Tuesday, November 5, 2013

ஆய்வுக்கூட்டத்திற்கு வராத ஆன தலைமையாசிரியர்களுக்கு கண்டிப்பு

மதுரையில் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தலைமையாசிரியர்கள் "ஆப்சென்ட்" ஆனதால் அதிகாரிகள் அதிர்ச்சியுற்றனர். மருத்துவ விடுப்பு எடுத்த தலைமையாசிரியர்களது சான்றிதழ்களை "மெடிக்கல் போர்டுக்கு" அனுப்ப உத்தரவிடப்பட்டது.

அரசு திட்டங்கள், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டியவை, அரசு பொதுத் தேர்வுகள் குறித்த உத்தரவுகளை தெரிவிக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் ஓ.சி.பி.எம்., பள்ளியில் நேற்று நடந்தது.
அரசு பொதுத் தேர்வுக்கான புதிய தேர்வு மையங்கள் மற்றும் செய்முறை தேர்வு மையங்கள், விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்வதற்கு, அரசு பள்ளிகளில் வசதி உள்ளனவா, இலவச "லேப்டாப்"கள் கொடுத்து முடிக்காத பள்ளிகள் குறித்து சி.இ.ஓ., அமுதவல்லி தலைமையாசிரியர்களிடம் விவரம் கேட்டார். அப்போது, பலருக்கு சரியான விவரங்கள் தெரியவில்லை.
விசாரித்தபோது தலைமையாசிரியர் பலர் "ஆப்சென்ட்" ஆகியிருந்ததும், அவர்களுக்கு பதில் "பொறுப்பு" ஆசிரியர்கள் பங்கேற்றதும் தெரிந்தது. "டென்ஷன்" ஆன சி.இ.ஓ., "வேலையில்லாமலா "மீட்டிங்" நடத்துகிறேன். ஒரு விவரமும் தெரியாமல் ஏன் வந்தீர்கள். எத்தனை தலைமையாசிரியர்கள் வரவில்லை என கணக்கெடுங்கள்," என உத்தரவிட்டார்.
மகபூப்பாளையம், பெரிய ஆலங்குளம், மாங்குளம், செக்கானூரணி, கருப்பட்டி, சிவரக்கோட்டை, மேலூர் நகராட்சி, அம்மாபட்டி, ஈ.வெ.ரா., மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர் உட்பட பலர் வராதது தெரிந்தது. பலர் மருத்துவ சான்றுகளை கொடுத்திருந்தனர். சிலர் தகவல் தெரிவிக்கவில்லை. ஒரு சில தலைமையாசிரியர்கள் பெயரில் கையெழுத்திட்டு "பொறுப்பு" ஆசிரியர்கள் கூட்டத்தில் பங்கேற்றதும் தெரிய வந்தது.
"கூட்டத்திற்கு வராத தலைமையாசிரியர்களுக்கு "நோட்டீஸ்" அளிக்கவும், விடுப்பு எடுத்தவர்களின் மருத்துவ சான்றிதழ்களை "மெடிக்கல் போர்டு"க்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என, அமுதவல்லி உத்தரவிட்டார். இதனால் "ஆப்சென்ட்" தலைமையாசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment