Wednesday, February 11, 2015

பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி

பரமக்குடி கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் தைக்கும் பணி துவங்கியது.
மாநிலம் முழுவதும் மார்ச் 5 ல், பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் துவங்கவுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாணவரின் புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாள், முதன்மை விடைத்தாள் மற்றும் கூடுதல் தாள்கள் இணைத்து தைக்கப்படுகிறது. இந்த ஆண்டு புதிதாக தமிழ், ஆங்கிலம் தேர்விற்கு மட்டும், 30 பக்கங்கள் கொண்ட கோடிடப்பட்ட விடைத்தாள் வழங்கப்படவுள்ளது.
இதில் ஒவ்வொரு பக்கத்திலும் இருபுறமும் மார்ஜின் உட்பட 22 கோடுகள் உள்ளன. விலங்கியல், தாவரவியல் பாடத்திற்கு தனித்தனியாக தலா 22 பக்கம், அக்கவுன்டன்சி தேர்வுக்கு 1 முதல் 14 பக்கம் கோடிடப்படாத தாள்களும் 15 முதல் 46 பக்கம் அக்கவுண்ட் தாள்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்விற்கு 30 பக்கமும், மற்ற அனைத்து தேர்விற்கு தலா 38 பக்கங்களும் கொண்ட விடைத்தாள்கள் தைக்கப்பட்டு வருகிறது.
வரலாறு பாடத்திற்கு 36 மற்றும் 37 ம் பக்கத்திற்கு நடுவில் உலக வரைபடமும், கணிதத் தேர்விற்கு கிராப் பேப்பரும் இணைக்கப்பட்டுள்ளது. இவை, 16 ம் எண் ஊசி, வெள்ளை நிற "3 பிளே காட்டன் நூல் கொண்டு தையல்காரர்கள் உதவியுடன் தைக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 45 மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 5000 பேருக்கு, 20 மையங்களில் தைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
தொடர்ந்து 3 நாட்களில் இப்பணி முடிக்கப்படும். மாணவரின் பெயர், போட்டோ, ரிஜிஸ்டர் எண், பள்ளியின் பெயர் முதல் பக்கத்தில் தைக்கப்படுவதால் ஆள்மாறாட்டம் முற்றிலும் தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment