Thursday, April 3, 2014

சதுரங்கம் விளையாட ஆர்வம் அதிகரித்துள்ளது: ஆனந்த்

உலக தகுதிச் சுற்று வெற்றியினால், சதுரங்கம் விளையாட வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்து உள்ளது என விஸ்வநாதன் ஆனந்த் கூறினார்.
இந்த ஆண்டு நடக்க இருக்கும் உலக சதுரங்க போட்டியில், நடப்பு சாம்பியன், நார்வே வீரர் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதும் வீரரை, தேர்வு செய்யும் தகுதிச் சுற்று (கேண்டிடேட்ஸ்) சதுரங்க போட்டி ரஷ்யாவில் நடந்தது. அதில் 5 முறை சாம்பியனான, தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உட்பட, 8 பேர் கலந்துகொண்டார்.

ஒவ்வொரு வீரரும், தலா இரண்டு முறை மோத வேண்டும். விஸ்வநாதன் ஆனந்த், 14 சுற்றுத் தகுதிப் போட்டியில், 8.5 புள்ளிகள் (3 வெற்றி, 11 டிரா) எடுத்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் உலக சதுரங்க போட்டியில், நடப்பு சாம்பியன் கார்ல்சென்னுடன் ஆனந்த் மோதுகிறார்.
விஸ்வநாதன் ஆனந்த், நேற்று சென்னை திரும்பினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தகுதிச் சுற்று போட்டியில், ஆறாவது சுற்று வரை, என் வெற்றி தீர்மானிக்கப்படவில்லை. அதுவரை, யார் வெற்றி பெறுவார்? என்ற ஒருவித அச்சம் இருந்தது. அதில், 13வது சுற்றில் என் வெற்றி முடிவாகியது. பதற்றமோ, பரபரப்போ இல்லாத அங்கு நிலவிய சூழ்நிலை என் வெற்றிக்கு சாதகமாக இருந்தது.
இந்த வெற்றியின் மூலம், சதுரங்கம் விளையாட வேண்டும் என, ஆர்வம் எனக்கு அதிகரித்து உள்ளது. உலக சதுரங்க போட்டிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. அதனால், அதுகுறித்து எந்தவித திட்டமும், இதுவரை என்னிடம் இல்லை. தேதி முடிவாகட்டும். அதன்பின் பார்த்து கொள்ளலாம். புதிய உத்தியை எடுத்துக்கொண்டு, பழையதை விட்டுவிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment