Wednesday, December 25, 2013

உதவி பெறும் 3 பள்ளிகள் அரசிடம் ஒப்படைப்பு தொடர்ந்து நடத்த முடியாததால் நிர்வாகத்தினர் முடிவு

வால்பாறையில் உள்ள உதவி பெறும் 3 பள்ளி கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால் பள்ளி நிர்வாகத்தினர் இந்த முடிவை எடுத்து உள்ளனர்.தொடக்க பள்ளிகள் கோவை மாவட்டத்தில் 1,341 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள தொடக்க பள்ளிகளில் 88 ஆயிரத்து 150 மாணவ-மாணவிகளும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள நடுநிலை பள்ளிகளில் 21 ஆயிரத்து 415 மாணவ-மாணவிகளும் என மொத்தம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 565 பேர் படித்து வருகிறார்கள். தொடக்க பள்ளிகளை பொறுத்தவரை 35 மாணவ- மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணியாற்றி வருகிறார் கள். நடுநிலை பள்ளிகளை பொறுத்தவரை குறைந்தபட்சம் 5 மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் வீதம் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடன் தலா ஒரு தலைமை ஆசிரியர் வீதம் பணியாற்றி வருகிறார்கள். வால்பாறையில் 3 பள்ளிகள் இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலையால் மூடும் நிலை உருவாகி வருகிறது. இதுபோன்ற நிலையில் உள்ள பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து உள்ளது. இதன்படி வால்பாறையில் உள்ள 3 பள்ளிகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது:-வால்பாறையில் உள்ள தனியார் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில், 3 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசிடம் ஒப்படைப்பு அங்கு வேலை செய்துவரும் தொழிலாளர்களின் பிள்ளைகள் படித்து பயன்பெறும் வகையில் இந்த பள்ளிகள் தொடங்கப்பட்டது. இந்த பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகும். இந்த பள்ளிகளில் சுமார் 150 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 10 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார் கள். இந்தநிலையில் பள்ளிகளை தொடர்ந்து நடத்த முடியாத காரணத்தால், பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்து உள்ளனர். அதை எழுத்து பூர்வமாக தெரிவித்து உள்ளனர். மாணவர்களின் நலன் கருதி நிர்வாகத்தினர் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பள்ளிகளை அரசே ஏற்று நடத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment