Thursday, January 2, 2014

பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெற்ற 47 பேருக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிந்து வந்த, 47 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். இவர்களுக்கு, இணையதளம் மூலம் கலந்தாய்வு, திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில், நடைபெற்றது.
இதில் 33 பேர், திருவள்ளூர் மாவட்டத்திலேயே, பணியிடம் பெற்றனர். அவர்களுக்கான, பணி நியமன ஆணையை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் நேரு, பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment