Wednesday, October 29, 2014

நெட் தேர்வு: டிச.,28ல் நடத்த சிபிஎஸ்இ முடிவு

'நெட்' (தேசிய தகுதித் தேர்வு) தேர்வை மத்திய மேல்நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) டிசம்பர் 28ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தலைமை பண்பு வளர்த்தல் குறித்த ஐந்து நாள் பயிற்சி

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், தலைமை பண்பு வளர்த்தல் குறித்த, ஐந்து நாள் பயிற்சி துவங்கியது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு வினா - விடை புத்தகங்களை அனைத்து மாவட்டங்களிலும் விற்க உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுக்கான வினா - விடை புத்தகங்களை, 32 மாவட்டங்களிலும் விற்பனை செய்ய, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

அடிக்கடி இடம்பெயர்வதால் பாதிக்கப்படும் கல்வி

தொழில்துறை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து தங்கி பணியாற்றுகின்றனர்.

தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும் 30, 31ம் தேதிகளில் நடக்கிறது.

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம்!

ஆசிரியர் பயிற்சி கல்விக்கு, அடுத்த ஆண்டு முதல், புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
மாணவர்களின் தேர்வு மதிப்பீடு முறையில் மாற்றம், மாணவர்களின் செயல் வழியிலான அணுகுமுறை திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் உள்ளிட்ட, பல புதிய திட்டங்களை அமல்படுத்த, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களின் குறைந்த விலையுள்ள சோலார் மோட்டார் சைக்கிள்

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான சோலார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் சிதறிக் கிடந்த கூடுதல் விடைத்தாள்கள்

கோவை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத கூடுதல் விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கல்

கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் அண்ணாபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த செப்டம்பர், 25 முதல் அக்டோபர், 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.ஸி., துணைத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் சான்றிதழ்கள், தேர்வு எழுதிய மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

Tuesday, October 28, 2014

ஒவ்வொரு முறையும் மிரட்டுவது சரியா?: அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கேள்வி

அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளி மாணவர்களை, வரும் பொதுத் தேர்வில், தேர்வெழுத அனுமதிக்க மாட்டோம் என, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ள நிலையில், அங்கீகாரம் கேட்டாலும் தமிழக அரசு தர மறுக்கிறது. இதன் உள் நோக்கம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்வு நெருங்குவதால் தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை

தேர்வு நெருங்குவதால், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் மட்டுமல்ல, அனைத்து மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கிறது.
தமிழகத்தில் தரம் உயர்த்திய 100 மேனிலை, 50 உயர் நிலை பள்ளிகளுக்கான காலியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திறனாய்வு தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு: நவம்பர் 2ம் தேதி, தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர் மூலம், தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தேசிய பாடத்திட்டப் பள்ளிகள் அங்கீகார சான்று விபரங்களை ஒப்படைக்க உத்தரவு

பள்ளி அங்கீகார சான்று, தமிழ் மொழி கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளுக்காக, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற, தேசிய அளவிலான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், தங்களது அங்கீகார சான்று விபரங்களை, டவுன்ஹால், புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போதிய கட்டட வசதியின்றி தரம் உயர்த்தப்பட்ட பள்ளி மாணவர்கள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு போதிய கட்டிட வசதியில்லாததால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

Monday, October 27, 2014

சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமது வலைப்பக்கம் செயல்படாமல் போனதற்கு வருந்துகிறோம் .
இன்னும்  ஓரிரு  நாளில் மீண்டும் நமது கல்விசிகரம் செயல்படத் தொடங்கும் . ஆதரவு அளித்துவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி .