Monday, February 16, 2015

வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: தேர்வுத்துறை

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், வினாத்தாளில் கறுப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயன்பாட்டில் இல்லாமல் போன கல்வித்துறை இணையதளம்

அரசு பள்ளிகளை மேம்படுத்த, கோவை மாவட்ட கல்வித்துறையால் துவங்கப்பட்ட, பிரத்யேக இணையதளம், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கட்டணம் செலுத்தி, பராமரிக்க தவறியதால், பயன்பாட்டில் இல்லாமல் போனது.

இன்னும் ஒரு வாரத்தில் குரூப் - 2 தேர்வு முடிவுகள்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர்

குரூப் - 2 தேர்வு முடிவுகள் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி.,யின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

Thursday, February 12, 2015

CPS ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மாவட்டத்தலைவர் சி.முத்துச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
     

10th & +2 வினாத்தாள் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு : அரசு தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள் வைக்கப்படும் பாதுகாப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய போலீஸ்பாதுகாப்பை பலப்படுத்த அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

மாநில பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் 50 ஆயிரம் ஆசிரியர்கள்

பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

சட்டக் கல்லூரிகளுக்கு பிப். 18 வரை விடுமுறை நீட்டிப்பு

சென்னை, மதுரை சட்டக்கல்லூரிகளின் விடுமுறையை பிப்ரவரி 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக வீடுமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, February 11, 2015

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக பள்ளிகளுக்கு 80 லட்ச ரூபாய் ஒதுக்கீடு

கல்வி வளர்ச்சி நாள் பரிசாக, பள்ளிகளுக்கு 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக, பள்ளிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக, 80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. தேர்வு செய்யப்படும் சிறந்த பள்ளிகளுக்கு, இத்தொகை பரிசு தொகையாக பகிர்ந்தளிக்கப்படும்.

வீணாகி வருகின்றன ஆங்கிலம் கற்பித்தலுக்காக பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட குறுந்தகடுகள்!

ஆங்கில பாடத்தை புதிய முறையில் பயிற்றுவிப்பதற்காக, ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு குறுந்தகடு வீதம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், டிவிடி பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால், குறுந்தகட்டை பயன்படுத்த முடியாமல், அவை வீணாகி வருகின்றன.

ஆன்லைன் சேர்க்கையைத் துவக்கிய சென்னை சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

சென்னை நகரிலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆன்லைன் முறையிலான மாணவர் சேர்க்கையைத் துவங்கியுள்ளன.
சென்னை நகரிலுள்ள எஸ்.பி.ஏ.ஓ பள்ளி மற்றும் ஜுனியர் காலேஜ், பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலுள்ள சின்மயா வித்யாலயா பள்ளிகள் மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி போன்ற பள்ளிகள் அவற்றுள் முக்கியமானவை. இப்பள்ளிகளில் கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன மற்றும் அவை இரண்டு நாட்களுக்கு திறந்திருக்கும்.

7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து

கோவை மாவட்டத்தில், சுகாதாரத்துறை சார்பில், 7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து இன்று வினியோகிக்கப்படவுள்ளதாக, துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி

பரமக்குடி கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி துவங்கியது.
மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது.

பிரதமரின் ரேடியோ உரையில் மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள்

பிரதமர் நரேந்திர மோடியின், இம்மாத ரேடியோ உரையில், மாணவர்களின் தேர்வு தொடர்பான விஷயங்கள் இடம் பெறும் என, தகவல் வெளியாகியுள்ளது.

Saturday, February 7, 2015

வகுப்பு கட் அடித்து சினிமாவுக்கு சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருப்பூரில், வகுப்புக்கு கட் அடித்துவிட்டு, படம் பார்க்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.

"வாசிப்புத்திறன் மேம்பட, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும்"

மாணவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் தவிர, அவர்களின் வாசிப்பு திறன் மேம்பட அவர்களுக்கு, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.

புரஜக்டர் மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் முறை குறித்து ஆய்வு

செங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாநில குழுவினர் ஆய்வு செய்தனர்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் படங்களை பதிவேற்றும் மாணவிகளே, உஷார்...!

சமூக வலைதளங்களில், படத்தை பதிவு செய்துள்ள பெண்கள், வக்கிர எண்ணம் கொண்ட நபர்களால், துன்புறுத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க, படங்களை, வலைப் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதே நல்லது என்கின்றனர், போலீசார். தற்போது அதிகளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், சமூக வலைதளங்களில் இணைந்திருக்கின்றனர். அவர்களில், மிகப் பெரும்பாலானோர், தங்களின் புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

துவங்கியது பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு

பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான, செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது.

தேர்வின்போது காலணிகள் அணியக்கூடாது என்ற உத்தரவில் நீலகிரிக்கு விலக்கு அளிக்கப்படுமா?

நீலகிரியில் பனிக்காலம் நீடிக்கும் என்பதால், பொதுத்தேர்வு அறைகளில், மாணவ, மாணவியர் காலணிகளை கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்ற உத்தரவில் இருந்து, நீலகிரிக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு கவுன்சிலிங்

மது போதையில் மயங்கிக் கிடந்த கரூர் பள்ளி மாணவனுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் தலைமையிலான குழு கவுன்சிலிங் வழங்கி, வேறு பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தி உள்ளது.

Tuesday, February 3, 2015

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும்தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக,
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 8 வார கால அவகாசம் ,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கோரி SSTA சார்பாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது வழக்கு எண் WP-4420/2014 . வழக்கு கடந்த விசாரணையின் போது பதில் தாக்கல் செய்ய அரசுக்கு பல முறை அவகாசம் அளிக்கப்பட்டது. நீதிபதி அவர்கள் direction கொடுக்கலாமா என கேட்டபோது நீதிமன்றத்திற்குள்ளாகவே இறுதி தீர்வு வேண்டுமென SSTA சார்பாக கடந்த முறை (டிசம்பர் மாதம்)வேண்டப்பட்டது.

நீதி போதனை குறித்த பாடம் பள்ளிகளில் கட்டாயமாகிறதா?

பள்ளிகளில், நீதி போதனையை கட்டாய பாடமாக்குவது குறித்து, சி.பி.எஸ்.இ., மற்றும் மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் விளக்கம் கேட்டுள்ளது. சந்தோஷ் சிங் என்ற வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: தற்போது, இளைஞர்களிடையே நல் ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது. மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு

அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது


மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத்துறை இயக்குனர் ஆலோசனை

மதுரையில் ஐந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் குறித்து மதுரை, திண்டுக்கல், தேனி,ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட முதன்மைமற்றும் கல்வி அலுவலர்கள்,தேர்வுத்துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், தலைமையாசிரியர்கள், வினாத்தாள் காப்பாளர்களுடன் ஆலோசனை நடந்தது.

4 மாதங்களில் மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உத்தரவு

’சென்னை மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும், நான்கு மாதங்களில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்’ என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sunday, February 1, 2015

TNPSC - ANNUAL RECRUITMENT PLANNER 2015 - 2016

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Additional Hospitals covered under this Scheme – Approved – Orders – Issued.

மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி

தமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன.

'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்':மத்திய அரசு உத்தரவு

'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்' முறையில் வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.

பிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை

பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மனித வள மேம்பாட்டு அமைச்சக குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்

ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.