Tuesday, December 24, 2013

ஆஸ்திரேலியாவில் சிறப்பு ஒலிம்பிக்: சிவகாசி மாணவருக்கு 2ம் இடம்

ஆஸ்திரேலியாவில் நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் சிவகாசி மாணவர்மோனிஸ் 200 மீட்டர் ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார்.
சிவகாசி ரிசர்வ் லையனை சேர்ந்த ராஜா, தங்கராதா தம்பதியினரின் 2வது மகன் மோனிஸ்,13. இவர், மூளை வளர்ச்சி குன்றியவர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "அகாப்ட்" என்னும் சிறப்பு பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார்.

இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டிகளில் மாவட்ட, மாநில போட்டிகளில் பங்கேற்று தரம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டு போபாலில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் பங்கேற்று தரம் பெற்றார்.
இதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் நியூ காஸ்டில் நகரில் டிசம்பர் 1 முதல் 8ம்தேதி வரை ஆசியா- பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் போட்டி நடந்தது. 35 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 23 வீரர்கள் பங்கேற்றனர். சிவகாசியை சேர்ந்த மோனிஸ் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்றார். இவர் 200 மீட்டரை 57.78 வினாடியில் ஓடி 2வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். 100 மீட்டர் ஓட்டத்தில் நான்காம் இடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, மாநில தடகள கழக தலைவர் வால்டர் தேவாரம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாராட்டினர்.

No comments:

Post a Comment