Monday, December 30, 2013

10 மணிக்கு பொதுத்தேர்வு: தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

அரசு பொதுத்தேர்வு நேரத்தை மாற்றக்கூடாதென, தலைமை ஆசிரியர்கள் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, உள்ளிட்ட அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை தலைமை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், வட்டார வளமைய கண்காணிப்பாளராக பணிபுரிந்த ஆசிரியர்களை, அதே வட்டார வள மையங்களின் கண்காணிப்பாளராக நியமிக்க வேண்டும்,
அண்மையில், அரசு பொது தேர்வு நேரத்தை, 9.15 என மாற்றம் செய்யப்பட்டது. கிராமப்புற மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், காலை 10 மணிக்கே தேர்வு நேரத்தை மாற்ற வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அரசு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் எனப்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிடில், அனைத்து ஆசிரியர்கள் அமைப்பை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், தலைமை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment