Saturday, January 3, 2015

பெங்களூர் பள்ளி வகுப்பறையில் வெடித்த டெட்டனேட்டர்; 3 சிறுவர்கள் காயம்

பெங்களூர் ரூபனே அக்ரஹார பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா ஆரம்ப பள்ளி ஒன்று உள்ளது. அங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்த டேட்டனேட்டர் என்ற வெடிப்பொருளை அந்த பள்ளியில் படிக்கும் 3மாணவர்கள் வகுப்பு அறையில் கொண்டு வந்து பள்ளியில் உள்ள சுவிட்ச் போர்டில் டெட்டனேட்டரின் ஒயரில் இணைத்து ஆன் செய்துள்ளனர்.


இதனை அறியாத சிறுவர்கள் டெட்டனேட்டர் வெடித்து சிதறியது. இதனால் மூன்று மாணவர்களும் தூக்கி வீசபட்டனர்.தகவல் அறிந்து வந்த பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். டாக்டர்கள் படுகாயம் அடைந்த சிறுவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பள்ளி நிர்வாகத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் விரைந்து வந்த போலீசார் மோப்ப நாயின் உதவியுடன் பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை செய்யபட்டது.

சோதனையில் இது பாறையை தகர்க்க பயன்படுத்த வாங்கப்பட்ட டெட்டனேட்டர் கருவி என்று போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு சற்று தொலைவில் கல் குவாரிகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு பாறையை தகர்க்க பயன்படுத்த வாங்கப்பட்ட டெட்டனேட்டர்தான் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் பள்ளிக்கு மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் குவிய தொடங்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment