Thursday, January 29, 2015

கல்வித்துறை நடவடிக்கைக்கு பட்டதாரிஆசிரியர்கள் எதிர்ப்பு.

பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சிக்காக கல்வித்துறை அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளாவதாக பட்டதாரி ஆசிரியர்கள் கருதுகின்றனர். அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மாணவர்களை 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
           இதற்காக விடுமுறை தினத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், பள்ளி வேலைநாட்களில் காலை 8 முதல் மாலை 6 மணி வரை வகுப்புகளை நடத்தவும் தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்களை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். தேர்ச்சி சதவீதம் குறைந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். இதற்கு பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணதாஸ், செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் பெரும்பாலும் கிராமப்புற மாணவர்களே பயில்கின்றனர். அவர்களை படிப்பதற்கு கட்டாயப்படுத்தும்போது பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர். இந்த சூழ்நிலையில் 100 சதவீத தேர்ச்சி என்பது இயலாத காரியம். கல்வித்துறை உத்தரவால் எங்களுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றனர்.

No comments:

Post a Comment