Friday, December 20, 2013

ரூ.30 கோடிக்கு புத்தகங்கள் கொள்முதல் : நூலகத்துறை அறிவிப்பு

கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நாளை இசை நிகழ்ச்சி நடக்கிறது.
"சிபாகா" (கோவை பில்டர்ஸ் மற்றும் கான்ராக்டர்ஸ் அசோசியேஷன்) அமைப்பின் தலைவர் சேகர் கூறியதாவது: மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, அவர்களை ஊக்கப்படுத்தக் கூடிய அனைத்து விதமான செயல்களையும் சிபாகா செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பினை வழங்குகிறது. இதற்கு பொதுமக்கள் ஆதரவை சிபாகா கோருகிறது.

கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த "சிபாகா ஸ்கூல் அடாப்ஷன் புரோகிராம்" எனும் திட்டத்தை உருவாக்கி உள்ளது. இவ்வாறு சேகர் கூறினார்.
சிபாகா தலைவர் நாராயணன் கூறுகையில், "திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியை திரட்ட கோவையில் "எலைட் ஈவினிங்" எனும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பிரபல இசைக்கலைஞர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். நாளை (21ம் தேதி) மாலை 6.00 மணிக்கு ஓட்டல் லீ மெரிடியனில் நடக்க உள்ள இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நிதி உதவி அளிக்க வேண்டும் என்றார். மேலும் விபரங்களுக்கு, 99655 04473 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்றார்.

No comments:

Post a Comment