Saturday, August 17, 2013

இன்று ஆசிரியர் தகுதித் தேர்வு

 

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாள் தேர்வு சனிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
மொத்தம் 677 தேர்வு மையங்களில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 937 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணியில்
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் என 29 ஆயிரம் பேர் ஈடுபடுகின்றனர். இந்தத் தேர்வுக்காக சி.பி.எஸ்.இ. உள்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேர்வர்களில் பெண்களின் எண்ணிக்கை மட்டும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 897 ஆகும். ஆண்களின் எண்ணிக்கை 65,040. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகள் சனி (ஆக.17), ஞாயிறு (ஆக.18) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகின்றன.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும். சென்னையில் 27 தேர்வு மையங்களில் 9 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து சுமார் ஆயிரம் பேர் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.
நன்றி - தினமணி

No comments:

Post a Comment