Thursday, January 2, 2014

அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு உதவும் வகையில் ஹைடெக் நூலகம் அமையுமா?

புத்தாண்டிலாவது பெரியகுளத்தில் ஹைடெக் மண்டல நூலகம் அமையுமா? என பெரியகுளம் நகர மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறை மறுசீரமைப்பு பணியின் மூலம் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., அலுவலங்களை மையமாகக்கொண்டு இரண்டு மண்டல நூலகங்கள் அமைப்பதற்கு கடந்தாண்டு திட்டமிடப்பட்டது. இதற்கு, தலா 1 கோடி ரூபாய் செலவில் இடம் பார்க்கும் பணி நடந்தது. அதற்கான முயற்சியில் அலுவலர்கள் ஆமை வேகத்தில் ஈடுபட்டனர். நூலகத்திற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக புத்தகங்கள் வாங்க உத்தேசிக்கப்பட் டது.

தேனியில் மாவட்ட நூலகம் உள்ள நிலையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு உட்பட்ட பெரியகுளம் நகராட்சி, உத்தமபாளையம் பேரூராட்சி பகுதிகளில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ். மற்றும் குரூப் 1, குரூப் 2, 3 உட்பட அரசு தேர்வுகளில் பங்கேற்பவர்களுக்கு இது வசதியாக இருக்கும்.
இந்த மண்டல நூலகத்தில், கடந்த காலங்களில் அரசு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் சி.டி., வடிவிலும், பொது அறிவு புத்தகங்கள், அதி நவீன தொழில் நுட்ப தகவல்களை பெறுவதற்கு, சந்தாதாரர்களுக்கு வசதி செய்து தரலாம். புத்தகங்களை ஆன்-லைனில் புக்கிங் செய்யும் வசதி, புத்தக ஆசிரியர்கள் உள்ளிட்ட விபரங்களை விரல் நுனியில் அறிந்து கொள்வது உட்பட ஹைடெக் வசதியுடன் நூலகம் அமைய இருந்தது.
2013 ஆம் ஆண்டு கடந்துட்ட நிலையில், இந்தாண்டிலாவது ஹைடெக் மண்டல நூலகம் அமையும் என்ற நம்பிக்கையில் சந்தாதாரர், பொதுமக்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment