Wednesday, January 28, 2015

அரசுப் பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு

உடுமலை பகுதியிலுள்ள இரண்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வகுப்பறை மற்றும் ஆய்வகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உடுமலை உடுக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, போதிய வகுப்பறை மற்றும் ஆய்வகம் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பபட்டதில், ஒரு கோடியே 47 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், 5 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம் மற்றும் கழிப்பிடம் கட்ட, நேற்று பூமி பூஜை நடத்தப்பட்டது.
இதேபோல், பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில், 43 லட்ச ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகள், கழிப்பிடம், குடிநீர் குழாய் அமைத்தல் உட்பட பணிகளை மேற்கொள்ளவும் பூமி பூஜை போடப்பட்டது.

No comments:

Post a Comment