Monday, January 19, 2015

புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்களுக்கு கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், புதிய வகுப்பறை உத்திகளை கையாளக்கூடிய ஆசிரியர்கள், தங்களின் புதிய உத்திகளை வழங்கலாம் என, ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக மாவட்ட அளவில் புதிய வகுப்பறை உத்திகள், எளிய மற்றும் நவீன கற்றல், கற்பித்தல் கருவிகள், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கற்றல், கற்பித்தல் முறைகளை, நமது பள்ளிச் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
அங்கு செயல்படும் நவீன கல்வி முறைகள், வகுப்பறைக்கு வெளியே, கலை, உடற்கல்வி, பள்ளி வளாகத்தில் ஏற்படுத்திய நவீன செயல்பாடுகள் ஆகியவற்றை பரவலாக்க ஓர் அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட செயல்பாடுகளை பற்றி www.tnscert.org/innovation என்ற இணையத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ரமா பிரபாவை 94444 53987 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என, ஆட்சியர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment