Tuesday, October 28, 2014

தேசிய பாடத்திட்டப் பள்ளிகள் அங்கீகார சான்று விபரங்களை ஒப்படைக்க உத்தரவு

பள்ளி அங்கீகார சான்று, தமிழ் மொழி கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வு பணிகளுக்காக, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., போன்ற, தேசிய அளவிலான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், தங்களது அங்கீகார சான்று விபரங்களை, டவுன்ஹால், புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர், ஞானகவுரி வெளியிட்ட சுற்றறிக்கை: தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமைச்சட்டப்படி, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வு குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., போன்ற தேசிய அளவிலான கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளின் அங்கீகாரம் குறித்த தகவல்கள் ஆய்வுசெய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே, தேசிய அளவிலான பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகள், பள்ளி அங்கீகார சான்றுடன், பள்ளி பெயர், முகவரி, தொடர்பு எண், இ-மெயில் முகவரி, முதல்வர் மற்றும் தாளாளர் விபரங்கள் ஆகியவற்றுடன், டவுன்ஹால், புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும்.
தவிர, தமிழ்ப்பாட கட்டாயப்படுத்துதல் விதிப்படி, வரும் 2015-16ம் கல்வி ஆண்டு முதல், தமிழ் மொழி பயிற்றுவிப்பதற்கான முயற்சிகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment