Wednesday, December 25, 2013

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது

பார்வையற்ற பி.எட். பட்டதாரிகளுக்கு ஆசிரியர் வேலை கொடுப்பதற்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தவும், தேர்வுக்காக இலவச பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் பி.எட். படித்து விட்டு ஏராளமான பட்டதாரிகள் உள்ளனர். அவர்களில் பலர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி உள்ளனர். அவர்களில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஆசிரியர் வேலை கொடுக்கப்படும். இந்த நிலையில் பார்வையற்ற நிலையில் உள்ள பி.எட். பட்டதாரிகள் தங்களை ஆசிரியர் பணியில் சேர்க்கக்கோரி கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பி.எட். படித்து பணியில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தவும் இந்த தேர்வில் தகுதி பெறும் பி.எட். பட்டதாரிகள் தற்போது பின்னடைவு காலிப்பணியிடங்களிலும் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களிலும் பணியமர்த்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.முதுகலை பட்டதாரிகளுக்கு வேலை முதுகலை பட்டம் பெற்ற 200 பார்வையற்றவர்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு தற்போது உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்கள் மற்றும் இனிமேல் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்களில் அவர்தம் முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வில் தெரிவு செய்யப்படின் அவர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிஅமர்த்தப்படுவார்கள்.தேர்வுக்கு இலவச பயிற்சி சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கும் அவர்களுக்கு தேர்வு எழுதும் உதவியாளர்களுக்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி மூலம் 32 மாவட்டங்களில் 50 மையங்களில் பயிற்சி அளிக்க 2 கோடியே 1 லட்சம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் த.சபீதா வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment