப்பது கட்டாயம் என்று CBSE அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் படித்தால் எதிர்கால சம்பளம் எவ்வளவு?

ஐ.ஐ.எம்., போன்ற நாட்டின் முதல்தர வணிகப் பள்ளிகளில் படிக்க விரும்பும் மாணவர்களின் பிரதான இலக்கு, படித்து முடித்து பல லட்சங்கள் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே.
எனவேதான், அத்தகைய கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவதற்கு, கேட் போன்ற தேர்வுகளை ஆர்வமாக எழுதுகிறார்கள். இக்கட்டுரையில், நாட்டின் பிரதான வணிகப் பள்ளிகளில் படிப்பவர்கள், சராசரி அளவில் மற்றும் உயர்ந்தபட்ச அளவில் எந்தளவு அதிக ஊதியம் பெறுகிறார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க வேண்டிய தொலைபேசி நாகரீகம்

தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே, அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த வேண்டும்.
* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம் அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப் பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.