Thursday, January 2, 2014

இணையத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் குறித்து முக்கிய உத்தரவு

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என, அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும்.
இவ் எழுத்துருக்களை http://tamilvu.org ல் "டவுன்லோடு" செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment