Wednesday, February 26, 2014

நாட்டின் பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி!

பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு, மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி தலைமைத்துவத்திற்கான பயிற்சியை, மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், நாடெங்கிலுமுள்ள 12 லட்சம் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு செய்முறை தேர்வு கடைசி நேரத்தில் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய முடியாமல், ஆசிரியர் தவித்தனர்.

மாணவர்கள் முன்பு வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு: தேர்வுத்துறை கிடுக்கிப்பிடி

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, "கவர்" செய்யப்பட்டு உள்ளதால் தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க உத்தரவிட்டு உள்ளது. இதனால் முன்கூட்டியே வினாத்தாள், "அவுட்" ஆவதற்கு வாய்ப்பில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு இல்லை: பி.எட்., கணினி பட்டதாரிகள் தவிப்பு

அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை, கணினி பாடப் பிரிவு துவங்கப்படாததால், மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பி.எட்., கணினி பட்டதாரிகள்வேலையில்லாமல் தவித்து வருகின்றனர்.

விருதுநகர் மாணவரின் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பள்ளி மாணவன் கண்டுபிடித்த மின் சாதனத்திற்கு, சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பிற்கான, தேசிய விருதும் (இக்னைட்), காப்புரிமையும் மத்திய அரசு வழங்கி உள்ளது.

டி.இ.டி.,யில் சிறப்பு தேர்ச்சி: மார்ச் 12 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற 47 ஆயிரம் பேருக்கு மார்ச் 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் "லாங் லீவ்": மாணவர்கள் அவதி

தேர்வு நெருங்கும் சமயத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் தங்கள் குழந்தைகளின் படிப்புக்காக வாரக் கணக்கில், "லாங் லீவ்" போடுவதால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தால் சிக்கல்

தமிழகத்தில் நாளை (பிப்.,26) ஒரே நாளில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை, 4 ஆயிரம் ஆசிரியர் பயிற்றுனர்களை வைத்து சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வித்துறை அதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லையா?

கல்வித்துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால் தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக குறையும்" என தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு பாராட்டு விழா

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள் பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.

"கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

கனெக்டிங் கிளாஸ் ரூம்" திட்டம், பொதுத் தேர்வுப் பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, அடுத்த கல்வியாண்டில் தான் இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பு டி.இ.டி., தேர்வு எழுதலாம்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் இல்லாமல், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) எழுதலாம்" என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Sunday, February 23, 2014

தேசிய திறனாய்வுத் தேர்வு நேரம் திடீரென மாற்றம்


மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய தகுதித்திறனாய்வுத் தேர்வின் நேரம் திடீரென மாற்றப்பட்டது.

ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியை பறிக்க முடிவு

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் ஆசிரியர்களின் பி.எட். கல்வித் தகுதியைப் பறிக்க அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.
நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு குழந்தைகள் உரிமைகள் தொடர்பான மாநில அளவிலான பயிலரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்: 43, 051 மையங்களில் விநியோகம்

தமிழகம் முழுவதும் ஐந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்வுப்பணியில் ஒரு லட்சம் பேரை ஈடுபடுத்த திட்டம்

பிளஸ் 2 பொது தேர்வுக்கு, இன்னும், 9 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை, முழுவீச்சில் செய்து முடித்துள்ளது. தேர்வுப் பணியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர், ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. 8.45 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுத உள்ளனர். தேர்வுக்கு, இன்னும் 9 நாட்கள் தான் இருக்கிறது. இதனால், தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், முழுவீச்சில் செய்து முடித்துள்ளார்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை பிசுபிசுக்க வைக்கத் திட்டம்

தமிழகத்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தை, பிசுபிசுக்க வைக்க, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தேர்வுத்துறை அமைத்த சிறப்பு ஆன்-லைன் மையங்களுக்கு வரவேற்பு

: தேர்வுகளுக்காக, மாணவ, மாணவியர், தனியார், "பிரவுசிங்" மையங்களில் பதிவு செய்யும் போது ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க முதல் முறையாக, தேர்வுத்துறை 32 மாவட்டங்களிலும், சிறப்பு மையங்களை அமைத்து எடுத்த நடவடிக்கை மாணவர் மத்தியில், வரவேற்பை பெற்று உள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கேன்வாஸ் ஷ¤ மட்டுமே பயன்படுத்த ஆணை

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கான சீருடையின் ஒரு பகுதியாக கேன்வாஸ் ஷ¤க்களையே பயன்படுத்த வேண்டுமென சி.பி.எஸ்.இ., அமைப்பு, தனது இணைப்பு பள்ளிகளின் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கு பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள்

தமிழகத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுக்காக, பார்கோடு எண் அமைந்த மேல் தாள்கள், தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன; மேல்தாளுடன், விடைத்தாள்களை, 16ம் எண் ஊசியில், வெள்ளை நூலால், ஒரு அங்குலத்துக்கு, ஆறு தையல் விழும் வகையில் தைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படிப்பிற்காக விடுமுறை: ஊழியர்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு

அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில், மேற்படிப்பு படிப்பதற்காக விடுமுறையில் செல்லும் போது, "விடுமுறை காலம் முடிந்ததும், பணிக்கு திரும்புவேன்" என பத்திரத்தில் கையெழுத்திட்டு அளிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு அறிவிப்பு

பள்ளி கல்வி துறையில், இடைநிலை ஆசிரியர் 498 பேரை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு செய்வதற்கான கலந்தாய்வு "ஆன்-லைன்" முறையில் இன்று நடக்கிறது.

தரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் அவதி

: ராமநாதபுரம் மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட 30 உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை வசதியின்றி, இட நெருக்கடியால் மாணவர்கள் இரண்டு ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர்.

கல்விக்கடன் மறுப்பா? : ரிசர்வ் வங்கிக்கு புகார் செய்யலாம்

"வங்கியில் வாங்கிய கல்விக்கடனுக்கு வட்டி கட்டாவிட்டால், தொடர்ந்து கடன் வழங்க மறுக்கும் வங்கிக் கிளைகள் மீது தலைமை அலுவலகத்தில் புகார் செய்யலாம். 30 நாட்களுக்குள் பதில் கிடைக்காவிட்டால் ரிசர்வ் வங்கியை அணுகலாம்" என சென்னை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்தார்.

Thursday, February 20, 2014

"தத்கால்" திட்டம் ஒருநாள் நீட்டிப்பு: தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வை எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, இன்று ஒருநாள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகை: டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2013 ல் பங்கேற்றவர்களுக்கு, 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கிய உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், டி.ஆர்.பி., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? சிக்கலில் டி.ஆர்.பி.,

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

முதுகலை தமிழ் ஆசிரியருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்துள்ள, 593 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும்" என பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்து உள்ளார்.

சரியாக பணிக்கு வராத ஆசிரியர் பணி இடைநீக்கம்

பள்ளிக்குச் சரியாக வராமல் இருந்த, பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம், பணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர், திருமூர்த்தி 45. இவர், சரியாக பள்ளிக்கு வருவதில்லை என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டவர், கணித ஆசிரியர் திருமூர்த்தியின் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தார். அதில் அதிக மாணவர்கள், "பூஜ்யம்" மதிப்பெண் பெற்றனர்.

Wednesday, February 19, 2014

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஏப்., 28ல் சிறப்பு டி.இ.டி., தேர்வு

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு, ஏப்ரல், 28ம் தேதி, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்” என ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்து உள்ளது.

தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் கல்வி உதவி கிடைக்கவில்லை

தமிழகத்தில், தேசியத் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் 2008ம் ஆண்டுமுதல் கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதால் மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

சிறப்பு காவல் இளைஞர் படைக்கு தனி நியாயமா? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி

சிறப்பு காவல் இளைஞர் படையில் சேர்ந்துள்ள இளைஞர்கள், ஒரு ஆண்டிற்குப்பின், சிறப்பு தேர்வு அடிப்படையில், காவல் துறையில், பணி நியமனம் செய்யப்படுவர்" என அறிவித்துள்ள தமிழக அரசு, வெறும் 5,000 ரூபாய் சம்பளத்தில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வரும் எங்களை கண்டு கொள்ளாதது ஏன்; சிறப்பு காவல் இளைஞர் படைக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? என 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


முதுகலை ஆசிரியர் நியமனத்தில் உச்சகட்ட கலாட்டா

ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவித்த 2,895 முதுகலை ஆசிரியர்களில் 583 தமிழ் ஆசிரியர்கள் மட்டும் இன்று பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதர பாட ஆசிரியர்கள் நியமனம், தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.

மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கான 2 நாள் ஒர்க்ஷாப்!

மேல்நிலைக் கல்வியை மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் (குறிப்பாக பிளஸ் 1) பயன்பெறும் வகையிலான ஒரு ஒர்க்ஷாப்பை, ஐ.ஐ.டி., சென்னை நடத்துகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு: 7 பாடங்களுக்கு முடிவுகள் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில் நேற்று இரவு திடீரென ஏழு பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

குரூப்-2 வினாத்தாள் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

குரூப்-2 வினாத்தாள் வெளியான வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் வழங்கப்படாதால், ஏப்ரல், 1ம் தேதிக்கு  விசாரணையை நீதிபதி கவிதா தள்ளிவைத்தார்.

Saturday, February 15, 2014

புதுச்சேரியிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பீடு முறை அறிமுகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை வரும் 2014-15ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

உதவித்தொகை தேர்வு ஹால் டிக்கெட் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

தேசிய வருவாய் வழிப்படிப்பு உதவித்தொகை திட்ட (என்.எம்.எம்.எஸ்.,) சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பித் தோருக்கு அந்தந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களே இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்களை எடுத்து வழங்க வேண்டும் என, தேர்வுத்துறை கூறியுள்ளது.

"வெயிட்டேஜ்" மதிப்பெண் அளிப்பதில் மாற்றம்: டி.இ.டி., முடிவில் புதிய உத்தரவு

ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) "வெயிட்டேஜ்" மதிப்பெண் அட்டவணையில் சிறிய மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இட ஒதுக்கீடு பிரிவினர் டி.இ.டி. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 60 சதவீத மதிப்பெண்ணை 55 சதவீதமாக குறைத்து முதல்வர் அறிவித்தார்.

விடைத்தாள்களை திருத்தாமல் மதிப்பெண் வழங்கிய அவலம்

விடைத்தாள்களை திருத்தாமல் பருவத்தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக கோவை அரசு கலை கல்லூரி எம்.எஸ்.சி., தாவரவியல் மாணவர்கள் நேற்று வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களை பாதிக்காதவாறு ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த யோசனை

பொதுத்தேர்வு துவங்க உள்ளதால் மாணவ, மாணவியர் பாதிக்காத வகையில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் தொல்லை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

பள்ளி மாணவியர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தடுக்கும் நோக்கில் கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுக்க உள்ள ஆசிரியர்கள், மாணவியருக்கு பயிற்சி, விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நீலகிரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சார்பில் மாவட்டத்தில் உள்ள வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுனர்களுக்கு முதற் கட்டமாக நேற்று பயிற்சி வழங்கப்பட்டது.

செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்துடன் இந்திய விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ அடுத்தகட்ட முயற்சி

செவ்வாய் கிரகத்திற்கு இந்திய விண்வெளி வீரர்களை விண்கலத்துடன் அனுப்பும் அடுத்த கட்ட திட்டத்திற்கு இஸ்ரோ தயாராக உள்ளது. முன்னதாக செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியது சாதனை செய்த இந்தியா அதன் அடுத்தகட்ட முயற்சியாக விண்கலத்துடன் இந்திய விண்வெளிவீரர்களையும் அனுப்பி ஆய்வு செய்யதிட்டமிட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதத்தில் முதல் சோதனை ஓட்டம் துவங்கும். இது ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி தளத்திலிருந்து கிளம்புகிறது.

பிளஸ் 2 தனித் தேர்வர் வசதிக்காக "தத்கால்" திட்டம் அறிமுகம்

பிளஸ் 2 பொதுத் தேர்வை தனித் தேர்வாக எழுத விண்ணப்பிக்க தவறிய மாணவ, மாணவியர் "தத்கால்" திட்டத்தின் கீழ் இம்மாதம் 17 முதல் 19 வரை தேர்வுத் துறை அமைத்துள்ள சிறப்பு மையங்கள் மூலம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

Friday, February 14, 2014

பள்ளி கல்விக்கான நிதிஒதுக்கீடு சரிவு

பள்ளி கல்வி துறைக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு, கடந்த ஆண்டை விட வெகுவாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 2,412 கோடி ரூபாய் அதிகரித்த நிலையில் இந்த ஆண்டு வெறும், 766 கோடி தான் அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த, மூன்று ஆண்டுகளில், பள்ளி கல்விக்கான நிதி ஒதுக்கீடு, கணிசமாக அதிகரித்து வந்தது. 2011-12ம் ஆண்டில் 13,000 கோடி; 2012-13ம் ஆண்டில் 15,000 கோடி; 2013-14ம் ஆண்டில் 17,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு இருந்தது. படிப்படியாக, நிதி அதிகரித்து வந்ததால், நடப்பு ஆண்டில் 19 ஆயிரம் கோடி வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.

Thursday, February 13, 2014

TN GOVT BUDGET 2014.

TN GOVT BUDGET 2014
SCHOOL EDUCATION- RS 17731.71CR
SSA- RS 700 CR
RMSA- RS 384 CR
BUILDINGS - RS 250CR
FREE BOOKS - RS 264CR
HIGHER EDUCATION- RS 3627.93 CR

"டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிஇடி தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 22 முதல் பயிற்சி

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆய்வு கட்டுரை: தேனி பள்ளி மாணவருக்கு மாநில முதல் பரிசு

ஆய்வு கட்டுரை சமர்பித்த தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி மாணவர் முதல் பரிசு பெற்றார். சென்னை அறிவியல் கழகமும்,சென்னை அண்ணா பல்கலையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் ஆய்வுக்கட்டுரை சமர்பிக்கும் போட்டி நடத்தியது.

15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு

தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு தகுதித்தேர்வு பயிற்சி

சேலம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ள 40 நாட்கள் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ளும்படி, முதல்வர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட ஆந்திரா முடிவு

ஆந்திர மாநிலம் ஐதராபாத் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் வரும் 19ம் தேதி பள்ளி பாட புத்தகங்களை ஏலத்தில் விட முடிவுசெய்துள்ளதாக அதன் செய்தி குறி்ப்பில் தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு முன்கூட்டி வெளியாகாது

பிளஸ் 2 தேர்வு முடிவை முன்கூட்டி வெளியிட வாய்ப்பு இல்லை" என அண்ணா பல்கலை துணைவேந்தர் கூட்டிய கூட்டத்தில் தேர்வுத்துறை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதனால், பி.இ., மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் நடத்த பல்கலை முடிவு செய்துள்ளது.

Wednesday, February 12, 2014

SCHOOL WORKING DAY ON 15/02/2014 FOR ELECTION 2014


tU« V¥uš/nk  2014š eilbgwΟs ehlhSk‹w nj®jY¡F th¡F¢ rhto ika§fŸ nj®Î brŒJ mik¤Âlš rh®ªj nj®jš gâ¡FGéd®fŸ  tU« 15.02.2014 rå¡»Hika‹W mid¤J gŸëfisÍ« gh®itæl tUifju cŸsd®. 
Vdnt, mid¤J gŸë jiyikahÁça®fS« nk‰go 15.02.2014« ehs‹W rå¡»Hik fhiy 09.00 kâ¡F gŸëæid¤ ÂwªJ it¤J m‹iwa ehŸ KGtJ« gŸëæš ÏU¡fnt©L«.  

பி.இ. கலந்தாய்வு: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கத் திட்டம்

வரும் கல்வியாண்டுக்கான (2014- 2015) பொறியியல் கலந்தாய்வுக்கு 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டைப் போலவே கலந்தாய்வை முன்கூட்டியே நடத்தி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து  இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 16,932 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி மாதம் நடைபெற்றது.

படுத்துக் கொண்டே படிக்க வேண்டாம்

பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கம் இருக்கும்.
சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்......

பிளஸ் 2 தனித்தேர்வு: "ஹால் டிக்கெட்" அறிவிப்பு

பிளஸ் 2 பொது தேர்வை, தனித் தேர்வாக எழுத விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் தேர்வுத்துறை இணையதளம் வழியாக, "ஹால் டிக்கெட்"டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மின்தடை: பிளஸ் 2 செய்முறை தேர்வு நடத்த முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

செய்முறைத் தேர்வில் மின்தடை இருக்க கூடாது என, அரசு உத்தரவிட்டிருந்தும், மின்துறை அமைச்சர் மாவட்டத்தில், திடீர் மின்வெட்டு ஏற்பட்டதால், பிளஸ் 2 செய்முறை நடத்த முடியாமல், பள்ளி ஆசிரியர்கள் தவித்தனர்.

அரசாணையால் கல்வி கட்டணம் அதிகரிப்பு: ஆதிதிராவிட மாணவர் தவிப்பு

ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையில், இலவச கல்வி திட்டத்தில், திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் கல்வித் தொகை முழுமையாக கிடைக்காமல் 15 ஆயிரம் மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகி உள்ளது.

100வது நாளை வெற்றிகரமாக கடக்கிறது மங்கள்யான்

செவ்வாய்கிரகத்ததை ஆராய்வதற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட மங்கள்யான் இன்று தனது 100 நாள் பயணத்தை துவங்கியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிஹோட்டா விண்வெளி ஏவு தளத்தில் இருந்து மங்கள்யான் ஏவப்பட்டது. மங்கள்யானின் பயணம் குறித்து இஸ்ரோ கூறியிருப்பதாவது:

சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய சலுகை - மத்திய அரசு ஒப்புதல்

2014ம் ஆண்டில் நடைபெறவுள்ள சிவில் சர்வீஸ் தேர்வு முதல், அனைத்து பிரிவினருக்கும், கூடுதலாக இரண்டுமுறை சிவில் சர்வீஸ் தேர்வெழுதும் வாய்ப்புகளை வழங்கும் முடிவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த 2014ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வின் முதல் நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவில் சர்வீஸ் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு(Preliminary exam), மெயின் தேர்வு(Main exam) மற்றும் நேர்முகத் தேர்வு(Personal Interview) ஆகிய மூன்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது.

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ை: ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பின் புதிய மதிப்பெண் விவரம் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 3ம் தேதி டி.இ.டி., தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை மீண்டும் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான அறிவியல் திறன் வளர்ப்பு பயிற்சி

மேல்நிலை மாணவர்களுக்கான இளம் மாணவ விஞ்ஞானிகள் அறிவியல் பயிற்சி போடி சி.பி.ஏ., கல்லூரியில் துவக்கப்பட உள்ளது.
கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜராஜன் கூறியதாவது: இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிராமப்புற மாணவர்கள் அறிவியல் திறனை வளர்த்துக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில் அறிவியல் பாடம் படிப்பவர்களுக்கு இளம் மாணவ விஞ்ஞானிகளுக்கான பயிற்சி போடி சி.பி.ஏ., கல்லூரியில் துவங்க உள்ளது.

Tuesday, February 11, 2014

நிமிர்ந்து உட்கார்ந்தால் நிறையப் படிக்கலாம்

மாணவர்களே தேர்வு நேரம் உங்களை நெருங்குகின்றது. தேர்வுக்கு அதிகமாக படிக்க வேண்டி இருக்கும் அல்லவா... எப்படி உட்கார்ந்து படித்தால் அதிக நேரம் படிக்கலாம்?

குரூப்-4: 431 காலியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

குரூப் 4 பிரிவில் காலியாக உள்ள 431 தட்டச்சர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து, அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

யுபிஎஸ்சி தேர்வு: அனைத்து பிரிவினரும் கூடுதலாக 2 முறை தேர்வு எழுதலாம்

யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை இந்த ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் கூடுதலாக இரண்டு முறை எழுதலாம்.
இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், "2014-ம் ஆண்டு முதல் அனைத்துப் பிரிவினரும் 2 முறை கூடுதலாக தேர்வு எழுதுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேவையெனில், அனைத்துப் பிரிவிலும் இத்தேர்வை எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பிலும் தளர்வு செய்யப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விடைகள் வெளியிடுவதில் குழப்பம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

50% பதவி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது. சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலை?

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013-14க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும்" என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச அட்லஸ்பள்ளி மாணவர்களுக்கு பயன்படாத இலவச அட்லஸ்

ஆசிரியர்களிடம் ஆர்வம் இல்லாததால், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நில வரைப்பட நூல் (அட்லஸ்) பயன்படுத்தப்படாமல் உள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் 55.67 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு, இலவசமாக அட்லஸ் வழங்கப்பட்டது.

Tuesday, February 4, 2014

ஏழாவது ஊதியக்குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார். 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின் ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.

மத்திய அரசின் 10 சதவீத அகவிலைப்படி கணக்கீடு எப்படி

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது, 90 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. கூடுதல் 10 சதவீத அகவிலைப்படி உயர உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு மாதமும், இந்திய அளவில் பரவலாக, பொருட்களின் விலை குறியீட்டுப் புள்ளி சேகரிக்கப்படுகிறது. அதன் சராசரியை கணக்கிட்டுக் கொள்கின்றனர்.

பாரத ரத்னா பெற்றார் சச்சின்

Sachin, Bharat Ratna Award, India, Cricket, 24 Hours









நாட்டின் மிக உயர்ந்த ‘பாரத ரத்னா’ விருதை இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெற்றார்.  இதன் மூலம் இளம் வயதில் இவ்விருதை பெற்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார் சச்சின்.             

டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற வாய்ப்பு

டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர்.

டி.இ.டி., தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை: முதல்வர் ஜெயலலிதா

டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55% மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

பள்ளிகளில் மாணவர்களே துப்புரவு: பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவ, மாணவியரே, துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர், தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்ற பயத்தில், இது குறித்து, ஆசிரியர்களிடம் முறையிடுவதற்கு தயங்கி வருகின்றனர்.

"ஆசிரியர்களின் அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்கும்"

"தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், வரும் லோக்சபா தேர்தலில், ஆசிரியர்களின் அதிருப்தி எதிரொலிக்கும்" என ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார் கூறினார்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

Sunday, February 2, 2014

பணியிடம் நிரப்புவதில் தாமதம் ஏன்?: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்

அரசு பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்படுவது ஏன் என, தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் விளக்கமளித்து உள்ளார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான, வழிகாட்டுதல் குறித்த கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:

அரசு பொது தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு பொது தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் மாணவர்கள் தேர்வு எழுத, எதிர் கொள்ள வேண்டிய முறைகள் குறித்து இன்று, அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பான்கார்டு: புதிய நடைமுறை அமலாவது நிறுத்திவைப்பு

வருமான வரித்துறையின், பான்கார்டு பெறுவதற்கான, புதிய நடைமுறை நாளை முதல் அமலாக இருந்த நிலையில், அதை நிறுத்தி வைப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

சத்துணவு மையங்களுக்கு காய்கறி மானியம் நிறுத்தம்

கடந்த நான்கு மாதங்களாக சத்துணவு மையங்களுக்கு காய்கறி, மசாலா வாங்குவதற்கான மானியம் வழங்கப்படவில்லை. சத்துணவு அமைப்பாளர்கள் கடன் வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை, மறைந்த முதல்வர் காமராஜரும், சத்துணவு திட்டத்தை, மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் கொண்டு வந்தனர்.

"தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு"

மனிதர்கள், விலங்குகளைப் போலவே, தாவரங்களுக்கும் நினைவாற்றல் இருப்பதாக, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின், உயிரியல் பரிமாணங்கள் பற்றிய ஆய்வாளர்கள், தாவரங்களின் கற்கும் திறன் பற்றிய ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இதில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.