Thursday, April 3, 2014

நாளை விண்ணில் பாய்கிறது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி

கடல்வழி ஆராய்ச்சிக்கான, "ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.,-1பி" செயற்கைகோள், ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை விண்ணில் ஏவப்படுகிறது.

இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் வகையில், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஏவுவதற்கான ஒத்திகை நிகழ்ச்சி வெற்றியடைந்தது.
இதையடுத்து, செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான, "கவுன்ட் டவுன்" நேற்று காலை 6:44 மணிக்கு துவங்கியது. பி.எஸ்.எல்.வி., சி 24 ராக்கெட் மூலம், நாளை மாலை 5:14 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படும். இந்த செயற்கைக்கோளால், 1,500 கி.மீ., சுற்றளவுக்கு கடலை, துல்லியமாக கண்காணிக்க முடியும்.
தரையில் செல்லும் அனைத்து வாகனங்களையும், வானிலிருந்தவாறே இந்த செயற்கைக்கோளால் கண்காணிக்க முடியும். ஏற்கனவே, ஒரு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், நாளை ஏவப்படுவதைத் தவிர இன்னும், ஐந்து செயற்கைக்கோள்களை தயாரித்து விண்ணில் ஏவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, "இஸ்ரோ" திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment