Monday, April 28, 2014

VITEEE-2014: மே 1ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு

விஐடி பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் VITEEE-2014 நுழைவுத்தேர்வின் தேர்வு முடிவுகள் மே 1ம் தேதி வெளியிடப்படுகின்றது.
இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர VITEEE-2014 என்ற நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆன்லைன் வழியாக ஏப்ரல் 9ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி தேர்வுகள் நடத்தப்பட்டன.

அண்ணாப பல்கலை: பி.இ. கலந்தாய்வு விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன்

பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக "3ஜி' அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மருத்துவப் படிப்பு; மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மே 14-ஆம் தேதி விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி: மே 6ல் துவக்கம்

இட ஒதுக்கீடு பிரிவில் 5 சதவீத மதிப்பெண் சலுகை பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திருச்சியில் வரும் ஆறாம் தேதி துவங்குகிறது.

எந்த பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடம் வரவேற்பு?

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர மே 3 முதல் மாநிலம் முழுவதும் விண்ணப்பம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, 2.5 லட்சம் விண்ணப்பங்களை அச்சடித்து 56 வினியோக மையங்களுக்கு அனுப்பும் பணியை அண்ணா பல்கலை மும்முரமாக செய்து வருகிறது.

வேலைவாய்ப்பு இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் இணைப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு பதிவுத் துறை "வெப்சைட்"டில் பொதுத்தேர்வு எழுதிய மாணவரின் தேர்வு முடிவும் இணைக்கப்படுவதால், பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு ஒரே மாதிரியான "சீனியாரிட்டி" பின்பற்றப்படுகிறது.

மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வா?

தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை நடத்திட அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. மீறி நுழைவுத் தேர்வு நடத்தினால் சம்பந்தபட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

மே 5ல் பிளஸ் 1 ரிசல்ட்

மே 5ம் தேதி மாவட்டம் முழுவதும் 11ம் வகுப்பிற்கு ரிசல்ட் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மே 9ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், மே 23ல் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வாசு தெரிவித்தார்.

Wednesday, April 9, 2014

சிறப்பு டி.இ.டி., தேர்வு: ஏப்ரல் 22க்குள் "ஹால் டிக்கெட்"

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டி.இ.டி.,), ஹால் டிக்கெட் 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்" என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பயிற்சித் தனித்தேர்வு: நாளை விண்ணப்பம்

ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை, தேர்வுத்துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் அறிவித்து உள்ளார்.

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாவில் குழப்பம்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில், ஒரு மதிப்பெண் பகுதியில் மாணவர்களை குழப்பும் வகையில் இடம்பெற்ற வினாவால் சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு பள்ளி மின் கட்டணம்: இயக்குனரகம் முடிவு

அரசு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பு ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு ஆசை காட்டி ஓட்டு சேகரிப்பு

சம்பள உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்வதாக கூறி அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களிடம் ஆளும் கட்சியினர், ஆதரவு திரட்டி வருகின்றனர்.

Saturday, April 5, 2014

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 10 % அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

சிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளிவைப்பு

மாற்றுத் திறனாளிகளுக்கு இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது.

கணிதத்தில் தேர்ச்சி பெறுவது எளிது; சதம் எடுப்பது கடினம்

பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதி கடினமாக அமைந்ததால், கிராமப்புற மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுப்பது கடினம்" என மாணவர்கள், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி

அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், "அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்" என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று வழக்கை முடித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

எல்.கே.ஜி., புத்தகத்தில் சூரியன்: தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம்

"எல்.கே.ஜி., புத்தகத்தில், இடம் பெற்றுள்ள, "சூரியன்" படம் குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கலாம்&' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப்-2: ஏப்ரல் 7ம் தேதி 2ம் கட்ட கலந்தாய்வு

குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 7ம் தேதி, அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) அலுவலகத்தில் நடக்கிறது.

Thursday, April 3, 2014

கருணை மதிப்பெண் போடுவது மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்

தவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.

மே 9ல் பிளஸ் 2 முடிவுகள்: மே 23ல் 10ம் வகுப்பு முடிவுகள்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இன்னும் முடியவில்லை; பத்தாம் வகுப்பு தேர்வு, வரும் 9ம் தேதி தான் முடிகிறது. விடைத்தாள் திருத்தியதற்குப் பின், பல வேலைகள் உள்ள நிலையில் எந்த ஆண்டும் இல்லாமல், மிகவும் முன் கூட்டியே தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை தேர்வுத்துறை நேற்று அறிவித்தது.

நாளை விண்ணில் பாய்கிறது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி

கடல்வழி ஆராய்ச்சிக்கான, "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,-1பி" செயற்கைகோள், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

சதுரங்கம் விளையாட ஆர்வம் அதிகரித்துள்ளது: ஆனந்த்

உலக தகுதிச் சுற்று வெற்றியினால், சதுரங்கம் விளையாட வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்து உள்ளது என விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலக சதுரங்க போட்டியில், நடப்பு சாம்பியன், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதும் வீரரை, தேர்வு செய்யும் தகுதிச் சுற்று (கேண்டிடேட்ஸ்) சதுரங்க போட்டி ரஷ்யாவில் நடந்தது. அதில் 5 முறை சாம்பியனான, தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உட்பட, 8 பேர் கலந்துகொண்டார்.

பொறியியல்தான் படிக்க வேண்டுமா?

ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முழுமையாக முடிப்பதே ஒரு சாதனை என்ற காலம் மாறி, இன்று பல விதங்களிலும் பெற்ற விழிப்புணர்வு மூலமாக, பெரும்பாலமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மேற்படிப்புக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.