Wednesday, October 29, 2014

பள்ளி மாணவர்களின் குறைந்த விலையுள்ள சோலார் மோட்டார் சைக்கிள்

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மூவர் குறைந்த செலவில் புதுமையான சோலார் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
9ம் வகுப்பு மாணவர்கள் தியாகராஜ், ஹரிபிரசாத், அனிருத்தன். பள்ளி இயற்பியல் துறையின் ஐன்ஸ்டீன் கிளப்பில் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக சோலார் மோட்டார் சைக்கிளை தயார் செய்தனர். ஏற்கனவே உள்ள சோலார் சைக்கிளை விட இதில் சில புதுமைகள் உள்ளன. இதில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல் சூரிய ஒளி எந்த திசையில் இருந்து விழுகிறதோ அந்த திசைக்கு தானாக திரும்பிவிடும். சூரிய ஒளி நேரடியாக படாவிட்டாலும் 30 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். சிறுவர்களுக்கான சைக்கிளில் இதை மாதிரியாக தயார் செய்து, ஆசிரியர்கள் முன்னிலையில் ஓடவைத்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது: இந்த தயாரிப்புக்கு ரூ.3,950 செலவானது. இது, மிக குறைந்த செலவு. ஆட்கள் அமர்ந்து செல்லும் சோலார் மோட்டார் சைக்கிளை ரூ.15,000க்குள் தயாரித்து விடலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையில் கிடைத்த வடிவம் இது. மூன்று வாரங்களில் இதை தயார் செய்தோம். பராமரிப்பது மிகவும் எளிது.
சோலார் டிரேசிங் சர்க்கியூட், சோலார் பேனல், பேட்டரி, டி.சி.,மோட்டார், வீல் என்ற ஒரு தொடர் இணைப்பில், இது ஓடும். பொதுவாக சோலார் சைக்கிள் நல்ல வெயில் இருந்தால்தான் ஓடும். ஆனால் இது வெளிச்சம் குறைவாக இருந்தாலும் ஓடும். தொடர்ந்து இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வோம். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment