Monday, November 4, 2013

மாதிரி பள்ளிகள் குறித்த அரசு முடிவு: மாநில அரசின் உரிமையை நிலை நாட்ட வலியுறுத்தல்

மாதிரி பள்ளிகள் குறித்து டில்லியில் நடக்கும் கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கல்வி அமைச்சர் பங்கேற்று மாநில அரசின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்க தலைவர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கை: "மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வரும் கல்வி ஆண்டு முதல் இந்திய முழுவதும் தனியார் பங்களிப்புடன் தேசிய மாதிரி பள்ளிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இப்பள்ளியில் சேரும் மாணவர்களிடம் ஆண்டுக்கு பொதுப்பிரிவினருக்கு 600 ரூபாய், பின்தங்கிய, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், பள்ளி நிறுவனங்கள் காலக்கட்டத்திற்கு ஏற்ப கட்டணத்தை மாற்றிக்கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் இதுபோன்ற அறிவிப்பு கல்வி வியாபாரம் ஆக மேலும் வழி ஏற்படுத்தி கொடுப்பதுபோல் உள்ளது.
எனவே, மாதிரி பள்ளிகளை தனியார் நிர்வாகம் செய்தாலும் அப்பள்ளிகளை அந்தந்த மாநில அரசின் கல்வித்துறையின் கீழ் செயல்பட செய்ய வேண்டும்.
இதுசம்பந்தமாக டில்லியில் நடக்க உள்ள கூட்டத்தில் புதுச்சேரி அரசு சார்பில் கல்வித்துறை அமைச்சர் பங்கேற்று, புதுச்சேரி மாணவர்களின் நலனையும், மாநில அரசின் உரிமையையும் நிலை நாட்ட வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Share

No comments:

Post a Comment