Sunday, November 30, 2014

பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் கொண்டாட நடவடிக்கை: ஸ்மிருதி இரானி

திருவள்ளுவரை தொடர்ந்து, பாரதியார் பிறந்த நாளையும், நாடு முழுவதும் அரசின் சார்பில் கொண்டாட, நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாங்கள் லோடு மேன்களா? - புலம்பும் துவக்கப் பள்ளி ஆசிரியைகள்

துவக்கப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பொருட்களை, பல கி.மீ., தூரம் பயணித்து, ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். பாடம் சொல்லிக் கொடுக்கும் நாங்கள், லோடு மேன்களா? என துவக்கப் பள்ளி ஆசிரியைகள் ஆதங்கப்படுகின்றனர்.

காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி

அரசுப் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், கல்வித்துறை உயர் அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், விடைக்குறிப்பு இல்லாததால், சரியான மதிப்பெண் மதிப்பீடு செய்ய முடியவில்லை என, மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்வி அனுமதி வழங்கும் அதிகாரம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவரின் பிறந்தநாள் வடஇந்தியப் பள்ளிகளில் கொண்டாடப்படும்: மத்திய அரசு

உலகப் புகழ்பெற்ற தெய்வீக கவி திருவள்ளுவரின் பிறந்தநாள், அடுத்தாண்டு, வட இந்திய பள்ளிகளில் கொண்டாடப்படுவதோடு, அவருடைய போதனைகள், பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் என்று மத்திய மனிதவள அமைச்சர் இரானி தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருத மொழிப்பாட விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

அரசு செய்த தவறுக்கு மாணவர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவே நடப்பு கல்வியாண்டில் மூன்றாவது மொழிப் பாடமாக ஜெர்மன் மொழியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

திறனறி தேர்வில் கோவை பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி

மாணவர்களின் திறனறி தேர்வில், கோவை பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

Thursday, November 27, 2014

திருட்டு நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? துப்பாக்கியால் சுடுவது எப்படி? - போலீஸாரிடம் கேள்வி கேட்டு அசத்திய சென்னை பள்ளி மாணவர்கள்

திருட்டு நகைகளை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?, துப்பாக்கியால் சுடுவது எப்படி?, எப்ஐஆர் என்றால் என்ன? என்று போலீஸாரிடம் சரமாரியாக கேள்வி கேட்டு அசத்தினர் பள்ளி மாணவர்கள்.

பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்களை முழுமையாக இடித்து அகற்ற கலெக்டர் உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் பழைய, பயன்பாடு இல்லாத பள்ளி கட்டிடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, முழுமையாக இடித்து அகற்ற, கலெக்டர் பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுத்தேர்வு தேர்ச்சியை 90லிருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அமைச்சர் உத்தரவு

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாணவர்களின் மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க, அதிகாரிகளுக்கு, அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்வி அனுமதி வழங்கும் அதிகாரம்

அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் எம்.பில்., பிஎச்.டி., போன்ற உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் அதிகாரம், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.இ.ஓ.,க்கள்) அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலையில் 5 புதிய படிப்புகள் துவக்கம்

அண்ணா பல்கலையில் இரண்டு மற்றும் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் 3 என, மொத்தம் ஐந்து புதிய படிப்புகள் துவக்கப்படுகின்றன.
இவற்றிற்கு, அடுத்த மாதம் 3ம் தேதி நடக்கும் கல்விக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுகிறது. சென்னை, அண்ணா பல்கலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, கல்விக் குழு கூட்டம் நடக்கும். இதில், பாடத்திட்டத்தில் மாற்றம், புதிய படிப்புகள் துவக்குதல், தேர்வு முறையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட, பல்வேறு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.

குறைந்த மாணவர்களைக் கொண்ட மாநகராட்சிப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு

மாணவர் சேர்க்கை 25க்கும் குறைவாக உள்ள ஏழு மாநகராட்சி பள்ளிகளை, தனியார் மூலம் நடத்தி, வரும் கல்வியாண்டு முதல் சேர்க்கையை அதிகரிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 80 ஆயிரமாக குறைந்துள்ளது.

Tuesday, November 25, 2014

முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதி என்ன? - அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, என்ன என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடாததால், விண்ணப்பதாரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எம்.பி.ஏ., படிக்க விரும்புகையில்...

எம்.பி.ஏ., சேர நினைக்கும் ஒருவர் என்னென்ன திறன்கள் மற்றும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டுமென்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்கு பிடித்தமான கல்லூரியில் இடம்பிடிக்க நடக்கும் போட்டியில், சிறப்பாக செயல்பட்டு வெற்றிகாண முடியும்.
அது தொடர்பான சில ஆலோசனைகள்.

பலவிதமான ஆபத்துக்களால் சூழப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குளம் போல் தேங்கியுள்ள மழைநீர், வெட்டி குவிக்கப்பட்டுள்ள பனை மரங்களால், மாணவர்களை அச்சுறுத்தும் விஷ ஜந்துக்கள் என, அரசு தொடக்கப் பள்ளியை சூழந்துள்ள ஆபத்துகளை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, கிராமவாசிகள கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மாதாமாதம் 2 லட்சம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வினியோகம்

அரசு உத்தரவின்படி, கோவை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் இரண்டு லட்சம் ஊட்டச்சத்து மாத்திரைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக, பல்வேறு உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்தது. தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறையும் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அரசு உத்தரவின்படி, ஊட்டச்சத்து மாத்திரை வினியோகிக்கப்பட்டு வருகிறது.

Sunday, November 23, 2014

சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது மந்திரி ஸ்மிரிதி இரானி

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருதத்தை கட்டாய பாடமாக்க முடியாது என்று மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்து உள்ளார்.


மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க உத்தரவு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 -வில் மெதுவாக கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு கையேடு வழங்கி பயிற்சியளிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச லேப்-டாப்பை விற்கும் மாணவர்கள் - விழிப்புணர்வு தேவை

இலவச லேப்-டாப் பெறும் மாணவர்களில் சிலர், சில ஆயிரம் ரூபாய்க்கு ஆசைபட்டு அவற்றை விற்று ஏமாறுகின்றனர்.
இலவச பாடப்புத்தகம், சீருடை, சைக்கிள், லேப்-டாப் என 16 வகையான கல்வி நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவியரின் கல்லூரி படிப்புக்கு உதவும் வகையில், ஆண்டுதோறும் இலவச லேப்-டாப் வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 13,389 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்-டாப் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூற ஆசிரியர்களுக்கு அறிவுரை

விடலை பருவத்தினருக்கு அறிவியல் கலந்த உண்மைகளை கூறுமாறு ஆசிரியர்களுக்கு மனநல சிறப்பு டாக்டர் பாபு அறிவுரை வழங்கினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், மாவட்ட பள்ளி கல்வி துறை, செல்லமுத்து அறக்கட்டளை, சத்தியசாயி சேவா சமிதி சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான, "மாணவர் மனநலம் காப்போம்" என்ற தலைப்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது: மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டிய கடமை தலைமை ஆசிரியர்களுக்கு உள்ளது.

தமிழ் மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமைக்கான மனு: தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றம்

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையின்போது, இருவர், ஒரே கட் - ஆப் மதிப்பெண் பெற்றால், தமிழ் பாட மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க கோரி தாக்கலான மனுவை, தனி நீதிபதி விசாரணைக்கு மாற்றி, மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.

மாணவர்களின் வாசிப்புத்திறன் குறைந்ததற்கான காரணங்கள்: கல்வித்துறை ஆய்வு

குடும்பம், வாழ்விட சூழல், சினிமா, டிவி தாக்கம், கிரிக்கெட், ஆசிரியர்களின் கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு திறன் குறைந்திருப்பது, கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும் யோகாவை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு திட்டம்

அடுத்த கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில், யோகாவை ஒரு பாடமாக சேர்க்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ துறைக்கான அமைச்சர், ஸ்ரீபத் நாயக் கூறியதாவது: யோகா கலையை கற்பதன் மூலம் இளம் தலைமுறையினர், எதிர்காலத்தில் நல்ல பண்பு மற்றும் உடல் நலம் உள்ளவர்களாக தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம்தான் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான சம்பளத்தை, பள்ளி நிர்வாகத்திடம் வழங்கும்படி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணிதத்தை எளிமையாக்கும் டி.வி.டி. மற்றும் புத்தக வெளியீட்டு விழா

கணித பாடத்தை மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, உமாதாணுவின், டி.வி.டி., மற்றும் புத்தக வெளியீட்டு விழா, கோவை மணி மேல்நிலைப் பள்ளி, நானி கலையரங்கில், நாளை(நவம்பர் 24) மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.

பயன்படாது போகின்றனவா மாணவர்களுக்கான நடமாடும் உளவியல் மையங்கள்?

மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அல்லாமல், சொற்ப எண்ணிக்கையில், உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், நடமாடும் உளவியல் மையம் பயனின்றி போவதாக, பள்ளி ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வசதிகள் ஏதுமின்றியும் தொடர்ந்து சாதிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோடிக்கணக்கில் செலவு செய்து அமைக்கப்பட்ட செயற்கை ஓடுகளம், செயற்கை புல்வெளி, கால்பந்து, ஹாக்கி மைதானங்கள், கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் உள்ளரங்குகள் இருந்தால்தான் விளையாட்டு கனவு நனவாகுமா? சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் அடிப்படை வசதி எதுவுமின்றி பதக்கங்களை வெல்லலாம் என்பதை நிரூபித்து வருகின்றனர் அரசுப் பள்ளி மாணவர்கள்.

ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில், ஒன்பது மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்புகள் நடந்தன.

Thursday, November 20, 2014

அதிகரிக்கும் இலவச ‘லேப்டாப்’ விற்பனை; கண்டுகொள்ளாத கல்வித்துறை

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு, அரசால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் லேப்டாப்க்கு சந்தையில் கிராக்கி அதிகரித்துள்ளது. இதற்கு, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் நியமனத்தில் ஊழல்?; லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு புதியதாக ஆசிரியர் நியமனம் செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஜெர்மன் பாடம் தொடரும்: மத்திய அரசு

’கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக ஜெர்மன் தொடரும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மூன்றாம் மொழிப்பாடமாக இருந்த அயல்நாட்டு மொழியான ஜெர்மன் மாற்றப்பட்டு, சமஸ்கிருதம் கற்றுக் கொடுக்கப்படும் என, கடந்த வாரம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இன்டெர்நெட் பயன்பாடு; இந்தியாவுக்கு இரண்டாம் இடம்?

உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Wednesday, November 19, 2014

அரசு பள்ளிகளில் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் ஆய்வு

விருதுநகர்மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்ட நிதி மூலம் அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு பணிகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.

‘சத்துணவு முட்டை வாங்குவதில் கோடிக்கணக்கில் கொள்ளை’

”சத்துணவிற்காக, முட்டையை அதிக விலை கொடுத்து வாங்குவதால், சிலருக்கு கமிஷன் கிடைக்கிறது. இதனால், பல கோடி ரூபாய், அரசுப் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது.  

ஆங்கில பள்ளி மூடப்படுவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு

உரிகம் ஐந்து விளக்கு பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த பி.இ.எம்.எல்., ஆங்கில பள்ளியை காப்பாற்ற வலியுறுத்தி, மாணவர்கள் ஊர்வலமாக சென்று, தங்கவயல் கல்வி அதிகாரியிடம் மனு வழங்கினர்.

பொதுத்தேர்வு வினாத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை குறைப்பு

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு விடைத்தாள்களின் பக்கங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு எழுதும் மாணவர்கள், நேர விரயம் மற்றும் கண்காணிப்பாளரின் கவனத்தை கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு முதல் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விடைத்தாள் இணைத்து வழங்கப்பட்டது. எழுதாத பக்கங்களில், கிராஸ் கோடு போட அறிவுறுத்தப்பட்டது.

இடமாறுதலுக்கு நவ., 25க்குள் சிறப்பு கவுன்சிலிங்’: கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தல்

’கல்வித் துறைக்கு மாறுதல் கேட்டு காத்திருக்கும் கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கு நவ., 25க்கு முன் சிறப்பு கவுன்சிலிங் நடத்த வேண்டும்,’ என இணை இயக்குனர் அமுதவல்லியிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க கள்ளர் பிரிவு மாநில செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர்

நவ., 25 மற்றும் 26ல் பணி நியமன கலந்தாய்வு

மதுரையில் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு நவ., 25, 26ல் நடக்கிறது.

விளையாட்டு உபகரணங்கள் பழுது: தவிப்பில் மாணவர்கள்

பொறையூர், ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப் பள்ளியில் உள்ள விளையாட்டு திடல் மற்றும் உபகரணங்கள் பழுதானதால், பள்ளி மாணவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது.

ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!

ஆபாச வலைதளங்களுக்கு பள்ளி மாணவர்கள் அடிமைகளாகி வருவதாக, ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Friday, November 14, 2014

பள்ளிகளுக்கு மீண்டும் அகராதி; குழப்பத்தில் தலைமை ஆசிரியர்கள்

இடைநிலைக் கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி பராமரிப்பு நிதியில் இருந்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு மொழிஅகராதி கள் வருகையால் தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இடைத்தேர்வில் பிளஸ் 1 மாணவர்கள் குழப்பம்

மதுரை மாவட்டத்தில் பிளஸ் 1 இரண்டாம் இடைத்தேர்வு வினாத்தாளில் குறிப்பிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

மாணவன் கொலை எதிரொலி; பள்ளிக்கு தொடர் விடுமுறை

விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பதட்டம் நிலவுவதால் பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நி

முதல்வர் கணினி தமிழ் விருது’க்கு விண்ணப்பிக்க அழைப்பு

’முதல்வர் கணினி தமிழ் விருது’ பெற விரும்புவோரிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை மூலம், ’முதல்வர் கணினி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. விருது தொகை, 1 லட்சம் ரூபாயுடன், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இவ்வகையில், 2014ம் ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, November 11, 2014

குறுந்தகடுகள் வழியாகக் கற்பித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சியை அதிகரிக்க ரூ.1.50 கோடி ஒதுக்கீடு

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, குறுந்தகடுகள் மூலமாக பாடங்களை நடத்திட தமிழக அரசு ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

நவம்பர் 11 - தேசிய கல்வி தினம்!

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டிலுள்ள கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமையும். ஒவ்வொரு தனி மனிதரின் முன்னேற்றமும் அவர் பெறும் வாழ்க்கையும் மேம்பட, கல்வி உதவுகிறது.
கல்வி கற்றால்தான் தனக்கும், தன் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மைகள் செய்ய முடியும். எனவே தான், "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என நன்னுால் அறிவுறுத்துகிறது.

ஒத்துழைக்காத சுகாதாரத்துறை: தவிக்கும் ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தில், ரத்த வகை குறித்த விவரங்களை பதிவு செய்வதற்கு, சுகாதாரத்துறை ஒத்துழைப்பு அளிப்பதில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான தடகள போட்டி

கோவை கல்வி மாவட்ட அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான தடகள போட்டி, பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி சார்பில் நடந்தது.
இதில், 19 வயது சூப்பர் சீனியர் மாணவர்களுக்கான பல்வேறு தடகள போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

பாடத்திட்டங்களை டிசம்பர் 7க்குள் முடிக்க கட்டாயப்படுத்தும் கல்வித்துறை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான மொத்த பாடத்திட்டத்தையும், டிசம்பர் 7க்குள் முடிக்குமாறு கல்வித்துறை கட்டாயப்படுத்துவதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.

மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க, விரைவில் தேசிய திறனறி திட்டம்!

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், விரைவில், தேசிய திறனறி திட்டம் துவங்கப்படுகிறது.
மைதானம், போதிய பயிற்சியின்மை, திறமை இருந்தும் தங்களுக்கான வாய்ப்பு கிடைக்காமல், பள்ளி மாணவர்கள் பலர், போட்டியின் ஆரம்ப நிலையிலேயே வெளியேறுகின்றனர். ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக், நர்சரி பள்ளிகளின் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைப்பதில்லை.

Monday, November 10, 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 10ம் தேதி (இன்று) கடைசி நாளாகும்.
வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் அக்டோபர் 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26-ம் தேதி மற்றும் நவம்பர் 2-ம் தேதி இதற்கான சிறப்பு முகாம்கள் 890 மையங்களில் நடத்தப்பட்டன.

இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வான 14 வயது ஏழைப் பள்ளி மாணவன்!

ட்டடை அகற்றும் இயந்திரம், நடைமேடை மின்சார உற்பத்தி கருவி, பிளாஸ்டிக் வீடு... என புதிய கண்டுபிடிப்புகளை, பெரியகுளம் அருகே வடுகபட்டி மாணவன் யோகேஷ், 14, உருவாக்கியுள்ளார். இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகத்தில் இளம் விஞ்ஞானி ஆராய்ச்சி படிப்புக்கு தேர்வாகியுள்ளார்.

மத்திய ஆசியாவின் சிறந்த வணிகப் பள்ளி ஐ.ஐ.எம்., பெங்களூர்!

மத்திய ஆசியாவிலேயே சிறந்த முதல்தர வணிகப் பள்ளியாக ஐ.ஐ.எம்., பெங்களூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அக்கல்வி நிறுவனம், தனது முந்தைய நிலையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.
ஏழாவது ஆண்டாக இந்த சிறப்பை பெற்றுள்ளது ஐ.ஐ.எம்., பெங்களூர்.

பணி நிரந்தரம் ஆகாததால் வேலையை உதறிய 2000 பகுதிநேர ஆசிரியர்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வந்த 2,000 பகுதிநேர ஆசிரியர்கள், பணி நிரந்தரமாகாத விரக்தியால், வேலையை உதறி உள்ளனர்.

பெரும்பாலான பள்ளிகளில் முடங்கிய மாணவர்களுக்கான உடல்தகுதித் தேர்வு

அரசுப் பள்ளி மாணவர்களின், விளையாட்டுத் திறனை அறிந்துகொள்ள நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வு, முறையான கண்காணிப்பும், ஆய்வும் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாணவர் சேர்க்கை கட்டணம் எப்போது கிடைக்கும்?

அரசு உத்தரவின்படி, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களின் சேர்க்கைக்கான கட்டணம் எப்போது வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகிகள் காத்திருக்கும் சூழலில், கட்டண விபரம் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்மார்ட் கார்டு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை: தலைமையாசிரியர்கள் புகார்

பள்ளி மாணவர்களுக்கான ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிவித்து, மூன்று ஆண்டுகள் நிறைவுபெற்றும், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. புள்ளி விபரங்களை தொகுத்து அளிக்கும் பணியில், காலம் விரயமாவதாக பள்ளி தலைமையாசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் EMIS விபரத்தை விரைந்து முடிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது


ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின்
EMIS  விபரத்தை  விரைந்து முடிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது 

       2013-2014 கல்வியாண்டில் புதிதாக சேர்ந்துள்ள ஒன்றாம் வகுப்பு மாணவர்களையும் மற்றும்  இரண்டாம் வகுப்பு மாணவர்களையும் புதிதாக சேர்க்க வரும் 15.11.2014 குள் ONLINE இல் பதிவேற்ற பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .
           CLICK HERE TO DOWNLOAD EMIS INSTRUCTION.
           
           CLICK HERE TO DOWNLOAD NEW FORM OF EMIS
           
           CLICK HERE TO DOWNLOAD OLD FORM OF EMIS





Sunday, November 9, 2014

42 பேருக்கு இன்று குரூப் 2 பிரதான மறுதேர்வு


காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2 பிரதான தேர்வை எழுத இயலாத 42 பேருக்கு இன்று மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி

இன்னும் 3 அல்லது 4 வாரங்களில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியம் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்ரமணியம், குரூப் 2 தேர்வு மற்ற தேர்வுகளையும் கணினி மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 6 லட்சம் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் ‘பாஸ்’ மார்க் நடைமுறை அமல்: ‘ஃபெயில்’ ஆனவர்கள் ஆசிரியராக முடியாது

அரசுப் பள்ளிகளுக்கு தர மான ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் நோக்கில், முது கலை பட்டதாரி ஆசிரியர் நியமனத் தில் முதல்முறையாக ‘பாஸ்’ மதிப்பெண் முறை பின்பற்றப் படவுள்ளது.
அரசு பள்ளிகளுக்குத் தேவைப் படும் முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

முதுகலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பம் விற்பனை நாளை தொடங்குகிறது: நந்தனம் பள்ளியில் விற்பனை

அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், உடற்கல்வி இயக்குநர்களும் (கிரேடு-1) போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப் படிவங்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் நவம்பர் 10 (திங்கள்கிழமை) முதல் 21-ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தொடர்பான புதிய ஒப்புதல்

சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக்கல்வி இயக்குனரின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற புதிய உத்தரவுக்கு, பொதுக்கல்வி வாரிய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனித்தேர்வு எழுத விரும்புவோர் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

வரும் மார்ச்சில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனித் தேர்வாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், வரும் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

நெருங்கும் தேர்வு: அவசர கதியில் பாடமெடுக்கும் ஆசிரியர்கள்

வரும் டிசம்பர் 10ம் தேதி துவங்கும் அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு மாணவருக்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் என்பதால், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அவசரகதியில் வகுப்புகளை எடுத்து வருகின்றனர்.

துவக்கப் பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவு

துவக்கப்பள்ளி வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கிய பட்டியலை, உடனடியாக சமர்ப்பிக்க, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கென தனி வெப்சைட் விரைவில் துவக்கம்

மதுரை மாவட்டத்தில் கல்வித்துறைக்கென தனி வெப்சைட் விரைவில் துவங்கப்படவுள்ளது. இதன்மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் உட்பட அனைத்து விபரங்களும் ஒருங்கிணைக்க வாய்ப்பு ஏற்படும்.
கல்வி இயக்குனர் அலுவலக சுற்றறிக்கை, உத்தரவு மற்றும் தேவைப்படும் விபரங்கள், தகவல்கள் மாவட்ட கல்வி அலுவலகம் வழியாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான பதில்கள் மற்றும் பதிவேடு நகல்கள் சென்னை கல்வி இயக்குனருக்கு வந்த வழியே அனுப்பப்படும்.

Friday, November 7, 2014

1,800 முதுநிலை ஆசிரியர் நியமனத்திற்கான போட்டித்தேர்வு: அறிவிப்பு


Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 and 2014-2015 - Click here for Notification

பள்ளிகளில் காலியாக உள்ள 1,800 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பங்கள், நவம்பர் 10முதல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மொழிப்பாட ஆசிரியர்கள் இணையவழி கலந்தாய்வு மூலம் நவம்பர் 8ல் நியமனம்

தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு பெற்றுள்ள சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்கள் 144 பேர், நாளை(நவம்பர் 8ம் தேதி) நடக்கும் இணையதள வழி கலந்தாய்வில் நியமனம் செய்யப்படுகின்றனர்.

பள்ளிகளில் கழிப்பறைகள் நிலை குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு

அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் நிலை குறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரேநாளில் 20 ஆசிரியர்கள் லீவு: விடுமுறை விடப்பட்ட அரசுப் பள்ளி

ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், திருத்தங்கல் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இப்படி செயல்பட்டால் விருதுநகர் மாவட்டம் எப்படி நூறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவது? என பெற்றோர்கள் புலம்புகின்றனர்.
கல்வியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது.

10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்

கடலூர் கல்வி மாவட்ட 10ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 229 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1000த்திற்கும் மேற்பட்ட 10ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாமிற்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் ஏற்பாடு செய்துள்ளது.

பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில் முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர் சஸ்பெண்ட்

கோவையில், 350 டன் பள்ளி பாட புத்தகம் மாயமான வழக்கில், முதன்மை கல்வி அலுவலக பதிவு எழுத்தர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கோவை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு வழங்க, 2011ம் ஆண்டு, சமச்சீர் கல்வி அல்லாத 350 டன் பழைய பாட திட்ட புத்தகங்கள் மாயமாகின. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கல்வித்துறை அதிகாரிகள், பாட புத்தகங்கள் மாயமானதில், முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தனர்; சி.இ.ஓ., ராஜேந்திரன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Thursday, November 6, 2014

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்

கோவை: மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா பொருட்களின் தரம் குறித்து ஆய்வு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், விலையில்லா பொருட்களின் தரம் குறித்து, கல்வித்துறை ஆய்வுக்குழு சோதனை மேற்கொண்டுள்ளதால், நலத்திட்டங்களின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா புத்தகம், காலணி, புத்தகப்பை, வண்ணப்பென்சில், வரைபடம், கிரயான்ஸ், சைக்கிள், ஜாமெமன்ட்ரி பாக்ஸ், சீருடை உட்பட பதினான்கு பொருட்கள், வகுப்பு வாரியாக, அரசின் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு

ஊக்க ஊதியம் பெறும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குறித்த பட்டியல் அனுப்புமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், கூடுதல் கல்வி தகுதி பெறும் பட்சத்தில், அவர்களுக்கு உயர்கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது நடைமுறையாக உள்ளது. ‘இன்சென்டிவ்’ எனப்படும் இந்த ஊக்க ஊதியத்தை, தனது பணிகாலத்தில் ஒரு ஆசிரியர், இரண்டு முறை பெறலாம்.

Wednesday, November 5, 2014

அடுத்தாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்?

அடுத்தாண்டு முதல், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வுகாணும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

மாத ஓய்வூதியம், பணி நீட்டிப்பு ஆகிய பிரச்னைகள் குறித்த ஆசிரியர்களின் போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், பள்ளிக்கல்வித் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பள்ளிகளின் வளாகத்திலேயே மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க உத்தரவு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 துணைத்தேர்வு விடைத்தாள் நகல் கோரியோர் இணையதளத்தில் பதிவிறக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், இணையதளம் மூலமாக விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

குரூப் - 2 தேர்வுக்கு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெ

வரும் 8ம் தேதி நடக்க உள்ள குரூப் - 2 தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் முதன்முறையாக ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான தரமான பள்ளி

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக, மத்தியப் பிரதேச மாநிலத்தில், முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நாட்டின் முதல் ஷிரமோதயா பள்ளிக்கான அடிக்கலை நாட்டியுள்ளார்.

பல்வேறு காரணங்களால் விளையாட்டில் பின்தங்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்

நிதி ஒதுக்கீடு குறைவு, விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால், விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் பின்தங்குகின்றனர்; விளையாட்டில் ஆர்வம் இருந்தும் தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.

ஆபத்தான வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை!

மதுரை மாவட்டத்தில் 78 அரசு பள்ளிகளில், ஆபத்தான நிலையிலுள்ள வகுப்பறைகள், கட்டடங்களை பயன்படுத்த கல்வித்துறை தடை விதித்தது.
வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. மேலும் அவ்வப்போது தாழ்வழுத்தம் காரணமாக புயல் உருவாகியும் மழை பெய்கிறது. மழை மற்றும் வெள்ளச் சேதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவியருக்கு இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம்

துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவியருக்கு, இடையே பேச்சு போட்டி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

Sunday, November 2, 2014

மண்டல அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தல்

மண்டல அளவிலான அறிவியல் கண்காட்சியில், மாணவ, மாணவியர் பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டை பெற்றனர்.

தரத்தை பரிசோதிக்கும் புதிய நடைமுறை: விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்புநவம்பர்

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர, மற்ற பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நிரம்பி வழியும் வழக்குகளால் திக்குமுக்காடும் பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வுபெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அரசு ஊழியர் 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணிபுரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

Saturday, November 1, 2014

மாற்று வேலை நாளாக சனிக்கிழமை பள்ளி செயல்பட்டால் கட்டாயம் சத்துணவு வழங்க உத்தரவு

மதுரையில் மாற்று வேலை நாளாக சனிக்கிழமையன்று பள்ளி செயல்பட்டால், அன்று கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டும் என கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

செய்முறை தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க அலைக்கழிப்பதாக புகார்

பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள், செய்முறை தேர்வுக்காக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க, அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கோவை நேரு ஸ்டேடியத்தில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இன்று, கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றன. ராபர்ட் பாஷ் மற்றும் சித்தாபுதுார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், மாநகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவியரிடையே, நவம்பர் 1 முதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 14, 17, 19 வயதுக்கு உட்பட்டு நடத்தப்படும் மாவட்ட அளவிலான போட்டிகளாகும் இவை.
இன்று, கபடி, த்ரோபால், கோகோ, வாலிபால் போட்டிகளும், நாளை, தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, கோப்பையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

"கல்வியில் இந்திய அளவில் தமிழகமும், மாநில அளவில் திருப்பூரும் முன்னேற்றம் கண்டுள்ளன'

"கல்வியில், இந்திய அளவில் தமிழகமும், மாநில அளவில் திருப்பூரும் முன்னேற்றம் கண்டுள்ளன&'&' என்று அமைச்சர் ஆனந்தன் பேசினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச லேப்-டாப் வழங்கும் விழா, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடந்தது; முதன்மை கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.