ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகளை நாளை (6ம்
தேதி) தாங்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தெரிந்து
கொள்ளலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன
முதல்வர் நடராசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: "கடந்த 2013 ஜூன் மாதம் நடந்த முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு தேர்வு முடிவுகள், நாளை (6ம் தேதி) தாங்கள் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டயச் சான்றிதழ்கள், நாளை அந்தந்த நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும். தனித்தேர்வர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், நாளை மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்: ஆசிரியர் பயிற்சி பட்ட தேர்வு முடிவுகள் மற்றும் பட்டய சான்றிதழ்கள், நாளை வழங்கப்பட உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 13 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் பார்வையற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தலா ஒன்று உள்ளன.
இங்கு பயின்றவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பட்டய தேர்வு முடிவுகள், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டய சான்றிதழ்கள் திருவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நாளை 6ம் தேதி, வழங்கப்பட உள்ளது.
தனித்தேர்வு எழுதியவர்கள், தங்களது அடையாள அட்டையை காண்பித்து, சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதியவர்கள் மட்டுமே நேரில் வந்து சான்றிதழ்களை பெற வேண்டும். சுயநிதி நிறுவனத்தில் பயின்றவர்கள், உரிய நிறுவனங்களில் தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
இத்தகவலை, திருவூர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment