Saturday, April 5, 2014

எல்.கே.ஜி., புத்தகத்தில் சூரியன்: தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம்

"எல்.கே.ஜி., புத்தகத்தில், இடம் பெற்றுள்ள, "சூரியன்" படம் குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கலாம்&' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவைச் சேர்ந்த, புரட்சி சுரேஷ் என்பவர், தாக்கல் செய்த மனு: எல்.கே.ஜி., புத்தகத்தில், "எஸ்" என்ற எழுத்துக்கு, "சன்" என, குறிப்பிட்டு, சூரியன், கண்ணாடி அணிந்திருப்பது போல், படம் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ் பாட்டில், "கொக்கரக்கோ சேவலே" எனும் பாடலில், சூரியன் உதித்து எழுவது போல், படம் இடம் பெற்றுள்ளது. இது தொடக்க கல்வியில், அரசியலை புகுத்துவது போல் உள்ளது. எனவே புத்தகத்தில், படங்கள் இடம் பெற்றுள்ள இந்த இரண்டு பக்கங்களையும் நீக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி (பொறுப்பு) அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க சிறப்பு அரசு பிளீடர் இன்பதுரை, "நோட்டீஸ்" பெற்றுக் கொண்டார். இம்மாதம் 9ம் தேதிக்கு விசாரணை, தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையில், மனுதாரரின் முறையீட்டை, தேர்தல் கமிஷன் பரிசீலித்து, சட்டப்படி, தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம் என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

No comments:

Post a Comment