Thursday, January 8, 2015

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ‘ஹால் டிக்கெட்’ எப்போது?

’பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட்களை, பிப்., 2 முதல் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதி சீட்டுக்களை (ஹால் டிக்கெட்), இணையத்தில், பிப்., 2 முதல் 4ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இத்தேர்விற்கு, அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது, சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், பிப்., 5 முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment