Thursday, November 14, 2013

HAPPY CHILDREN'S DAY

பள்ளிக்கு பிளாஸ்டிக் பைகளை மாணவர்கள் எடுத்து வர தடை

கூடலூர் பள்ளியில் மாணவர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வரக்கூடாது, என தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது, என கூடலூர் நகராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், கூடலூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. சுகாதாரத் துறையினர் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சி.பி.எஸ்.இ. புதிய விதி - கொண்டாட்டத்தில் திளைக்கும் தனியார் பள்ளிகள்

தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளைத் துவங்க, மாநில அரசின் அனுமதியைப் பெற வேண்டியதில்லை என்று சி.பி.எஸ்.இ., அறிவித்திருப்பதால், பல தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்குவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

Wednesday, November 13, 2013

வன்முறை செயல்களை தடுக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி

சமீப காலமாக, பள்ளி, கல்லூரி வளாகங்களில், மாணவர்கள், வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது, கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையே கொலை செய்வது போன்ற, படுபயங்கரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில், மாணவர்களை உரிய முறையில் கையாளவும், அவர்களுக்கு, உளவியல் ரீதியான கலந்தாய்வை அளிப்பதற்காகவும், பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒரு லட்சம் கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட "மங்கள்யான்"

"மங்கள்யான்" செயற்கைக்கோள், வெற்றிகரமாக, ஒரு லட்சம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிரக ஆய்வுக்காக அனுப்பப்பட்ட, "மஙகள்யான்" செயற்கைக்கோள், தற்போது பூமியை, நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. நீள்வட்ட பாதையின் உயரத்தை அதிகரிக்க, பல கட்டங்களாக பணி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை நடந்த, நான்காம் கட்ட முயற்சியில், குறிப்பிட்ட வேகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை,

குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு

குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க பரிந்துரை

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரோக்கிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இதற்கான நிதியை மீண்டும் வழங்க கோவை மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

பள்ளி மேலாண் தொகுப்பு படிவம்: பராமரிப்பு நிதியை பயன்படுத்த கோரிக்கை

ஃபோட்டோவுடன் கூடிய பள்ளி மேலாண் தொகுப்பு படிவம் பூர்த்தி செய்வதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்வதை தவிர்க்க, பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு நிதியை பயன்படுத்த உத்தரவிட வேண்டும்" என, கோரிக்கை எழுந்துள்ளது.

Friday, November 8, 2013

ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம் இம்மாத இறுதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்" என பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கு மொபைல் வேன் கவுன்சிலிங்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், "டீன் ஏஜ்" மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை மேம்படுத்தி, உளவியல் ரீதியாக மாற்றம் கொண்டு வர மொபைல் வேன் மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. இதற்காக 10 வேன்களை கல்வித்துறை வழங்கி உள்ளது.

டி.ஆர்.பி.,க்கு அடுத்த சிக்கல் - நீதிமன்றம் செல்ல தயாராகும் பாதிக்கப்பட்டவர்கள்

முதுகலை ஆசிரியர் தேர்வு விவகாரம், இடியாப்ப சிக்கலாக மாறியதில் மூச்சுவிட முடியாமல் திணறி வரும் டி.ஆர்.பி.,க்கு, அடுத்த நெருக்கடி உருவாகி உள்ளது.

Thursday, November 7, 2013

செவ்வாய் கிரகத்தை அடைய மங்கள்யானுக்கு 10 மாதங்கள் ஏன்?

பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்" செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்" என "அறிவியல்புரம்" இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார்.

குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள்: காற்றில் பறக்கும் உத்தரவு

பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர் மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

புதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பில் 7,000 ஆசிரியர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி., நியமனத்திற்கு முன், மாவட்ட பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்" என 7,000 இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வாசிப்புதிறன்

தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறன் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவுத் தேர்வு

அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை மதிப்பிட அடைவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் முப்பருவ கல்வி மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இக்கல்வி முறையால், மாணவர்களின் கல்வி தரம் மேம்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியீடு: வெறும் 4% பேர் தேர்ச்சி

Tuesday, November 5, 2013

Equivalence of Degree

Equivalence of Degree – various educational qualifications
possessed by the candidates as equivalent to the courses offered by the various
Universities – Recommendation of Equivalence Committee –Orders – issued
.

கனமழை: புதுச்சேரி, கடலூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக,புதுச்சேரியில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
இதேப் போல் கனமழை காரணமாக,கடலூரில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டத்திற்கு வராத ஆன தலைமையாசிரியர்களுக்கு கண்டிப்பு

மதுரையில் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தலைமையாசிரியர்கள் "ஆப்சென்ட்" ஆனதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். மருத்துவ விடுப்பு எடுத்த தலைமையாசிரியர்களது சான்றிதழ்களை "மெடிக்கல் போர்டுக்கு" அனுப்ப உத்தரவிடப்பட்டது.

தமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதைத் தடுக்கும் வகையில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விருது பெற்ற நடுநிலைப் பள்ளி; மூடத்துடிக்கும் கல்வித் துறை

ஜி. தும்மலப்பட்டியில் பவள விழா கண்ட பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
ஜி. தும்மலப்பட்டியில் 1922 ஜூன் 26ல் கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் ஆரம்பபள்ளி துவங்கப்பட்டது. 91 ஆண்டுகளான இப்பள்ளி தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்ந்து உள்ளது.

ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு பயிற்சி: விருதுநகரில் நாளை துவக்கம்

பள்ளி ஆசிரியர்களுக்கான நிதிசார் கல்வியறிவு தொடர்பான பயிற்சி விருதுநகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
பள்ளிகல்வித்துறை உத்தரவுப்படி மாவட்ட வாரியாக 9ம்வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு நிதிசார் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்திற்கு இந்தியா செயற்கைகோள்; வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; நீண்டநாள் கனவு நிறைவேறியது

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்து பெருமிதப்பட வைக்கும் மங்கள்யான் செயற்கைகோள் சரியாக 2. 38 மணிக்கு , ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி,எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இதற்கென விஞ்ஞானிகள் தங்களின் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக இந்த முயற்சி வெற்றிகரமாக முடிய வேண்டும் என இஸ்ரோ சேர்மன் ராதாகிருஷ்ணன் திருப்பதி சென்று வேண்டினார்.

Monday, November 4, 2013

இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து கற்கும் மாணவிகள்

அமர்வதற்கு பெஞ்ச் இல்லாததால், அரசு பள்ளி மாணவிகள், தினமும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்போர், குறிப்பாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு இலவச சைக்கிள், பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை மட்டுமின்றி மாணவிகள் அமரும் வகையில் டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றையும் வழங்கி வருகிறது.

மாதிரி பள்ளிகள் குறித்த அரசு முடிவு: மாநில அரசின் உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தல்

மாதிரி பள்ளிகள் குறித்து டில்லியில் நடக்கும் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கல்வி அமைச்சர் பங்கேற்று மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Wednesday, October 30, 2013

மாணவர்கள் சத்தான உணவு உண்ண வேண்டும்: கல்வி அதிகாரி அறிவுரை

மாணவர்கள் காலை உணவை தவிர்த்தல் கூடாது. சத்தான உணவு உண்ணவேண்டும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறினார்.

10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கேட்கும் தமிழாசிரியர்கள்

மாநில அளவில் 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் தோல்வி அதிகரிப்பை தடுக்க வினாத்தாளில் மாற்றம் தேவை" என, தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.

டி.ஆர்.பி., தமிழ் பாடத்திற்கான மறுதேர்வு உத்தரவு ரத்து!

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வுசெய்ய, டி.ஆர்.பி., நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழ் பாடத்திற்கு மறுதேர்வு நடத்த அளிக்கப்பட்ட உத்தரவுக்கு மதுரை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

திருப்பூர் அரசு பள்ளி மைதானத்தில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

அரசு பள்ளி மைதானத்தில் மரம் நடுவதற்காக குழி தோண்டியபோது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பிளஸ் 2 தேர்வு: ஆசிரியர்கள் அறிவிப்பால் திடீர் பரபரப்பு

பள்ளி பொதுத்தேர்வு ஒரு மாதம் முன்கூட்டி பிப்ரவரியில் துவங்கும் என, பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் தகவல் பரப்பியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tuesday, October 29, 2013

குழந்தையின் கண்பார்வை - பெற்றோரின் பங்கு என்ன?

கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை காத்தல் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இக்கட்டுரை பதிலளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தின் நூலகங்களில் உறுப்பினர்களாக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு

மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு நூலகத்தில் உறுப்பினர்களாக பதிவு பெற்றிருப்பது வளர்ச்சியையும், புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கியுள்ளது.

"ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மதிப்பெண்ணில் மாற்றம் இல்லை"

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில், மாணவர்கள் எடுக்க வேண்டிய மதிப்பெண்ணில், எவ்வித மாற்றமும் கிடையாது" என கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

அதிக கட்டணம் வசூலிக்கும் சிறுபான்மை பள்ளிகள் மீது புகார்

சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு மணவர் பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரிடம், நேற்று புகார் அளித்தனர்.

பள்ளிகளில் செயல்படாத "அன்னையர் குழு":மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார், மெட்ரிக் பள்ளிகளில் " அன்னையர் குழு" செயல்படுவது இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Monday, October 28, 2013

குரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும்

தமிழகத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப்1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப்படும் என அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
நெல்லையில் மூத்த வக்கீல்கள் திருவுருவ படத்திறப்பு விழாவில் பங்கேற்ற டி.என்.பி.எஸ்.சி., சேர்மன் நவநீதகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது,

தனியார் பள்ளி அறைகள் அரசின் இலவசப் பொருட்களால் ஆக்கிரமிப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு இலவச நலத்திட்டப் பொருட்களைப் பாதுகாக்க பள்ளி அறைகள் ஆக்கிரமிப்படுவதை தடுக்க அரசு "குடோன்"களை ஏற்படுத்த வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

மாநில தனித்திறன் போட்டிகள்: பார்வையாளர்களை கவர்ந்த பள்ளி மாணவர்கள்

நெல்லையில் மாநில அளவிலான தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் திறம்பட பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நெல்லையில் நடந்தது.  6 முதல் 8ம் வகுப்பு வரை 9, 10 வகுப்புகள், 11, 12 வகுப்புகள் என 3 பிரிவு மாணவர்களுக்கு 11 போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்றவர்கள் பரிசுக்கு தகுதி பெற்றனர்.

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

பருவ மழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

இந்தியன் வங்கியின் நாமக்கல் கிளை சார்பில் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. கம்ப்யூட்டரில் அடிப்படை தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

துணை தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றுகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணை தேர்வர்களுக்கான மார்க் சீட் வினியோகம் நேற்று துவங்கியது.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்த எஸ்.எஸ்.எல்.ஸி. மற்றும் பிளஸ் 2 துணைத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களுக்கான மார்க்சீட் நேற்று முதல் துவங்கி வரும் 30ம் தேதி வரை அவர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளியிட தடை

தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவை இணையதளத்தில் வெளியிட தடை செய்வதென பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு தோல்வியுற்ற பாடங்களை எழுதுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இத்தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது. தனித் தேர்வர்கள் என அழைக்கப்படும் இவர்களுக்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்ட பின் அந்தந்த தேர்வு மையத்தில் மதிப்பெண் சான்றுகளை பெறலாம்.

Friday, October 25, 2013

இணையதளம் வழியாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் புதிய இணையதளப் பக்கத்தை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான பயிற்சி மையம் (எம்.எஸ்.எம்.இ.) அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்: ஒரு மாதத்துக்குள் வழங்க நடவடிக்கை

தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தை ஒரு மாதத்துக்குள் திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப்-1 தேர்வு இன்று முதல் துவக்கம்

டி.என்.பி.எஸ்.,யால் நடத்தப்படும் குரூப் - 1  தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவங்குகிறது.
குரூப் 1 பிரதானத் தேர்வு, அக்டோபர் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சென்னை தேர்வு மையத்தில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் நுழைவுச்சீட்டை தேர்வாணைய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மூன்று நாள்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

சேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளிகளின் பட்டியல் தயார்

கோவை மாவட்ட பள்ளிகளில் சேதமடைந்த கட்டடங்களை இடிக்க, 49 பள்ளிகளின் பெயர் பட்டியல் பொதுப்பணித்துறையிடம் மாவட்ட கல்வித்துறையால் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ஆசிரியர் புலம்பல்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தவில்லை. பள்ளிக் கல்வித் துறையில்,

புதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை

ஆசிரியர் தேர்வு வாரியம், வழக்கமான பாணியை மாற்றி, புதிய முறையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியுள்ளது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில், சி.இ.ஓ., உள்ளிட்ட 4 அலுவலர்களை பொறுப்பேற்கச் செய்திருப்பதை நினைத்து, அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு: கேள்விக்குறியான இலவச கட்டாயக் கல்வி

குமாரபாளையம் பகுதியில்,குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பிச்சை எடுக்க வைப்பதால் பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், இலவச கட்டாயக் கல்வியை முழுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.