Thursday, January 15, 2015

அரசுப் பள்ளிகளில் பூட்டப்பட்டுள்ள கழிவறைகள்: அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு, தனியார் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த, அரக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. கலெக்டர்கள் மூலம் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜன., 10 ல் நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வுக்கான முன்னேற்பாடுகளை கவனிக்க இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் மாநிலம் முழுவதும் ஆய்வு செய்தபோது, பெரும்பாலான அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் பயன்பாடின்றி பூட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பள்ளி கல்வி இயக்குனரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  சிறிய அளவிலான பழுதுக்குக்கூட கழிப்பறைகளை பூட்டி வைத்துள்ளனர், என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிளஸ் 2, 10 ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்குள் கழிப்பறைகளை திறக்காவிட்டால், தலைமைஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரி கூறியதாவது: கழிப்பறை பழுதுகளை சீரமைக்க எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., பள்ளி பராமரிப்பு நிதியை பயன்படுத்தலாம். பற்றாக்குறை ஏற்பட்டால் பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது, என்றார்.

No comments:

Post a Comment