Wednesday, January 28, 2015

ஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.

சிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ- மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி களில் மட்டுமே ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 26 மாற்றுத் திறன் பள்ளிகள்தான் உள்ளன. இப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் குறைவு. எனவே, சிறப்பு பி.எட் பட்டம் பெற்றவர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணி கிடைக்கவில்லை.அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு பி.எட் பட்டதாரிஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, அந்தப் பணியிடங்களில் சிறப்பு பி.எட் முடித்தவர்களை நியமனம் செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment