Thursday, January 29, 2015

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு

கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.

பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

கர்நாடகாவில்TET முடிந்தநிலையில்ஆசிரியர்களை நியமிக்க பொது நுழைவுத் தேர்வு.

கர்நாடகத்தில் ஆசிரியர் பணிக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று, அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்தார்.
 

50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர்
2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு

குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்

பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பதில் தாமதம்

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது ’கவுன்சிலிங்’கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Wednesday, January 28, 2015

இளையோர் - மூத்தோர் ஊதிய விகிதம் - வழங்குதல் குறித்து RTI கடிதம்.

பெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.

1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்
2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000

3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.

4.)குழந்தையின் 21 வது வயதில் கணக்கை முடிக்கலாம்
5. )Nomination வசதி கிடையாது .
6.)ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூபாய் 1000 கண்டிப்பாக முதலிடு செய்ய வேண்டும்
7)இந்த ஆண்டு வட்டி 9 .1%.

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ- மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி களில் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு

கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு

உடுமலை பகுதியிலுள்ள இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு

பள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

Tuesday, January 27, 2015

நிதிப்பற்றாகுறையில் எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுநர்கள் இடமாற்றம்

20% கிராமப்புற பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை: ஆய்வு

தமிழகத்தில், கிராமப்புற பகுதிகளில் செயல்படும் 20 சதவீத பள்ளிகளில், மாணவ, மாணவிகளுக்கு கழிவறை வசதி இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்ளும் வகையிலான சிடி-க்கள் தயார்

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆங்கிலத்தை எளிதில் கற்று கொள்வதற்கான திட்டத்தின் கீழ், 43 பாடங்களை கொண்ட 2 சிடி -க்கள் தொடக்கக் கல்வித்துறையால் தயார் செய்யப்பட்டுள்ளன.

பொது கவுன்சிலிங்கின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது கவுன்சிலிங்கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.

வனக் கல்லூரி மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வனக் கல்லூரியில், மாணவ, மாணவியர் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரேஞ்சர், பாரஸ்டர் பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தில், 63 மாணவியர், 150 மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Monday, January 26, 2015

வரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி

வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை’

தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியலில் சேர்க்கும் அவலம்!

10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.

இந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்

ஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்

ஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு

சம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.

Thursday, January 22, 2015

"INDEPENDENCE DAY 2015 -STAMP DESIGN COMPETITION"


ஓவிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்; நிதியின்றி பகுதி நேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு

பற்றாக்குறையின் காரணமாக, இப்பயிற்சி வகுப்பில், பகுதி நேர ஓவிய ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் அமைந்துள்ள, மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், ஓவிய ஆசிரியர்களுக்கான மூன்று நாள் பயிற்சி வகுப்புகள், நேற்று துவங்கின.

அரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பா

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மாணவியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.
       

தவறான கணக்கு காட்டி மாணவர் விடுதியில் முறைகேடு?

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் கூடுதல் மாணவர்கள் தங்கியிருப்பதாக கணக்கு காட்டி அரசு வழங்கும் உணவுப்படியில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

Wednesday, January 21, 2015

PG Asst. ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
       

TET Certificate: - 82 முதல் 89 மதிப்பெண் பெற்றவர்களுக்கு உயர்நீதிமன்ற கிளையின் இறுதி தீர்ப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படும். - TRB

ஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்.

எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
             தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஒவ்வொரு அரசுப் பள்ளிகளும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற, மாநில கல்வித்துறை பல்வேறு வகையில் முயற்சி செய்கின்றது. இதற்காக, பள்ளிக் கல்வித்துறை, பல்வேறு திட்டங்களையும், புதிய செயல்பாடுகளையும் வகுத்து வருகிறது.

மாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
         

குரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

கடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர்.
இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.
இன்று நடந்த விசாரணையில், விடைத்தாள்களை திருத்தி 2 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் அனில் தவே, தீபக் மிஸ்ரா, யு.பி.எஸ்.சி.யான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்திற்கு உத்தரவிட்டனர்.

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு

கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 616 ஆசிரியர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், 616 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என, அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த விவரங்களை தெரிவிக்கும்படி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் பண்பாட்டுக் கழகம் அமைப்பாளர் கோ.ரா.ரவி விண்ணப்பித்தார்.

முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

முதுகலை ஆசிரியர்களுக்கான சம்பளம் நிர்ணயித்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதிலளிக்க, அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Monday, January 19, 2015

NMMS - HALL TICKET AVAILABLE FOR DOWNLOAD

சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., பள்ளியில் தமிழ் பாட ஆசிரியர்களுக்கு கிராக்கி.

சி.பி.எஸ்.இ., உட்பட பிறவாரிய பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. இது தமிழ் பாடத்தில், பட்டம் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு

புதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.

பிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும்.

குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Saturday, January 17, 2015

பள்ளிக் குழந்தைகளுக்கு தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி விபரங்களை சேகரிக்க உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கு என்று தனியாக ஆதார் சிறப்பு முகாம் நடத்தி, இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தில், மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் என, மாநில திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Thursday, January 15, 2015

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை

பிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு கூட்டம்

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பூட்டப்பட்டுள்ள கழிவறைகள்: அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த, அரக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கலெக்டர்கள் மூலம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

குரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Monday, January 12, 2015

"தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்"

தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்" என்று கன்னியாகுமரியில், திருக்குறள் திருப்பயணத்தை தொடங்கிய தருண்விஜய் எம்.பி.,கூறினார்.

தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி

திருக்கோவிலூரில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் குறித்த பயிற்சி நடந்தது.

Sunday, January 11, 2015

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும்என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.

PGTRB PHYSHOLOGY & GK ANSWER KEY

PGTRB : பிப்ரவரியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான

டி.ஆர்.பி. தேர்வுக்கு விண்ணப்பித்தோரில் 94.41% பேர் தேர்வெழுதினர்

ஆசிரியர் தேர்வு வாரியமானடி.ஆர்.பி., நடத்திய, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில், 11,291 பேர் பங்கேற்கவில்லை. 94.41 சதவீதம் பேர் தேர்வு எழுதி உள்ளனர்.

Saturday, January 10, 2015

3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான அடைவுத் தேர்வுகளை 20.01.2015 முதல் 23.01.2015 வரை நடத்த மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

PGTRB: விடைத்தாள்களை சீலிடும் வரை தேர்வர்கள் வெளியேறக் கூடாது : தேர்வு வாரியம் கட்டுப்பாடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடைத்தாள்களை உறையில் வைத்து சீலிடும் வரை தேர்வர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை என தேர்வு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

              

PGTRB - செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு

சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

          

இன்று நடக்கிறது 1,868 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை பட்டதாரி போட்டி தேர்வு

தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

       

நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் தகவல்

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உலகமயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தரஉறுதிக்கான சவால்கள் என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.  
         

தொலைநோக்குத் திட்ட இலக்கை 5 ஆண்டுகளில் கல்வித் துறை எட்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி

நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மலர உருவாக்கப்பட்ட 2,023 தொலைநோக்குத் திட்ட இலக்கை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பள்ளிக் கல்வித் துறை எட்டிவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை தெரிவித்தார்.
 வேலூரை அடுத்த மெட்டுக்குளத்தில், தனியார் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மாணவர் தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசியது:


Pongal Bonus GO Published

Friday, January 9, 2015

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 22ம் தேதி மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு(CTET) பிப்ரவரி 22ம் தேதி நடைபெறவுள்ளது.
Shortlist செய்யப்பட்ட நபர்களுக்காக CBSE அமைப்பு இத்தேர்வை நடத்துகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள், முதல் தாள்(paper - 1) தேர்வையும், 5 முதல் 8ம் வகுப்பு வரை பாடமெடுக்கும் ஆசிரியர்கள் இரண்டாம் தாளையும்(paper - 2) எழுத வேண்டும்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 2.02 லட்சம் பேர் பங்கேற்பு

நாளை(ஜனவரி 10) நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, டி.ஆர்.பி., வெளியிட்டது. இதற்கான தேர்வை எழுத, லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு, நாளை அனைத்து மாவட்டங்களிலும் நடக்கிறது.

Thursday, January 8, 2015

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2013-2014 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வழிமுறைகள் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு; தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இணையம் மூலம் திருவள்ளுவர் கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என, மத்திய மனிதவள துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ எப்போது?

’பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்களை, பிப்., 2 முதல் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் திட்டம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு, தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும் ’அமெரிக்கன் பவுண்டேஷன்’, ’டெல்’ நிறுவனம் இணைந்து, ’மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறைகள்’ திட்டத்தை விரைவில் துவங்க உள்ளன.

இலவச சீருடை திட்டம் பிளஸ் 2 வரை விரிவுபடுத்தப்படுமா?

பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி, பிளஸ் 2 வகுப்பு வரை விரிவுபடுத்த, அரசு மற்றும் கல்வி அதிகாரிகள் கொண்ட குழு, ஆலோசித்து வருகிறது.

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் புறக்கணிப்பு; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மாணவியர் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்; வகுத்தது பள்ளிக்கல்வித் துறை

’மாணவியர் தனியாக செல்வதையும்; பேருந்து நிறுத்தங்களில் தனியாக நிற்பதையும் அறவே தவிர்க்க வேண்டும்; குழுவாக செல்ல, தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

Wednesday, January 7, 2015

CPS MISSING CREDITS ONLINE ல் சரி செய்வது எப்படி?


அரசு ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவு கட்டாயம்: 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு உத்தரவு

பெங்களூரு: 'அரசுத் துறைகளில், 50 வயதிற்கு உட்பட்ட, 'சி' பிரிவு ஊழியர்கள் அனைவரும், கம்ப்யூட்டர் கல்வி கற்பது அவசியம்' என, கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு நிர்வாகத்திலுள்ள துறைகள், கம்ப்யூட்டர் மயமாகி வருகின்றன. இதனால், 'சி' குரூப் ஊழியர்களில், 50 வயதுக்குட்பட்டவர்கள், கண்டிப்பாக கம்ப்யூட்டர் கல்வி கற்க வேண்டும் என, கடந்த 2ம் தேதி, அரசு உத்தரவிட்டு உள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர் களிடம் ஏற்பட்டு உள்ளது.

      

மா.க.ஆ.ப.நி - கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் சார்பான பணிமனை 07.01.2015 முதல் 09.01.2015 வரை சென்னையில் நடக்கிறது

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்திட தகுதிவாய்ந்த இடை நிலை / உடற்கல்வி / சிறப்பாசிரியர்கள் பட்டியல் தயாரித்து அனுப்ப இணை இயக்குனர் உத்தரவு

ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து மட்டுமே பட்டியல் பெற்று, பணியில் நியமிக்க வகை செய்யும் பணி விதியை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி வகுப்பை முடித்த விமல்ராஜ், ஜோசப் தாமஸ் ரிச்சர்டு உள்ளிட்ட ஐந்து பேர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு:

அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது?

பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கான கோப்புகளில் முதல்வர் இன்று கையொப்பமிட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.  
இதையடுத்து முறையான அறிவிக்கை நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாநில போட்டிகளில் பங்கேற்க சூலூர் மாணவர்கள் தேர்வு

மண்டல ஜூடோ, வாள் சண்டை போட்டிகள் கோவையில் நடந்தன. பொள்ளாச்சி, நீலகிரி, குன்னூர், கோவை உள்ளிட்ட நான்கு கல்வி மாவட்ட பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

பள்ளி மாணவியின் ஆய்வு கட்டுரை தேசிய விருதுக்கு தேர்வு

திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி மாணவியின் ஆய்வு கட்டுரை, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை, ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்தாண்டு நவ., 22ல் திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 6 கட்டுரைகள் தேர்வாகின.

Tuesday, January 6, 2015

EMIS - INSTRUCTION FOR SETTING ALL BROWSERS FOR STUDENT DATA ENTRY

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு

2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2012-13-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கு பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தேர்வர்கள் பதிவு இறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். 

வட்டார வள மையம் சார்பில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வள மையம் சார்பில், தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான குழந்தைகளின் உளவியல் மற்றும் உரிமைகள் குடிமையியல் மதிப்புகள் பண்பாட்டு பாரம்பரியத்தை மேம்படுத்துதல் பயிற்சி எட்டு மையங்களில் நடந்தது.

பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்பம், தொழில் முனைவோர் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், பிளஸ் 1, பிளஸ் 2 பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர் குறித்த, மூன்று நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை

அரசுத் தேர்வுத்துறை தேர்வு மையங்களில் துறை அலுவலர்கள் நியமிப்பதில், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை நியமிப்பதில் வஞ்சனை செய்து வருகிறது.

இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு பள்ளி!

பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களை பாடம் படிக்கும் பொம்மைகளாக நினைக்கும் சில பள்ளிகளில் இருந்து விலகி வித்தியாசமாக செயல்படுகிறது மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி.

டி.ஆர்.பி. தேர்வில் பாதுகாப்பை உறுதிசெய்ய புதிய ஏற்பாடுகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் முறைகேட்டை தடுக்க, விடைத்தாள் கட்டுகள் அடங்கிய உறையில், தேர்வர் முன், சீல் வைக்கவும், இரு தேர்வர்களின் கையெழுத்தை பெறவும், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) ஏற்பாடு செய்துள்ளது.

Saturday, January 3, 2015

பி.எட் & எம்.எட் படிப்பு: காலம் 2 வருடங்கள்

நாட்டின் வருங்காலம் வகுப்பறையில் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களை வல்லவர்களாக, நல்லவர்களாக உருவாக்குவது ஆசிரியர்கள். அதனால் தான் ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்று கூறுவதும் உண்டு.

பெங்களூர் பள்ளி வகுப்பறையில் வெடித்த டெட்டனேட்டர்; 3 சிறுவர்கள் காயம்

பெங்களூர் ரூபனே அக்ரஹார பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்த டேட்டனேட்டர் என்ற வெடிப்பொருளை அந்த பள்ளியில் படிக்கும் 3மாணவர்கள் வகுப்பு அறையில் கொண்டு வந்து பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டில் டெட்டனேட்டரின் ஒயரில் இணைத்து ஆன் செய்துள்ளனர்.


ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்தப்படுமா?

அரசு பள்ளிகளில், ஆசிரியர் வருகையை முறைப்படுத்த அறிவிக்கப்பட்ட, எஸ்.எம்.எஸ்., முறையில் ஆசிரியர் வருகை பதிவேடு கண்காணிப்பு திட்டம் முறைப்படுத்த, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளை தொழில் அமைப்புகள் தத்தெடுக்குமா?

தொழில் நகரமான திருப்பூரில், அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அதற்கு, தொழில் அமைப்புகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Thursday, January 1, 2015

அவசர கவுன்சிலிங் முடிந்தும் நிரப்பப்படாத 300 ஆசிரியர் பணியிடங்கள்

தொடக்கக் கல்வித் துறையில் புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்கள் ’அவசர கவுன்சிலிங்’ மூலம் நிரப்பப்பட்டதால் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன.

டிவி சேனல்கள் ஒரு மணிநேரம் கல்வி செய்திகளை வழங்க கோரி தீர்மானம்

அனைத்து டிவி சேனல்களிலும், கல்விக்காக தினமும் ஒரு மணி நேரம், கல்வி ஒளிபரப்பு செய்திகளை வழங்க வேண்டும்’ என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘இம்மாத இறுதியில் குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்’

டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. ரேங்க் அடிப்படையில், முதல் 10 இடங்களை பிடித்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வாணைய தலைவர் பாலசுப்ரமணியன், ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.